2016ல் நடந்தது இப்பவும் நடக்குமா.. தங்கம் விலை மீண்டும் அதே போல இருக்குமா?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அமெரிக்காவின் தேர்தல் முடிவுகள் வெளியாகி வரும் நிலையில், இது மிகவும் பரப்பரப்பான நிகழ்வாக இருந்து வருகின்றது. ஏனெனில் அது அமெரிக்காவுக்கு மட்டும் அல்ல, அடுத்த நான்கு ஆண்டுகளுக்கும் என்ன நடக்கும் என்பதை தீர்மானிக்க கூடிய அதிபர் தேர்தல் இது. இதனால் தான் இந்தியா தொடங்கி மற்ற உலக நாடுகளும் உன்னிப்பாக கவனித்து வருகின்றன.

ஆக இன்னும் சில மணி நேரங்களில் தெரிந்துவிடும் யார் அந்த அதிபர் பதவியை வெல்லப்போவது என்று.

இப்படி பரப்பரப்பாக நிலவி வந்த நிச்சயமற்ற இந்த சூழலில், முதலீட்டாளார்கள் தங்களது பெரும் முதலீடுகளை தவிர்த்து வருகின்றனர். இதனாலேயே தங்கத்தின் விலையானது பெரியளவில் மாற்றம் காணாமல், அவுன்ஸூக்கு 1900 டாலர்களுக்கு அருகிலேயே கடந்த சில தினங்களாகவே காணப்பட்டது.

தங்கம் விலை நல்ல ஏற்றம்

தங்கம் விலை நல்ல ஏற்றம்

கடந்த 2016ம் ஆண்டில் தேர்தல் நாளில் தங்கம் விலையானது நல்ல ஏற்றம் கண்டது. ஆக இது போலவே இந்த ஆண்டும் இருக்குமா என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் ஏற்கனவே தங்கத்திற்கு ஆதரவாக பல செய்திகள் இருந்து வரும் நிலையில், இன்று வெளியாகவிருக்கும் முடிவுகள் மேலும் தங்கத்திற்கு ஆதரவாக அமையுமா? கடந்த 2016ம் ஆண்டில் தேர்தல் முடிவுகள் வெளியான அன்று, காலையில் இருந்து சற்று சரிவினை கண்டு வந்த நிலையில், இரவில் தங்கம் விலையானது ஏற்றம் கண்டதை நினைப்படுத்தியுள்ளது.

2016 நவம்பரில் தங்கம் விலை கவனிக்க தக்க விஷயம்

2016 நவம்பரில் தங்கம் விலை கவனிக்க தக்க விஷயம்

தற்போது அரசியலில் நிலவி வரும் இந்த நிச்சயமற்ற நிலையில், முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி தங்கத்தில் தங்களது முதலீடுகளை செய்து வருகின்றனர். பல முதலீட்டாளர்கள் தங்கம் விலையானது நேர்மறையாக இருக்க விரும்புகின்றனர். ஆனால் கடந்த 2016ல் நடந்ததை அவர்களால் மறக்க முடியாது என நான் நினைகிறேன் என்று லாசாலே பியூச்சர்ஸ் குழுமத்தின் மூத்த தலைவர் நெடோஸ் சமீபத்தில் கூறியுள்ளார்.

என்ன காரணம்?

என்ன காரணம்?

பல முதலீட்டாளர்கள் தேர்தலில் யார் வெல்வார்கள் என்று காத்திருக்கிறார்கள். 2016ம் ஆண்டு நவம்பர் 8 அன்று காலை தொடக்கத்தில்
இருந்தே சற்று சரிவினைக் கண்டு வந்த தங்கம் விலை, இரவில் அதனை விட பல மடங்கு அதிகரித்துள்ளது. ஏனெனில் பல ஆய்வாளர்களும் டிரம்பின் வெற்றி, சந்தையில் மற்றும் அரசியலில் நிச்சயமற்ற தன்மையை உருவாக்கும் என்று எதிர்பார்த்தனர். இதனால் பங்கு சந்தைகளில் முதலீடுகளை முதலீட்டாளர்கள் விற்றனர். இதற்கு மாற்றாக பாதுகாப்பு புகலிடத்தில் முதலீடு செய்தனர். இதனால் தங்கம் அப்போது பெரும் ஏற்றம் கண்டது.

 

 

விலை தொடரவில்லை

விலை தொடரவில்லை

ஆனால் தங்கம் விலை தொடர்ச்சியாக அப்படி ஏற்றம் காணவில்லை. ஏனெனில் டிரம்பின் உரையால் முதலீட்டாளர்களின் நடவடிக்கை மாறியது. இது சந்தையில் குறிப்பிடத்தக்க மாற்றத்தினை ஏற்படுத்தியது. பலரும் பங்குகளை திரட்ட ஆரம்பித்தனர். பல முதலீட்டாளர்கள் குறைந்த வட்டி விகிதம் பங்கு சந்தைக்கு ஆதரவாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கத் தொடங்கினர்.

வெற்றிக்கு பிறகு வீழ்ச்சி

வெற்றிக்கு பிறகு வீழ்ச்சி

ஆக 2018, நவம்பர் 8, செவ்வாய்கிழமையன்று ஏற்றத்தினை கண்ட தங்கம் விலையானது, புதன் கிழமையன்று மீண்டும் சரிய தொடங்கியது. வெற்றி பெற்ற சில மணி நேரங்களுக்கு பின்னர் தங்கம் விலையானது 10% கீழாக சரிந்தது. அது அந்த வருடம் முடியும் வரையில் கூட பெரியளவில் மாற்றம் காணவில்லை. முதலீட்டாளர்கள் அதனையும் நினைவில் கொண்டு வர்த்தகம் செய்வது நல்லது.

2016 Vs 2020

2016 Vs 2020

பல ஆய்வாளர்கள் 2016ம் ஆண்டு தேர்தலுக்கும், 2020 தேர்தலுக்கும் இடையே நிறைய ஒற்றுமைகள் உள்ளன. அப்போதைய ஜனநாயக கட்சியின் வேட்பாளர் ஹிலாரி கிளிண்டன் அடுத்த ஜனாதிபதியாக வருவார் என பலரும் கணித்தனர், எனினும் பல ஆய்வாளார்கள் டிரம்பின் வெற்றியை நிராக்கரிக்கவில்லை.

தங்கத்திற்கு ஆதாரவாக இருக்க வாய்ப்புண்டு

தங்கத்திற்கு ஆதாரவாக இருக்க வாய்ப்புண்டு

ஆனால் கருத்து கணிப்புகளின் படி பிடன் வெற்றி பெறலாம் என்று தோன்றுகிறது. எனினும் எப்போது என்ன நடக்கும் என்று தெரியாது என காமர்ஸ் வங்கியின் ஆய்வாளர் டேனியல் ப்ரைமேன் கூறியுள்ளார். ஆனால் இது நிச்சயமற்ற நிலை, ஆக இது தங்கத்திற்கு ஆதரவாக இருக்க வாய்ப்புகள் உண்டு. எப்படி இருந்தாலும் 2020ம் ஆண்டு 2016ம் ஆண்டை விட வேறுபட்டுள்ளது. கொரோனா மக்களை ஆட்டிப்படைத்துள்ளது. பொருளாதார பேரழிவிற்கு வழிவகுத்துள்ளது. லட்சக்கணக்கானோரை பலி வாங்கியுள்ளது.

யார் ஆட்சிக்கு வந்தால் என்ன? இது தான் முக்கியம்

யார் ஆட்சிக்கு வந்தால் என்ன? இது தான் முக்கியம்

ஆக யார் ஆட்சிக்கு வந்தாலும், பொருளாதாரத்தினை மீட்டெடுக்க அரசின் ஊக்கத் தொகை பெரியளவில் இருக்க வேண்டும். யார் வந்தாலும் சரி, வைரஸ் தொடர்ந்து பரவி வருகிறது. அரசாங்கம் இந்த நெருக்கடியான நேரத்திலும் பொருளாதாரத்தினை மேம்படுத்த வழிவகுக்க வேண்டும். ஆக இது சாதாரணமான ஒரு தேர்தல் அல்ல, ஆக இந்த வலுவான அடிப்படைகள் மாற்றப்பட வேண்டும். இது தான் தங்கம் விலையில் பெரும் மாற்றத்தினை கொண்டு வரும் என்றும் சாக்சோ வங்கியின் கமாடிட்டி நிபுணர்கள் கூறியுள்ளார்.

தற்போதைய விலை நிலவரம்?

தற்போதைய விலை நிலவரம்?

உண்மையில் யார் ஜெயித்தால் என்ன? அடுத்து என்ன நடக்க போகிறது என்பதை பொருத்து தான் பொருளாதாரம் மேம்படும். இதனை பொறுத்து தான் சந்தைகள் இருக்கும். அது வரையில் தங்கம் விலையானது பாதுகாப்பு புகலிடமாகவே இருக்கலாம் என்று நிபுணர்கள் கணித்துள்ளனர். தற்போதைய நிலவரப்படி சர்வதேச தங்கம் விலையானது தற்போது 19.10 டாலர்கள் குறைந்து, 1891.30 டாலர்களாக வர்த்தகமாகி வருகின்றது.

எம்சிஎக்ஸ் தங்கம் விலை

எம்சிஎக்ஸ் தங்கம் விலை

இதே இந்திய கமாடிட்டி வர்த்தகத்திலும் தங்கம் விலையானது, 10 கிராமுக்கு 470 ரூபாய் குறைந்து, 51,120 ரூபாயாக வீழ்ச்சி கண்டு வர்த்தகமாகி வருகின்றது. தங்கத்தின் நேற்றைய முடிவு விலையானது 51,598 ரூபாயாக முடிவுற்ற நிலையில், இன்று தொடக்கத்தில் 51,320 ரூபாயாக தொடங்கியது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

2016 election gold price impact, can it happen again?

Gold prices given shocker election in 2016
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X