டெல்லி: நாட்டின் முன்னணி பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான சிண்டிகேட் வங்கி மீதான 1,000 கோடி ரூபாய் ஊழல் புகாரை அடுத்துச் சிபிஐ அதிகாரிகள் இவ்வங்கியின் 10 கிளைகளில் சோதனை நடத்தினர்.
தங்கம் விலை | வெள்ளி விலை |வங்கி விடுமுறை நாட்கள் |டாலர்-ரூபாய் மதிப்புகள் | பங்குச்சந்தை நிலை | வங்கி IFSC குறியீடு

டெல்லி, ஜெய்ப்பூர் மற்றும் உதயபூர் நகரங்களில் உள்ள 10 சிண்டிகேட் வங்கிக் கிளைகளில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தப்பட்டதில், 1,000 கோடி ரூபாய்க்கும் அதிக மதிப்புடைய போலி காசோலை, போலியான பில்கள், மற்றும் போலி எல்ஐசி பாலிசி மீதான ஓவர்டிராப்ட் செய்யப்பட்டதற்கான பில்கள் எனப் பல தரப்பட்ட ஆவணங்கள் சிக்கியுள்ளதாகச் சிபிஐ அமைப்பின் தலைமை தகவல் அதிகாரியான தேவ்பிரீத் சிங் தெரிவித்தார்.
சிண்டிகேட் வங்கி குறித்துப் பிற முக்கியச் செய்திகள்
சிபிஐ சோதனை மற்றும் 1,000 கோடி ரூபாய் ஊழல் புகார் காரணமாகச் சிண்டிகேட் வங்கியின் பங்கு மதிப்பு 1.78 சதவீதம் அளவில் சரிந்து 60.75 ரூபாய்க்கு வர்த்தகம் செய்யப்பட்டது.


Click it and Unblock the Notifications