டெல்லி: இந்திய ராணுவத்திற்குத் தேவையான ஆயுதங்களை இந்தியாவிலேயே தயாரிக்க இஸ்ரேல் நிறுவனமும் இந்திய நிறுவனமும் மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் இணைய உள்ளது.
தங்கம் விலை | வெள்ளி விலை |வங்கி விடுமுறை நாட்கள்
டாலர்-ரூபாய் மதிப்புகள் | பங்குச்சந்தை நிலை | வங்கி IFSC குறியீடு
இதனால் நாட்டின் பாதுகாப்பை மேம்படுத்தும் விதிமாக ஆயுதங்களை வாங்க இந்திய அரசு இனி பல ஆயிரம் கோடி ரூபாய்களை வெளிநாட்டு நிறுவனங்களுக்கு அளிக்கத் தேவையில்லை.
இப்புதிய கூட்டணி முதலில் ஸ்பைக் ATGM ஆயுதத்தைத் தயாரிக்க முடிவு செய்துள்ளது.
ஸ்பைக் ATGM ஆயுதம்
இந்திய ராணுவம் ஸ்பைக் ATGM எனப்படும் Anti-Tank Guided Missile ஆயுதத்தை வாங்கத் திட்டமிடும் இவ்வேளையில், இப்புதிய கூட்டணி இத்தகைய வகையிலான ஆயுதத்தைத் தயாரிக்கும் முடிவு அருமையானது.
இது தொடர்பான திட்டமும் 2014ஆம் ஆண்டில் இருந்து கிடப்பில் போடப்பட்டுள்ளது.
புதிய கூட்டணி
இஸ்ரேல் நாட்டின் ராபேல் நிறுவனமும், இந்தியாவின் கல்யாணி நிறுவனமும் இணைந்து ஸ்பைக் ATGM ஆயுதத்தை, இப்புதிய கூட்டணியில் தலைமையில் வன்பொருள் தொழிற்சாலையை அமைத்து உதிரிப்பாகங்களைத் தயாரிக்கிறது.
பார்த் டைனாமிக்ஸ் லிமிடெட்
உதிரி வன்பொருட்கள் அனைத்தையும் ஹைதராபாத்தில் உள்ள பார்த் டைனாமிக்ஸ் லிமிடெட் (BDL) நிறுவனத்தில் இணைக்கப்பட்டு முழுமையான ஆயுதங்களாக வெளிவர உள்ளது.
எனவே ஸ்பைக் ATGM தயாரிக்கும் திட்டம் மும்முனை ஒப்பந்தத்தின் மூலம் நிறைவேற்றப்பட உள்ளது. தற்போது BDL நிறுவனம் பிரென்ஞ் மிலன் ATGM ஆயுதங்கனை இணைத்து முழுமையான ஆயுதங்களாகத் தயாரிக்கும் பணியில் ஈட்டுப்பட்டுள்ளது.
அன்னிய முதலீடும் பங்கு விகிதங்களும்
இக்கூட்டணியில் கல்யாணி நிறுவனம் 51 சதவீத பங்குகளும், ராபேல் நிறுவனம் 49 சதவீத பங்குகளைக் கொண்டு முழுமையான அன்னிய முதலீட்டு ஈர்க்க பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
பாதுகாப்புத் துறை
கடந்த 2014ஆம் ஆண்டு 3,200 கோடி ரூபாய் மதிப்பிலான 8,000 ATGM ஆயுதங்கள், 300க்கும் அதிகமான லான்சர்கள் மற்றும் தொழில்நுட்ப பரிமாற்றம் ஆகியவற்றுக்கான திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு வழக்கம் போல் கிடப்பில் போடப்பட்டது.
தற்போது இத்திட்டம் தூசி தட்டப்பட்டு மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் நிறைவேற்றப்பட உள்ளது.


Click it and Unblock the Notifications