வாஷிங்டன்: ஐஎம்எப் என்றும் அழைக்கப்படும் சர்வதேச நாணய நிதியம் 2016ஆம் நிதியாண்டில் இந்திய சந்தையின் ஜிடிபி வளர்ச்சி 7.5 சதவீதமாக இருக்கும் எனத் தெரிவித்துள்ளது.
2015ஆம் நிதியாண்டில் நாட்டின் ஜிடிபி அளவை 7.3 சதவீதமாகக் கணித்த ஐஎம்எப், பட்ஜெட் 2016க்கு பின்னான கணிப்புகளில் 2016ஆம் ஆண்டில் இந்திய பொருளாதாரத்தின் வளர்ச்சி 7.5 சதவீதமாக உயரும் என நம்பிக்கை தெரிவித்துள்ளது.

ஏற்கனவே மூடி மற்றும் ஃபின்ஞ் அமைப்புகள் பட்ஜெட் மற்றும் இந்திய சந்தைகளின் வளர்ச்சி குறித்துச் சிறப்பான கணிப்புகளை அளித்துள்ள நிலையில், ஐஎம்எப் அமைப்புகளின் அறிவிப்புகள் இந்திய சந்தைக்கு மிகப்பெரிய வாய்ப்பாக அமைந்துள்ளது.
தங்கம் விலை | வெள்ளி விலை |வங்கி விடுமுறை நாட்கள்
டாலர்-ரூபாய் மதிப்புகள் | பங்குச்சந்தை நிலை | வங்கி IFSC குறியீடு
சர்வதேச அமைப்புகள் இந்திய சந்தையைப் பற்றிய சாதகமான அறிவிப்புகளின் மூலம் அன்னிய முதலீட்டாளர்கள் அதிகளவில் முதலீடு செய்ய வாய்ப்புள்ளது.

தற்போதைய நிலையில் கச்சா எண்ணெய் விலை குறைவு, பவர் மற்றும் எனர்ஜி விலை குறைவு ஆகியவற்றின் மூலம் மிகப்பெரிய லாபத்தை அடைந்து வருகிறது. மேலும் குறைவான கச்சா எண்ணெய் விலையின் மூலம் நாட்டின் பொருளாதார உயர்வு மற்றும் வர்த்தகப் பற்றாக்குறைக்குச் சாதகமாக அமைந்துள்ளது என ஐஎம்எப் இந்தியா தலைவர் பால் கேஷின் தெரிவித்தார்.
2015ஆம் ஆண்டுக்கான வளர்ச்சி கணிப்புகளில் மத்திய அரசு 7.6 சதவீதம் என்று அறிவித்துள்ள நிலையில், ரிசர்வ் வங்கி 7.4 எனக் கணித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications