டெல்லி: 2016-17ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் அறிக்கையில் நிதியமைச்சர் அருண் ஜேட்லி மாத சம்பளக்காரர்கள் மகிழ்ச்சி பெறும் வகையில், சில முக்கிய வரிச் சலுகையை அறிவித்துள்ளார்.
ரயில்வே பட்ஜெட் 2016 | மத்திய பட்ஜெட் 2016
ரூ.5,000 வரித் திரும்புதல்
5 லட்ச ரூபாய் வரையிலான வருமானம் பெறும் மக்கள் தங்களது வரிப் பணத்தில் கூடுதலாக 3,000 ரூபாய் தொகையை வருமான வரித்துறை திரும்பச் செலுத்துகிறது. இதற்கு முன் திரும்பச் செலுத்தும் அளவு 2,000 ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
இப்புதிய அறிவிப்பால் நாட்டில் 1 கோடிக்கும் அதிகமான வரி செலுத்துவோர் பலன் அடைவார்கள்.
வீட்டு வாடகை கொடுப்பனவு
அதேபோல் வீட்டு வாடகை கொடுப்பனவு இல்லாத மாத சம்பளக்காரர்களுக்கு 24,000 ரூபாய் வரையிலான வருமானத்திற்கு வரிச் சலுகை அளிக்கப்படுகிறது.
60,000 ரூபாயாக உயர்வு
மேலும் மாத சம்பளக்காரர்களின் பெறும் வீட்டு வாடகை கொடுப்பனவு அளவு தற்போது 24,000 ரூபாயில் இருந்து 60,000 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
என்பிஎஸ் திட்டம்
தேசிய ஓய்வூதிய திட்டத்தில் முதலீட்டுச் செய்ய வரும்புவோர், இனி ஓய்வுபெறும் காலத்தில் தங்களது முதலீட்டில் 40 சதவீத தொகையை வரி இல்லாமல் பெற்றுக்கொள்ளலாம்.
பிஎஃப்
மாதம் ரூ.15 ஆயிரத்துக்கும் குறைவாக மாத சம்பளம் பெறும் ஊழியர்களுக்கான வருங்கால வைப்பு நிதியை (பி.எப்) முதல் 3 வருடங்களுக்கு அரசே செலுத்தும் என்று மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி 2016-17ம் நிதியாண்டுக்கான பட்ஜெட் உரையில் தெரிவித்தார்.
இந்தத் திட்டத்திற்காக ரூ.1000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
வீட்டுக் கடன்
முதல் முறையாக வீட்டுக் கடன் வாங்குவோர்க்கு, தங்களது கடன் திட்டம் 50 இலட்சம் ரூபாய்க்குக் குறைவாக இருந்தால், வட்டித் தொகையில் 50,000 ரூபாய் வரையிலான சலுகையை மத்திய அரசு அறிவித்துள்ளது.
கார்
மத்திய அரசு கார் விற்பனையின் மீதான வரியை அதிகரித்துள்ளது, இதனால் கார் வாங்கத் திட்டமிட்டு மக்களின் பர்ஸை ஒட்டையாக வாய்ப்பு உண்டு.
2016-17ஆம் ஆண்டில் சிறு, பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி கார்களுக்கு 1% வரி, டீசல் கார்களுக்கு 2.5 சதவீதம் வரி, எஸ்யூவி மற்றும் இதர உயர் தர கார்களுக்கு 4 சதவீத எனப் புதிய வரி விதிப்பை அறிவித்துள்ளது.
பங்குகள்
பங்கு முதலீட்டின் மூலம் டிவிடென்ட் தொகையாக 10 லட்சம் ரூபாய்க்கும் அதிகமாக இருந்தால் தற்போது தனிநபர் வருமான வரிச் சட்டம் அமலாக்கம் செய்யப்படும்.
எஸ்எஸ்டி
2016-17ஆம் நிதியாண்டில் எஸ்எஸ்டி வரி (securities transaction tax) அளவு 0.017% இருந்து 0.05 சதவீதமாக உயர்ந்துள்ளது.
குட்ரிட்டன்ஸ் சேவைகள்
தங்கம் விலை | வெள்ளி விலை |வங்கி விடுமுறை நாட்கள் | டாலர்-ரூபாய் மதிப்புகள் | பங்குச்சந்தை நிலை | வங்கி IFSC குறியீடு
சமுக வலைத்தள இணைப்புகள்
இனி உங்கள் தமிழ் குட்ரிட்டன்ஸ் தளத்தைப் பேஸ்புக், கூகுள் பிளஸ் மற்றும் டிவிட்டர் பக்கங்களின் மூலமும் இணைந்திடலாம்.
கிளிக் பண்ணுங்க.. ஷேர் பண்ணுங்க..
More From GoodReturns

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்



Click it and Unblock the Notifications