இனி இந்தியாவிலும் வொயிட் லேபிள் ஏடிஎம் திறக்கப்படும்!! ஆர்பிஐ..

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மும்பை: நீண்ட நாட்களாக கிடப்பில் போடப்பட்ட வொயிட் லேபிள் ஏடிஎம்களை இந்தியாவில் திறக்க ஆர்பிஐ அனுமதி அளித்துள்ளது. டாடா கம்யூனிகேஷன் பேமென்ட் சொல்யூஷன் மற்றும் முத்தூட் பினான்ஸ் உள்ளிட்ட நான்கு வங்கி அல்லாத நிறுவனங்களுக்கு, வொயிட் லேபிள் ஏடிஎம்களை அமைக்க ரிசர்வ் வங்கி அங்கீகார சான்றிதழ் வழங்கியுள்ளது.

 

வொயிட் லேபிள் ஏடிஎம்கள் அமைக்கவும் செயல்படுத்தவும் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ள மற்ற இரண்டு நிறுவனங்கள் ப்ரிசிம் பேமென்ட் சர்வீசஸ், மற்றும் வக்ரான்கீ லிமிடெட் ஆகியன ஆகும்.

டாடா, முத்தூட், ப்ரிசிம் நிறுவனங்கள் தங்கள் சேவையை ஏற்கனவே தொடங்கிவிட்ட நிலையில் வக்கிரன்கீ நிறுவனமும் விரைவில் தனது சேவையை தொடங்கும் என்று மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

வொயிட் லேபிள் ஏடிஎம்

வொயிட் லேபிள் ஏடிஎம்

நாட்டில் உள்ள பெரும்பாலான ஏடிஎம்-கள் வங்கிகளை சார்ந்தவை. ஆனால் பணம் வழங்கும் இயந்திரத்தையும் (ஏடிஎம்) மற்றும் அதன் செயல்பாட்டையும் தன் வசம் கொண்டுள்ள நிறுவனங்கள் வொயிட் லேபிள் ஏடிஎம் என்று அழைக்கப்படுகின்றன. ஆனால் பண பரிவர்த்தனைக்கான கமிஷன் தொகையை இந்நிறுவனம் பெற்றுக்கொள்ளும்.

2012ஆம் ஆண்டில் அனுமதி

2012ஆம் ஆண்டில் அனுமதி

ஜூன் 2012-ல் வங்கி அல்லாத நிறுவனங்களுக்கு வொயிட் லேபிள் ஏடிஎம்கள் அமைக்கவும் செயல்படுத்தவும் ஆர்பிஐ அனுமதி அளித்து கொள்கை வழிகாட்டுதல்களை வெளியிட்டது. அதற்கு முன்பு வரை ஏடிஎம் மையங்கள் அமைக்க வங்கிகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டு வந்தது.

கிராம புறம்
 

கிராம புறம்

வங்கி அல்லாத நிறுவங்களுக்கு வொயிட் லேபிள் ஏடிஎம் அமைக்க அனுமதி அளித்ததன் முக்கிய நோக்கம் வங்கிகளுக்கு சொந்தமான ஏடிஎம் சேவைகள் வளர்ச்சி அடையாத கிராம புற மற்றும் நகர் புற பகுதிகளில் ஏடிஎம்களை பரவ செய்வதன் முயற்சியே என ஆர்பிஐ தெரிவித்தது.

தெருவுக்கு ஒரு ஏடிஎம்..

தெருவுக்கு ஒரு ஏடிஎம்..

புதிய வழிகாட்டுதல்களின் படி, ஆபரேட்டர்கள் தேர்ந்தெடுத்துள்ள திட்டத்தின் கீழ் ஒரு வருடத்திற்குள், குறிப்பிட்ட குறைந்தபட்ச எண்ணிக்கையிலான வொயிட் லேபிள் ஏடிஎம்கள் நிறுவப்பட்டிருக்க வேண்டும்

முழு விவரம்!!

முழு விவரம்!!

இத்தகைய வெயிட் லேபிள் ஏடிஎம் கனடாவில் மிகவும் பிரபலம். வெயிட் லேபிள் ஏடிஎம் பற்றிய முழு விவரங்களையும் நாளை பார்க்கலாம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

RBI issues certificates to 4 non-bank entities to set up White Lable ATMs

The Reserve Bank of India said it has issued 'certificate of authorisation' to four non-bank entities, including Tata Communications Payment Solutions and Muthoot Finance, to set up White Lable ATMs (WLAs) in the country.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X