மும்பை: ஐரோப்பிய சந்தை மற்றும் மத்திய பட்ஜெட் அறிவிப்புகள் காரணமாக மும்பை பங்குச்சந்தை செவ்வாய்க்கிழமை சுமார் 777 புள்ளிகள் வரை உயர்ந்து முதலீட்டாளர்களை மகிழ்ச்சியில் உச்சத்திற்குக் கொண்டு சென்றது.
தங்கம் விலை | வெள்ளி விலை |வங்கி விடுமுறை நாட்கள்
டாலர்-ரூபாய் மதிப்புகள் | பங்குச்சந்தை நிலை | வங்கி IFSC குறியீடு
நேற்றைய வர்த்தகத்தில் எஃப்எம்சிஜி துறையில் ஐடிசி நிறுவனப் பங்குகள் யாரும் எதிர்பார்க்காத வகையில் சுமார் 10 சதவீதம் வரை உயர்ந்து மும்பை பங்குச்சந்தையின் மதிப்புத்தக்க நிறுவனங்கள் பட்டியலில் இன்போசிஸ், எச்டிஎப்சி நிறுவனங்களைப் பின்னுக்குத் தள்ளி 3வது இடத்தைப் பிடித்துள்ளது.
ஐடிசி நிறுவனப் பங்குகள்
செவ்வாய்க்கிழமை வர்த்தக முடிவில் ஐடிசி நிறுவனப் பங்குகள் 9.91 சதவீத உயர்வில் 325.10 புள்ளிகளை எட்டியது. ஆனால் நேற்று அதிகப்படியாக 10.54 சதவீத உயர்வில் 327 ரூபாய் வரை உயர்ந்தது குறிப்பிடத்தக்கது.
3வது இடம்
ஐடிசி நிறுவனத்தின் திடீர் உயர்வினால் சந்தையின் டாப் 30 நிறுவனங்கள் பட்டியில் மதிப்புதக்க நிறுவனங்கள் வரிசையில் இந்நிறுவனம் 3வது இடத்தைப் பிடித்துள்ளது.
தற்போதைய நிலையில் ஐடிசி நிறுவனத்தின் மொத்த மதிப்பீடு 2,61,403.46 கோடி ரூபாய்.
டாப் 5 நிறுவனங்கள்
ஐடிசி நிறுவனம் 3வது இடத்தைப் பிடித்துள்ள நிலையில், முதல் இடத்தில் டிசிஎஸ், 2வது இடத்தில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், 4வது இடத்தில் இன்போசிஸ், 5வது இடத்தில் எச்டிஎப்சி வங்கி ஆகியவை இடம் பெற்றுள்ளது.
புகையிலை வரி
ஐடிசி நிறுவனத்தின் மிகப்பெரிய வர்த்தகம் மற்றும் லாபம் அடைவது இந்நிறுவனத்தின் சிகரெட் விற்பனை தான். திங்கட்கிழமை அறிவிக்கப்பட்ட பட்ஜெட் அறிக்கையில் பீடி அல்லாத பிற புகையிலை பொருட்களின் மீதான கலால் வரியை 10-15 சதவீதம் வரை உயர்த்தியுள்ளது.
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?



Click it and Unblock the Notifications