பெங்களூரு: இந்தியாவின் மிகப்பெரிய ஈகாமர்ஸ் நிறுவனமாகத் திகழும் பிளிப்கார்ட் துவக்கத்தில் இருந்த அதீத முதலீடு, மிகக் குறைவான நேரத்தில் அதிகளவிலான வாடிக்கையாளர்கள் எனச் சந்தையை ஆச்சரியப்படுத்தி வந்தது. இதனால் இந்திய சந்தையில் இந்நிறுவனம் தாறுமாறாக மதிப்பிடப்பட்டது.
ரயில்வே பட்ஜெட் 2016 | மத்திய பட்ஜெட் 2016
ஆனால் கடந்த சில மாதங்களாக ஈகாமர்ஸ் சந்தை மற்றும் இணையதளச் சேவை நிறுவனங்களின் தாக்கம் மக்கள் மத்தியில் குறைந்து காணப்படுகிறது. இதன் காரணமாக இத்துறை சார்ந்த நிறுவனங்கள் வர்த்தகத்திலும், வருவாயிலும் மிகப்பெரிய சரிவை சந்தித்து வருகிறது.
பிளிப்கார்ட்
கடந்த நிதியாண்டில் மிகப்பெரிய நஷ்டத்தைச் சந்தித்த பிளிப்கார்ட் 2015ஆம் ஆண்டில் நிலையான வர்த்தகத்தைப் பெற்றாலும் செலவினங்களின் அளவுகள் அதிகமாக இருந்தது.
இதன் காரணமாக இந்நிறுவனத்தின் வர்த்தக மற்றும் வருவாய் அளவுகளை ஆய்வு செய்து, மியூச்சுவல் ஃபண்ட் மேலாண்மை நிறுவனமான மோர்கன் ஸ்டான்லி பிளிப்கார்ட் நிறுவனங்கள் பங்குகள் மதிப்பை 27 சதவீதம் குறைத்தது.
15.2 பில்லியன் டாலர்
சமீபத்தில் பிளிப்கார்ட் தனது நிறுவனத்தின் மதிப்பு 15.2 பில்லியன் டாலராக உள்ளது எனப் பெருமைப்படும் அளவில் அறிவிப்பை வெளியிட்டது.
தற்போது மோர்கன் ஸ்டான்லி நிறுவனத்தின் மதிப்பீடு குறைவின் படி பிளிப்கார்ட் வெறும் 11 பில்லியன் டாலருக்கு மதிப்பிடப்படுவது குறிப்பிடத்தக்கது.
மோர்கன் ஸ்டான்லி
கடந்த 2013ஆம் ஆண்டு மோர்கன் ஸ்டான்லி பிளிப்கார்ட் நிறுவனத்தில் 360 மில்லியன் டாலர் முதலீடு செய்து இந்நிறுவனத்தின் 2 சதவீத அளவிலான பங்குகளைக் கைப்பற்றியது.
தற்போது இதன் மதிப்பை 27 சதவீதம் குறைத்துள்ளதால் அடுத்தச் சில மாதங்களின் இந்நிறுவனப் பங்குகளை விற்பனை செய்வும் வாய்ப்புள்ளது.
நிதித்திரட்டும் திட்டம்
பிளிப்கார்ட் நிறுவனம் தற்போது தனது ஆஸ்தான முதலீட்டு நிறுவனங்களின் மூலம் 1.4 பில்லியன் டாலர் அளவிலான நிதிதிரட்டும் திட்டத்தில் உள்ளது. இதற்காகப் பல நிறுவனங்களுடன் பிளிப்கார்ட் பேச்சுவார்த்தை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
பிளிப்கார்ட் நிறுவனம் தனது நிதித்திரட்டம் திட்டத்திற்கு மோர்கன் ஸ்டான்லி அணுகியபோதே இந்நிறுவனம் பிளிப்கார்ட் நிறுவன மதிப்பிடு குறித்து அறிவிப்புக்களை வெளியிட்டுள்ளது.
3.4 பில்லியன் டாலர்
பிளிப்கார்ட் நிறுவனம் இதுவரை 3.4 பில்லியன் டாலர் அளவிலான தொகையை முதலீடாகப் பெற்றுள்ளது. மேலும் பங்குச்சந்தையில் பட்டியிலிடம் திட்டம் குறித்து இந்நிறுவனத்திடம் பல முறை கேட்ட போது, பிளிப்கார்ட் நிறுவனத்திற்குத் தேவையான முதலீடு தனது ஆஸ்தான முதலீட்டாளர்களிடம் இருந்து கிடைக்கும்போது பங்குச்சந்தையின் பட்டியலிடும் அவசியம் தேவையில்லை என இந்நிறுவன தலைவர்கள் கூறினர்.
ஈகாமர்ஸ்
பிளிப்கார்ட் நிறுவனத்தின் மதிப்பீடு குறைந்ததை அடுத்து இத்துறை சார்ந்த பிற நிறுவனங்களின் மதிப்பும் அதிகளவில் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால் இனி ஈகாமர்ஸ் மற்றும் ஆன்லைன் வர்த்தக நிறுவனங்களில் முதலீட்டு அளவுகள் அதிகளவில் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வீழ்ச்சி
இந்தியாவில் ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள், டிஜிட்டல் இந்தியா, மேக் இன் இந்தியா திட்டங்கள் சந்தையில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதால் முதலீட்டாளர்கள் தங்களது முதலீட்டு முறையை முழுமையாக மாற்றியமைத்து வருகின்றனர்.
இதனால் ஈகாமர்ஸ் மற்றும் ஆன்லைன் வர்த்தக நிறுவனங்களின் சுக்கிரன் திசை முடிந்தது.
தமிழ் குட்ரிட்டன்ஸ் சேவைகள்
தங்கம் விலை | வெள்ளி விலை |வங்கி விடுமுறை நாட்கள் | டாலர்-ரூபாய் மதிப்புகள் | பங்குச்சந்தை நிலை | வங்கி IFSC குறியீடு
தங்கம் விலை | வெள்ளி விலை |வங்கி விடுமுறை நாட்கள்
டாலர்-ரூபாய் மதிப்புகள் | பங்குச்சந்தை நிலை | வங்கி IFSC குறியீடு
More From GoodReturns

ஆனந்த் ஸ்ரீனிவாசன்: படிச்சு படிச்சு சொன்னேன்.. யாரும் கேட்ல 'Big Drop'.. வெள்ளி அதோ கதி..!!

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

52 வார சரிவில் HDFC வங்கி பங்குகள்.. ஓரேயொரு நபர் செய்த வேலையால்.. ரூ.1 லட்சம் கோடி காலி..!!!

இந்தியர்கள் உடனே வெளியேறலாம்; நாங்களே டிக்கெட் போட்டு தரோம்: அமெரிக்க அரசின் அட்டூழியம்

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!



Click it and Unblock the Notifications