பெங்களூரு: நாட்டின் முன்னணி மென்பொருள் நிறுவனமான, விப்ரோ நிறுவனத்தின் சீஇஓ டி.கே குரியன் நிறுவனத்தின் நிர்வாகக் குழுவில் இணைந்ததால், இப்பதவிக்கு 23 வருடம் டிசிஎஸ் நிறுவனத்தில் பணியாற்றிச் சில வருடங்களுக்கு முன் விப்ரோவில் இணைந்த அபித் அலி நீமச்வாலா புதிய சீஇஓவாக நியமிக்கப்பட்டார்.
தங்கம் விலை | வெள்ளி விலை |வங்கி விடுமுறை நாட்கள்
டாலர்-ரூபாய் மதிப்புகள் | பங்குச்சந்தை நிலை | வங்கி IFSC குறியீடு
இந்நிலையில் புதிய சீஇஓவின் சம்பளம் குறித்து அனைவரும் எதிர்பார்த்திருந்த நிலையில் விப்ரோ நிறுவனம் பங்குச்சந்தைக்குச் சமர்ப்பித்த அறிக்கையின் மூலம் தற்போது அபித் அலி-யின் சம்பளம் பற்றிய விபரங்கள் தெரிய வந்துள்ளது.
பிப்ரவரி 1
7.5 பில்லியன் டாலர் மதிப்புள்ள விப்ரோ நிறுவனத்தின் புதிய சீஇஓவாக அபித் அலி நீமச்வாலா கடந்த பிப்ரவரி 1ஆம் தேதி தனது பணியே துவங்கினார்.
அபித் அலியின் சம்பளம்
விப்ரோ நிறுவனம் அபித் அலிக்கு அடிப்படை சம்பளமாக வருடத்திற்கு 0.8 மில்லியன் டாலர் மற்றும் 1.2 மில்லியன் டாலர் அளிக்க உள்ளதாக அறிவித்துள்ளது.
இதுமட்டும் அல்லாமல் நிறுவன இலக்கை எட்டும்பட்சத்தில் இவருக்கு 0.9 மில்லியன் டாலர் வரையிலான தொகையை அளிக்க உள்ளது. இதேபோல் 2.19 மில்லியன் டாலர் மதிப்பிலான பங்கு வாய்ப்புகளையும் அளிக்கத் திட்டமிட்டுள்ளது விப்ரோ நிர்வாகம்.
மேலும் கட்டுப்படுத்தபட்ட பங்கு மதிப்பின் அளவுகளை விப்ரோ இன்னும் நிர்ணயம் செய்யாத காரணத்தினால் இதுக்குறித்த விபரங்கள் தெரியவில்லை. இதனால் சந்தையில் பிற நிறுவனங்களுக்கு இணையான சம்பளத்தை பெற்றுள்ளார் அபித்அலி.
அமெரிக்கா
அபித் அலி தற்போது பெங்களூரு அலுவலகத்தில் அல்லாமல் அமெரிக்காவின் டல்லஸ் மாகாணத்தில் இருந்து தனது பணியை மேற்கொண்டு வருகிறார்.
விஷால் சிக்கா
எஸ்.ஏ.பி நிறுவனத்தில் இருந்து வெளியேறிய விஷால் சிக்கா இன்போசிஸ் நிறுவனத்தில் சீஇஓவாக 2014ஆம் ஆண்டு இணைந்தார்.
தற்போது இன்போசிஸ் அளித்த புதிய சம்பள அடிப்படையில் ஒரு வருடத்திற்கு 1 மில்லியன் டாலர் சம்பளமாகவும், 3 மில்லியன் டாலர் வேரியபில் பே, 2 மில்லியன் டாலர் கட்டுப்படுத்தப்பட்ட பங்குகள் மற்றும் 5 மில்லியன் டாலர் மதிப்பிலான பங்குகள் எனச் சிக்காவின் சம்பளம் 11 மில்லியன் டாலராக உயர்ந்துள்ளது.
பணிக்காலம்
இதுமட்டும் அல்லாமல் இவரது பணிக்காலம் மேலும் 2 வருடம் நீட்டிக்கப்பட்டு 2021 ஆண்டு வரை ஒப்பந்தம் நீட்டிக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.
சிடிஎஸ் டிசோசா..
இந்நிலையில் இன்போசிஸ் நிறுவனத்தின் சக போட்டி நிறுவனமான சிடிஎஸ் எனப்படும் காக்னிசன்ட் நிறுவனத்தின் தலைவர் பிரான்சிஸ்கோ டிசோசா-வின் பங்குகள் மற்றும் பிற வருமானங்களைச் சேர்த்து மொத்த சம்பளம் 11.3 மில்லியன் டாலராக உள்ளது.
டிசிஎஸ்
நாட்டின் மிகப்பெரிய மென்பொருள் ஏற்றுமதி நிறுவனமாக விளங்கும் டிசிஎஸ் நிறுவனத்தின் தலைவர் என்.சந்திரசேகரனின் சம்பளம் (Take Home) 3.15 மில்லியன் டாலராக உள்ளது.
டிகே குரியன்
அதேபோல் விப்ரோ நிறுவனத்தின் முன்னாள் சிஇஓ டிகே குரியன் ஒரு வருடத்திற்கு 8.46 கோடி ரூபாய்ச் சம்பளமாகப் பெற்று வருகிறார்.


Click it and Unblock the Notifications