டெல்லி: இந்தியாவில் காசோலை மோசடி வழக்குகளின் எண்ணிக்கை பல லட்சமாக உயர்ந்துள்ள நிலையில் இப்பிரச்சனைகளை களையவும், எதிர்வரும் வழக்குகளையும் எளிமையாகக் கையாளவும் மத்திய அரசு காசோலை மோசடி அவசர சட்ட மசோதாவை இரண்டாவது முறையாகப் பிறப்பிக்கப்பட்டு நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.
இதன் படி தனிநபர் அல்லது நிறுவனங்கள் பணப் பரிமாற்றத்திற்காகக் காசோலை சமர்ப்பிக்கும் இடத்திலேயே வழக்கைப் பதிவு செய்துகொள்ளலாம்.
வழக்கு..
உதாரணமாக விக்னேஷ் என்பவர் சேலம் வங்கியில் தனது கணக்கை வைத்துக்கொண்டு சென்னையில் உள்ள நிறுவனத்திற்குக் காசோலை அனுப்பியுள்ளார் என வைத்துக்கொள்ளுங்கள். இந்நிலையில் நிறுவனம், வங்கியில் சமர்ப்பிக்கும்போது விக்னேஷ் கணக்கில் பணம் இல்லை என்றால் நிறுவனம் விக்னேஷ் மீது சென்னையிலேயே வழக்குத் தொடரலாம்.
மறுப்பு..
இந்த மசோதாவைக் கடந்த மே மாதத்திலேயே நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட போது ராஜ்ய சபா இதற்கு ஒப்புதல் அளிக்கவில்லை. தற்போது இரு அவைகளும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் காசோலை வழங்கிய பகுதியில் வழக்குத் தொடர்வதற்குப் பதிலாக அதைப் பெறும் பகுதியில் வழக்கு தொடர வழியேற்பட்டுள்ளது.
பிரணாப் முகர்ஜி
கடந்த மூன்று மாதங்களில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி பிறப்பிக்கும் 2-வது அவசர சட்டம் இதுவாகும். மாற்றுமுறை ஆவணச் சட்டம் 2015-ன் கீழ் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
18 லட்சம் வழக்குகள்
நாட்டில் காசோலை மோசடி வழக்கு தொடர்பாகச் சுமார் 18 லட்சம் வழக்குகள் நிலுவையில் உள்ளது.
பிரச்சனைகளுக்குத் தீர்வு...
இதனால் நாட்டின் ஒரு பகுதியில் இருந்து மற்றொரு பகுதிக்குப் பயணம் செய்ய வேண்டியுள்ளது. நேர விரயம், பண விரயம் ஆகிய இரண்டையும் தவிர் கும் வகையில் இந்த அவசர சட்டம் அமைந்துள்ளது.
IFSC மற்றும் MICR குறியீடு
வங்கி IFSC மற்றும் MICR குறியீடுகளை தேடுவதில் குழப்பமா?? கவலை வேண்டும் இதை மட்டும் கிளிக் பண்ணுங்கள்
காசோலை பண பரிமாற்றம்..
உஷார் ஐயா உஷாரு..
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!

ஈரான் - அமெரிக்கா போர்.. நடுவில் சிக்கிக்கொண்டு தவிக்கும் ஜப்பான்.. பெரும் சீரழிவின் ஆரம்ப புள்ளி இதுதானா..?



Click it and Unblock the Notifications