சென்னை: ஆன்லைன் வேலை தேடும் தளமான கிளாஸ்டோர் பணியாளர்களுக்கு அதிகச் சம்பளம் தரும் டாப் 15 அமெரிக்க நிறுவனங்களைப் பற்றி ஒரு ஆய்வை மேற்கொண்டது. இதற்கான பட்டியலை கிளாஸ்டோர் வெளியிட்டுள்ளது.
இதில் இடம்பெற்றுள்ள நிறுவனங்களைப் பெரும்பாலும் ஐடி மற்றும் கன்சல்டிங் துறையைச் சேர்ந்தவை என்பது குறிப்பிடத்தக்கது. வாங்க அப்படி என்னதான் சம்பளத்தை வாரிக் கொடுக்குராங்கனு பார்ப்போம்.
சம்பளம் மட்டும் தானா??
இப்பட்டியல் நிறுவனங்கள் கொடுக்கும் சம்பளத்தை மட்டும் வைத்து தயார் செய்யபப்படவில்லை. பணியாளரின் சம்பளம், கமிஷன், டிபிஸ், போனஸ் போன்றவற்றையும் சேர்ந்து கணக்கிடப்பட்டவை.
அந்த வகையில் இப்பட்டியலில் முதல் இடத்தைப் பிடித்தது...
சாக்டென் ஆர்பிஸ்
சட்டத்துறையில் செயல்படும் இந்நிறுவனம் தனது பணியாளர்களுக்குச் சராசரியாக 182,000 அமெரிக்க டாலரை சம்பளமாக அளிக்கிறது.
நெட்பிளிக்ஸ்
இந்நிறுவனம் தனது பணியாளர்களுக்குச் சராசரியாக 180,000 அமெரிக்க டாலரை சம்பளமாக அளிக்கிறது.
பூஸ் அண்ட் கம்பெனி
கன்சல்டிங் துறையில் கலக்கி வரும் இந்த அமெரிக்க நிறுவனம் தனது 162,000 டாலரை மொத்த சம்பளமாக அளிக்கிறது.
மெக்கன்சி அண்ட் கம்பெனி
இந்நிறுவனமும் ஒரு கன்சல்டிங் துறையில் செயல்படுபவை தான். மெக்கன்சி அண்ட் கம்பெனி தனது பணியாளர்களுக்கு வருடம் 160,000 டாலர் வரை சராசரி சம்பளமாக அளிக்கிறது.
ஏ.டி.கியர்னே
அமெரிக்காவில் கன்சல்டிங் துறையில் அதிக வருமானம் பெறப்படுவதால், இந்நிறுவனம் தனது பணியாளர்களுக்குச் சம்பளத்தை வாரி அளிக்கின்றனர். ஏ.டி.கியர்னே நிறுவனம் தனது பணியாளர்களுக்கு 160,000 டாலரை சராசரி சம்பளமாக அளிக்கிறது.
சிட்லி அஸ்டீன்
அமெரிக்காவில் சட்டத்துறையில் சிறப்பாகச் செயல்படும் சிட்லி அஸ்டீன் நிறுவனம் தனது பணியாளர்களுக்கு 160,000 சராசரி சம்பளமாக அளிக்கிறது.
பாஸ்டன் கன்சல்டிங் குரூப்
இந்நிறுவனத்தைப் பற்றிப் பல செய்திகளை ஏற்கனவே தமிழ்குட்ரிட்டன்ஸ் தளத்தில் பார்த்துள்ளோம்.
பாஸ்டன் கன்சல்டிங் குரூப் தனது பணியாளர்களுக்கு 158,463 டாலரை சராசரி சம்பளமாக அளிக்கிறது.
மோர்ஜிலா
இன்டர்நெட் பிரவுர்களில் மிகவும் பிரபலமான மோர்ஜிலா நிறுவனத்தின் பணியாளர்களுக்குச் சராசரியாக 147,556 அமெரிக்க டாலரை மொத்த வருமானமாக அளிக்கப்படுகிறது.
குட் டெக்னாலஜி
இந்நிறுவனம் தனது பணியாளர்களுக்கு வருடத்திற்குச் சராசரியாக 147,500 டாலரை சம்பளமாகத் தருகிறது.
அல்டெரா
வன்பொருள் தயாரிப்பு மற்றும் வடிவமைப்பில் முன்னணி நிறுவனமான அல்டெரா நிறுவனம் வருடத்திற்கு 147,200 டாலர் மொத்த சம்பளமாகத் தருகிறது.
விஎம்வேர்
விர்சுவல் மற்றும் கிளவுட் தொழில்நுட்பத்தில் தலைவனாக விளங்கும் விஎம்வேர் நிறுவனம் தனது பணியாளர்களுக்கு 145,000 அமெரிக்க டாலரை சராசரியாகச் சம்பளமாகத் தருகிறது.
கேன்டென்ஸ்
அடுத்தத் தலைமுறை நிறுவனமான கேன்டென்ஸ் நிறுவன பணியாளர்களுக்குச் சராசரி வருமானமாக 145,000 டாலர் அளிக்கப்படுகிறது.
கூகிள்
இண்டநெட் தேடுதல் தளமான கூகிள் நிறுவன பணியாளர்களின் சராசரி மொத்த சம்பளம் 143,500 அமெரிக்க டாலராகும்.
சினாப்சிஸ்
கேன்டென்ஸ் நிறுவனத்தைப் போல அடுத்தத் தலைமுறை நிறுவனமான சினாப்சிஸ் நிறுவனம் தனது பணியாளர்களுக்கு வருடாந்தி மொத்த வருமானமாக 143,000 டாலர் பெறுகின்றனர்.
ட்ரூ கார்
ஆட்டோமொபைல் விலை மற்றும் தகவல் தளமான ட்ரூ கார் நிறுவன பணியாளர்கள் வருடத்திற்குச் சராசரியாக 141,500 டாலர் வரை மொத்த வருமானமாகப் பெறுகின்றனர்.
இதை இந்திய ரூபாய்க்குக் கணக்கிட்டால் மொபைல் எண்களுக்கு இரண்டு இலக்கம் மட்டுமே குறைவாக இருக்கும்.
முதலாளி
ஜட்டி முதல் கார் வரை
பணக்கார நாடுகள்..
தமிழ் குட்ரிட்டன்ஸ் சேவைகள்
தங்கம் விலை | வெள்ளி விலை |வங்கி விடுமுறை நாட்கள் |டாலர்-ரூபாய் மதிப்புகள் | பங்குச்சந்தை நிலை | வங்கி IFSC குறியீடு
சமுக வலைத்தள இணைப்புகள்
இனி உங்கள் தமிழ் குட்ரிட்டன்ஸ் தளத்தைப் பேஸ்புக், கூகுள் பிளஸ் மற்றும் டிவிட்டர் பக்கங்களின் மூலமும் இணைந்திடலாம்.
கிளிக் பண்ணுங்க.. ஷேர் பண்ணுங்க..


Click it and Unblock the Notifications