ஹைதரபாத்: தெலுங்கானா மாநிலத்தின் நார்சாபூர் கிரமத்தில் உள்ள தனியார் நிறுவன ஏடிஎம் ஒன்றின் முன்பு திடீரென மக்கள் கூட்டம் அலைமோதியது.
சனிக்கிழமை காலையில் ஒருவர், நார்சாபூர் கிராமத்தில் உள்ள ஒரு இன்டிகேஷ் ஏடிஎம்-யில் பணம் எடுத்துள்ளார், அதில் 100 ரூபாய்க்குப் பதிலாக 500 ரூபாய் கிடைத்துள்ளது. இச்செய்தி கிராமம் முழுவதும் நொடிப் பொழுதில் பரவியது.

மற்றொரு சிறப்பாக, இப்பரிவர்த்தனையில் 500 கிடைத்தாலும், வங்கிக்கணக்கில் இருந்தது 100 ரூபாய் மட்டுமே குறைந்ததுள்ளது.
இதனால் ஏடிஎம் இயத்திரத்தின் முன் மக்கள் கூட்டம் திடீரெனக் கூடியதால் போலீசார் மூலம் மக்கள் கூட்டத்தைக் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டு, இண்டிகேஷ் நிறுவனத்திற்குத் தகவல் அளிக்கப்பட்டு இயந்திரத்தைச் செயல் இழக்க வைத்தது காவல் துறை.

இது தனியார் நிறுவன ஏடிஎம் என்பதால் இந்தச் செய்தி அதிகளவில் வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ரிசர்வ் வங்கி சில நாட்களுக்கு முன்பு வெயிட் லேபிள் ஏடிஎம்களை அமைக்க இந்தியாவில் சில நிறுவனங்களுக்கு ஒப்புதல் அளித்தது. அதில் டாடா குழும நிறுவனமும் அடக்கம்.

டாடா குழுமத்தின் இன்டிகேஷ் ஏடிஎம் இயந்திரத்திலேயே இத்தகைய செயல் நடந்துள்ளது. இந்த ஆந்திரா மற்றும் தெலுங்கான செய்தி சேனல்களிலும் ஒளிபரப்புச் செய்யப்பட்டது.


Click it and Unblock the Notifications