சென்னை: போர்ப்ஸ் நிறுவனத்தின் 2016ஆம் ஆண்டுக்கான சர்வதேச பில்லியனர்கள் பட்டியலில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி, உலகத் தரவரிசையில் 36வது இடத்தையும், இந்திய தரவரிகையில் முதல் இடத்தையும் பிடித்து அசத்தியுள்ளார்.
தங்கம் விலை | வெள்ளி விலை |வங்கி விடுமுறை நாட்கள்
டாலர்-ரூபாய் மதிப்புகள் | பங்குச்சந்தை நிலை | வங்கி IFSC குறியீடு
உலகின் முன்னணி வர்த்தகம் பத்திரிக்கை நிறுவனமாக விளங்கும் போர்ப்ஸ் நிறுவனம் ஒவ்வொரு வருடமும் உலகப் பணக்காரர்கள் குறித்த தரவரிசை பட்டியலை வெளியிட்டு வருகிறது.
2016ஆம் ஆண்டுக்கான பட்டியலில் முதல் இடத்தைப் பில் கேட்ஸ் பிடித்துள்ளார்.
முகேஷ் அம்பானி
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் தலைவரான முகேஷ் அம்பானி தனது பெட்ரோலியம் சுத்திகரிப்பு வியாபாரத்தின் மூலம் மிகப்பெரிய உயரத்தை அடைந்துள்ளது. 2016ஆம் ஆண்டில் 19.3 பில்லியன் டாலர் சொத்தின் மதிப்பு உடன் உலகளவில் 36வது இடத்தைப் பிடித்துள்ளார்.
இந்திய பில்லியனர்கள் பட்டியலில் தொடர்ந்து பல வருடங்களாக முதல் இடத்தைப் பிடித்து வருகிறார் முகேஷ் அம்பானி. இவர் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரிஸ் நிறுவனத்தின் தலைவராகவும், நிர்வாக இயக்குநராகவும் பொறுப்பு வகிக்கிறார்.
திலீப் சங்வி
இந்தியாவின் முன்னணி மருந்த உற்பத்தி மற்றும் ஏற்றுமதி நிறுவனமான சன் பார்மா நிறுவனத்தின் தலைவர் திலீப் சங்வி 16.9 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் இந்திய பில்லியனர்கள் பட்டியலில் 2வது இடத்தில் உள்ளார்.
அசிம் பிரேம்ஜி
இவர் பெங்களூரை தலைமையகமாகக் கொண்டு உலக முழுவதும் விரிந்து இருக்கும் விப்ரோ நிறுவனத்தின் தலைவரான அசிம் பிரேம்ஜி, இப்பட்டியலில் 15 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் 3வது இடத்தில் உள்ளர்.
மேலும் இவர் 2 பில்லியன் டாலருக்கும் அதிகமான சொத்துக்களைத் தனது சொந்த அறக்கட்டளையின் மூலம் நன்கொடையாக அளித்துள்ளார்.
ஷிவ் நாடார்
இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் ஐடி நிறுவனங்களில் ஒன்றான ஹெச்சிஎல் நிறுவனத்தின் தலைவரான ஷிவ்நாடார் இப்பட்டியலில் 11.1 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் 4வது இடத்தில் உள்ளார்.
சைரஸ் பூனாவாலா
தடுப்புமருந்து தயாரிப்பு மற்றும் ஆராய்ச்சியில் ஈட்டுப்பட்டுள்ள சைரஸ் பூனாவாலா 8.5 பில்லியன் டாலர் சொத்துமதிப்புடன் இப்பட்டியலில் 5வது இடத்தில் உள்ளார்.
கடந்த சில வருடங்களில் இவரது சீரம் நிறுவனம் மிகப்பெரிய வளர்ச்சியை அடைந்துள்ளது.
டாப் 10 பட்டியில்
இந்திய பில்லியனர்கள் பட்டியலில் டாப் 10 பட்டியலில் முதல் 5 இடங்களைப் பார்த்த நிலையில் மீதமுள்ள 5 இடத்தில் லக்ஷ்மி மிட்டல், மஹிந்திரா கோட்டாக் நிறுவனத்தின் தலைவர் உதய் கோட்டாக், குமார் மங்களம் பிர்லா, ஏர்டெல் நிறுவனத்தின் தலைவர் சுனில் மிட்டல், லூப்பின் நிறுவனத்தின் உரிமையாளர் தேஷ் பந்து குப்தா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
புதிய பில்லியனர்கள்
போர்ப்ஸ் நிறுவனத்தின் இந்திய பணக்காரர்கள் பட்டியலில் இந்த வருடம் இடம்பெற்ற புதிய பல்லியனர்களை இப்போது பார்ப்போம். இண்டர்குளோப் ஏவியேஷன் (இண்டிகோ ஏர்லையன்ஸ்) நிறுவனத்தின் தலைவர்கள் கபில் பாதியா மற்றும் ராகுல்ல பாதியா (தந்தை-மகன்) அவர்களின் சொத்து மதிப்பு 3.1 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது.
பெண்கள் பில்லியனர்கள்
ஓபி ஜிண்டல் குழுமத்தின் நிர்வாகத் தலைவரான சாவித்ரி ஜிண்டல், பென்னெட், கோல்மேன் அண்ட் கோ என்னும் மீடியா நிறுவனத்தின் தலைவரான இந்து ஜெயின், காட்ரிஜ் நிறுவனத்தின் ஸ்மிதா கிருஷ்னா, யுஎஸ்வி மருந்து தயாரிப்பு நிறுவனத்தின் லீனா திவாரி, ஹேவெல்ஸ் நிறுவனத்தின் வினோத் குப்தா ஆகியோர் இந்திய பில்லியனர்கள் பட்டியலில் இடம்பிடித்துள்ளனர்.
இளம் பில்லியனர்கள்
இந்தியாவில் மிக இளைமையான பில்லியனர்கள் பட்டியலில் முதல் இடத்தைப் பிடிப்பது பிளிப்கார்ட் நிறுவன தலைவர்கள் சச்சின் பன்சால் மற்றும் பின்னி பன்சால் ஆகியோர் தான். இவர்களின் சொத்து மதிப்புத் தற்போது 1.2 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது.
உலகத் தரவரிசை
இந்நிலையில் போர்ப்ஸ் நிறுவனத்தின் சர்வதேச பில்லியனர்கள் பட்டியலில் 75 பில்லியன் டாலருடன் புல் கேட்ஸ் முதல் இடத்தைப் பிடித்துள்ளார். இவர் கடந்த 3 வருடமாகத் தொடர்ந்து முதல் இடத்தில் இருக்கிறார்.
இவரைத் தொடர்ந்து அமான்சியோ ஆர்டிகா, வாரன் பஃபெட், கார்லோஸ் ஸ்லிம், ஜெப் பிசோஸ், மார்க் ஜூக்கர்பெர்க், லேரி எலிசன், மைகில் புளும்பெர்க், சார்லஸ் காச், டேவிட் காச் ஆகியோர் டாப் 10 இடத்தைப் பிடித்துள்ளனர்.
போட்டி
முகேஷ் அம்பானி உலகளவில் படிப்படியாக முன்னேறி வந்தாலும், இந்திய பில்லியனர்கள் பட்டியலில் முதல் இடத்தைக் குத்தகைக்கு எடுத்தது போல் தொடர்ந்து முதல் இடத்தைப் பிடித்து வருகிறார்.
இவருக்குத் திலீப் சங்வி தொடர்ந்து போட்டியை அளித்தாலும், முதல் இடத்தைப் பிடிக்க இன்னும் சில ஆண்டுக்காலம் தேவைப்படும். கடந்த 10 ஆண்டுகளில் 7 முறை இந்திய பில்லியனர்கள் பட்டியலில் முதல் இடத்தைப் பிடித்து வருகிறார் முகேஷ் அம்பானி.
More From GoodReturns

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

முதலிடத்தில் விஜய், இரண்டாமிடத்தில் ஸ்டாலின் – அப்போ எடப்பாடி பழனிசாமி , சீமான்?

தங்கம் விலை ஏற்ற இறக்கம் குறித்து கவலையே வேண்டாம்: இப்படி முதலீடு செஞ்சா லாபம் கொட்டும்!!

GPay யூஸ் பண்றீங்களா? PocketMoney ஐகான் கிளிக் பண்ணா மொத்த பணமும் போய்டுமா?வைரலாகும் வாட்ஸ்அப் ஆடியோ



Click it and Unblock the Notifications