டெல்லி: 2016-17ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் அறிக்கையில் தூய்மை இந்தியா திட்டத்திற்காக நிதி சேர்க்கும் விதமாக நிலக்கரி பயன்பாட்டிற்கு வரி இரண்டு மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது.
ஒரு டன் நிலக்கரிக்கு 200 ரூபாயாக இருந்த தூய்மை இந்தியா வரி (clean-energy cess) தற்போது இரண்டு மடங்கு உயர்ந்து 400 ரூபாயாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ரயில்வே பட்ஜெட் 2016 | மத்திய பட்ஜெட் 2016

இந்தியாவில் நிலவும் பருவநிலை மாற்றத்தைக் குறிக்கும் வகையிலும், நாட்டின் இயற்கை தாதுப்பொருட்களைக் குறைவாகப் பயன்படுத்த வலியுறுத்தும் வகையிலும் இத்தகைய வரி விதிப்புகளை மத்திய அரசு விதித்து வருகிறது.

நிதியமைச்சர் அருண் ஜேட்லியின் இத்தகைய அறிவிப்பால் நிலக்கரி மற்றும் லிக்னைட் பொருட்களின் விலை உயரும். இதனால் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தின் விலையும் உயரும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால் அடுத்தச் சில மாதங்களில் இந்தியாவில் மின் கட்டணம் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தங்கம் விலை | வெள்ளி விலை |வங்கி விடுமுறை நாட்கள்
டாலர்-ரூபாய் மதிப்புகள் | பங்குச்சந்தை நிலை | வங்கி IFSC குறியீடு


Click it and Unblock the Notifications