டெல்லி: சர்வதேச பொருளாதாரச் சூழ்நிலைகள் காரணமாக நாட்டில் இன்ஜினியரிங் ஏற்றுமதி அளவு அதிகளவில் குறைந்துள்ளது. இந்தியாவின் இன்ஜினியரிங் ஏற்றுமதிக்கான சிறந்த டாப் 25 நாடுகளில் 19 நாடுகளுக்குச் சராசரியாக 50 சதவீதம் குறைவான அளவில் ஜனவரி மாதம் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.
இதில் மலேசியா நாட்டிற்கான ஏற்றுமதி அளவுகள் மட்டும் சுமார் 90 சதவீதம் குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
28 சதவீதம் குறைவு
2016ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் இன்ஜினியரிங் ஏற்றுமதி மதிப்புகளின் அளவுகள் மட்டும் 6.70 பில்லியன் டாலரில் இருந்து 28 சதவீதம் குறைந்து 4.82 பில்லியன் டாலராகக் குறைந்துள்ளது.
மலேசியா
இந்திய நாட்டின் இன்ஜினியரிங் ஏற்றுமதியின் டாப் 25 வாடிக்கையாளர்களில் மிகமுக்கியமாகக் கருதப்படும் மலேசியாவிற்கு மட்டும் ஏற்றுமதியின் மதிப்பு 830.88 மில்லியன் டாலரில் இருந்து 78.22 மில்லியன் டாலராகக் குறைந்துள்ளது எனப் பொறியியல் ஏற்றுமதி மேம்பாட்டுக் கவுன்சில் (EEPC) அமைப்பின் தலைவர் டி.எஸ்.பாசின் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய அரபு நாடுகள்
அதேபோல் டாப் 25 லிஸ்டில் 2வது இடத்தில் இருக்கும் ஐக்கிய அரபு நாடுகளுக்கான ஏற்றுமதி அளவுகள் 50 சதவீதம் குறைந்து 484.12 மில்லியன் டாலராகக் குறைந்துள்ளது.
என்ன காரணம்
சர்வதேச பொருளாதார வளர்ச்சியின் எஞ்சினாகக் கருதப்படும் சீனா நிதிநெருக்கடியில், பொருளாதாரச் சரிவிலும் தவித்து வருவதால் சர்வதேச நாடுகளின் உற்பத்தி அளவுகள் அதிகளவில் குறைந்துள்ளது.
இதன் ஒருபகுதியாகவே இந்திய தற்போது இன்ஜினியரிங் ஏற்றுமதி அதிகளவில் பாதித்துள்ளது.
உலோகம்
இதனால் எஃகு, ஸ்டீல், காப்பர் பொருட்களின் வர்த்தகம் இந்திய சந்தையில் வரலாறு காணாத அளவில் 50 சதவீதம் வரை குறைந்துள்ளது.
ஏற்றுமதி சரிவு..
கடந்த 14 மாத தொடர் ஏற்றுமதி சரிவில் ஜனவரி மாதம் 13.6 சதவீதம் சரிந்து 21 பில்லியன் டாலராகக் குறைந்துள்ளது.
நிலக்கரி இறக்குமதி
மேலும் கடந்த 8 மாத காலத்தில் நிலக்கரி இறக்குமதியில் முதல் முறையாக உயர்வடைந்துள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் மட்டும் நிலக்கரி இறக்குமதி அளவு 1.7 சதவீதம் அதிகரித்து 16.79 மில்லியன் டன்னாக உயர்ந்துள்ளது.
தமிழ் குட்ரிட்டன்ஸ் சேவைகள்
தங்கம் விலை | வெள்ளி விலை |வங்கி விடுமுறை நாட்கள் |டாலர்-ரூபாய் மதிப்புகள் | பங்குச்சந்தை நிலை | வங்கி IFSC குறியீடு


Click it and Unblock the Notifications