மும்பை: ஐரோப்பிய மற்றும் கிரீஸ் வீழ்ச்சியில் இருந்து இந்திய சந்தை தப்பிய மகிழ்ச்சியில் உள்ள போது, சீனாவின் வீழ்ச்சி இந்தியாவை இன்று கடுமையாகப் பாதித்துள்ளது.
இன்றைய வர்த்தகத்தில் சீன பங்குச்சந்தை சுமார் 8.48 சதவீத சரிவை சந்தித்தது 8 ஆண்டுகளில் இல்லாத சரிவைப் பதிவு செய்துள்ளது. இதன் காரணமாக இந்திய சந்தையில் சென்செக்ஸ் குறியீடு சுமார் 550 புள்ளிகள் வரை சரிந்துள்ளது.
சீன பொருளாதாரம்
வாரத்தின் முதல் வர்த்தக நாளான இன்று சீனாவின் பொருளாதார வீழ்ச்சி, இந்நாட்டுச் சந்தையை அதிகளவில் பாதித்து வருகிறது.
இன்றைய வர்த்தகச் சரிவிற்கு மூன்று முக்கியக் காரணங்களைச் சந்தை முதலீட்டாளர்கள் முன்வைக்கின்றனர்.
3 காரணங்கள்
1. சீன தொழிற்துறை உற்பத்தியின் லாபம் அதிகளவில் குறைந்து
2. முக்கியத் துறைகளில் அரசின் நிதியுதவிகளைக் குறைந்து வருகிறது. இதனால் விலைவாசி தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
3. மேலும் பிஎம்ஐ குறியீடு 48.1 ஆகக் குறைந்துள்ளது.
சீன பங்குச்சந்தை
இக்காரணங்களால் சீன பங்குச்சந்தை இன்று 8.48 சதவீதம் வரை சரிந்து இந்திய சந்தையைப் பதம்பார்த்தது.
மும்பை பங்குச்சந்தை
பொதுவாகச் சீன சந்தை பாதிப்படைந்தால் இந்திய சந்தையில் எதிரொலிக்கும். இந்நிலையில் காலை வர்த்தகத் துவக்கம் முதலே பி-நோட்ஸ் குறித்த மத்திய அரசின் முடிவுகள் சந்தையைப் பாதிப்படையத் துவங்கியது.
அதன் பின் சீன சந்தையில் வீழ்ச்சி காரணமாக மும்பை பங்குச் சந்தை தொடர் சரிவை சந்தித்தது. இன்றைய வர்த்தக முடிவில் சென்செக்ஸ் குறியீடு 550 புள்ளிகள் சரிந்தது.
சென்செக்ஸ்
இன்றைய வர்த்தகச் சென்செக்ஸ் குறியீடு 550.93 புள்ளிகள் வரை சரிந்து 27,561.38 புள்ளிகளை அடைந்தது. இதனால் மும்பை பங்குச் சந்தையில் முன்னணி நிறுவனங்கள் அனைத்தும் பாதிக்கப்பட்டது.
நிஃப்டி
சென்செக்ஸ் குறியீட்டை போலவே நிஃப்டி குறீயிடும் இன்று 160.55 புள்ளிகள் வரை சரிய துவங்கியது.
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!



Click it and Unblock the Notifications