புண்பட்ட நெஞ்சை இனி புகை விட்டுக்கூட ஆற்ற முடியாது..

டெல்லி: 2016-17ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் அறிக்கையில், பீடி-யை தவிரப் பிற அனைத்துப் புகையிலை பொருட்களின் மீதான கலால் வரியை 10-15 சதலீதம் வரை உயர்த்தப்பட உள்ளதாக நிதியமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார்.

எனவே அடுத்தச் சில மாதங்களில் சிகரெட், புகையிலை பொருட்களின் விலை உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் புண்பட்ட நெஞ்சை இனி புகை விட்டுக்கூட ஆற்ற முடியாதா நிலையில் மக்கள் உள்ளனர்.

ரயில்வே பட்ஜெட் 2016 | மத்திய பட்ஜெட் 2016

5 வருடங்கள்

5 வருடங்கள்

நாட்டில் புகைபிடிக்கும் பழக்கத்தைக் குறைக்க மத்திய அரசு கடந்த 5 வருடங்களாகத் தொடர்ந்து புகையிலை பொருட்களின் மீதான பல்வேறு வரியை உயர்த்தி வருகிறது.

நிறுவனங்கள்

நிறுவனங்கள்

மத்திய அரசின் இந்த அறிவிப்பு வெளியான சில நிமிடங்களில் ஐடிசி, Godfrey Philips போன்ற முன்னணி நிறுவனங்கள் அதிகளவிலான சரிவை எட்டியது.

 

வாடிக்கையாளர்கள்

வாடிக்கையாளர்கள்

மத்திய அரசின் கலால் வரி அதிகரிப்பை ஏற்று நிறுவனங்கள் தங்களது வருமானத்தைக் குறைக்காமல் வாடிக்கையாளர்கள் மீது சுமையை ஏற்றினால், அவர்கள் பீடி மற்றும் பிற புகையிலை பொருட்களை நாடிச் செல்லும் சூழ்நிலையும் உருவாகும்.

இதனால் நிறுவனங்கள் மிகப்பெரிய அளவிலான வாடிக்கையாளர்கள் எண்ணிக்கையை இழக்கும்.

 

லாபத்தை அடைந்த நிறுவனங்கள்

லாபத்தை அடைந்த நிறுவனங்கள்

இதனால் சிகரெட் உற்பத்தி நிறுவனங்கள் விலையை உயர்த்தாது எனவும் கருத்து நிலவி வருகிறது. இதன் எதிரொலியாக மும்பை பங்குச்சந்தையில் சரிவைத் தழுவிய அனைத்துப் புகையிலை சார்ந்த நிறுவனங்களும் லாபத்தை எட்டியுள்ளது.

விலை உயர்வு பற்றித் தகவல்கள் அடுத்தச் சில வாரங்களில் எதிர்பார்க்கப்படுகிறது.

 

15-25 சதவீத வரி

15-25 சதவீத வரி

2015-16ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் அறிக்கையில் சிகரெட் மற்றும் சிகார் பொருட்கள் மீது 15-25 சதவீதம் வரையிலான வரி உயர்த்தப்பட்டது.

இந்திய புகையிலை சந்தை

இந்திய புகையிலை சந்தை

கடந்த நிதியாண்டில் மட்டும் இந்தியாவில் இருந்து 918.9 மில்லியன் டாலர் மதிப்பிலான புகையிலை பொருட்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யதுள்ளது. 2007-08ஆம் ஆண்டில் இதன் அளவு வெறும் 502.2 பில்லியன் டாலர் தான்.

ஏற்றுமதி

ஏற்றுமதி

புகையிலை ஏற்றுமதியில் பிரேசில், அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக இந்தியா உள்ளது. மேலும் கடந்த சில வருடங்களாக இந்தியாவில் இதன் மீதான வரி அளவுகள் உயர்ந்தாலும் வர்த்தகமும் விற்பனையும் நிலையாக உள்ளது.

மேலும் இந்தியாவில் இருந்து உலகில் 100 நாடுகளுக்கும் அதிகமாக ஏற்றுமதி செய்யப்படுகிறது.

 

பெண்கள்

பெண்கள்

சமீபத்திய ஆய்வில் இந்தியாவில் ஆண்களுக்கு நிகரான வேகத்தில் புகைபிடிக்கும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக ஒரு ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.

அதிலும் உலகிலேயே புகைபிடிக்கும் பெண்கள் அதிக எண்ணிக்கையைக் கொண்ட அமெரிக்க நாட்டுடன் இந்திய பெண்கள் போட்டிப் போடுவது வருந்தத்தக்கச் செய்தியாகும்.

நிறுவனங்கள் வர்த்தக நிலை

நிறுவனங்கள் வர்த்தக நிலை

ஐடிசி, Godfrey Philips, விஎஸ்டி இண்டர்ஸ்ட்ரீஸ், கோல்டன் டோபேக்கோ நிறுவனங்களின் முழுமையான வர்த்தக நிலையை அறிய நிறுவனங்களின் பெயரை கிளிக் செய்யவும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் சேவைகள்

தமிழ் குட்ரிட்டன்ஸ் சேவைகள்

தங்கம் விலை | வெள்ளி விலை |வங்கி விடுமுறை நாட்கள் | டாலர்-ரூபாய் மதிப்புகள் | பங்குச்சந்தை நிலை | வங்கி IFSC குறியீடு

சமுக வலைத்தள இணைப்புகள்

சமுக வலைத்தள இணைப்புகள்

இனி உங்கள் தமிழ் குட்ரிட்டன்ஸ் தளத்தைப் பேஸ்புக், கூகுள் பிளஸ் மற்றும் டிவிட்டர் பக்கங்களின் மூலமும் இணைந்திடலாம்.

கிளிக் பண்ணுங்க.. ஷேர் பண்ணுங்க..

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+