டெல்லி: இந்திய ரயில்வே துறையில் விளம்பரத்தின் மூலம் 5,000 கோடி ரூபாய் வரையிலான வருமானத்தை ஈட்டும் திட்டத்தைத் திறன்படச் செய்து முடிக்கச் சர்வதேச கன்சல்டன்சி நிறுவனமான EY எனப்படும் Ernst &Young நியமிக்கப்பட்டுள்ளது.
ரயில்வே பட்ஜெட் அறிக்கையில் கூட, ரயில்வே துறையின் நிதிநிலையைச் சரி செய்யப் புதிய வருவாய் ஈடும் பல திட்டங்களைத் தான் செயல்படுத்தப்போவதாக இத்துறை அமைச்சர் சுரேஷ் பிரபு தெரிவித்தார்.
தங்கம் விலை | வெள்ளி விலை |வங்கி விடுமுறை நாட்கள் |டாலர்-ரூபாய் மதிப்புகள் | பங்குச்சந்தை நிலை | வங்கி IFSC குறியீடு
நாட்டின் மிகப்பெரிய போக்குவரத்து நிறுவனமான இந்திய ரயில்வே துறை இந்தியா முழுவதுமாக அனைத்து வழிகளிலும் குறிப்பாக ரயில்கள், ரயில்வே நிலையங்கள் ஆகியவற்றில் விளம்பரம் செய்வதன் மூலம் மிகப்பெரிய வருவாய் பெற வேண்டும் என்ற நோக்கி Ernst &Young நிறுவன துணையோடு இத்திட்டத்தில் கால் வைத்துள்ளது. பிப்ரவரி 25ஆம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ரயில்வே பட்ஜெட் அறிக்கையில், பயணிகளிடம் இருந்து பெறப்படும் கட்டணத்தைத் தவிரப் பிற வழிகளில் வருமானத்தை ஈர்க்கத் திட்டமிட்டுள்ளோம் என ரயில்வேதுறை அமைச்சர் சுரேஷ் பிரபு கூறினார். தற்போது இந்திய ரயில்வே துறை சந்தித்துள்ள 19,000 கோடி ரூபாய் நிதிப் பற்றாக்குறையைக் கட்டண உயர்வு ஏதுமில்லாமல் ஈடு செய்யவும் ரயில்வே துறை திட்டமிட்டுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார். இந்திய ரயில்வே துறையின் மொத்த வருவாய் அளவுகளில் வெறும் 5 சதவீதம் மட்டுமே கட்டணமில்லா வருவாயாகப் பெறுகிறது. இந்நிலையில் இதன் அளவை அதிகரிக்கும் சில முக்கியத் திட்டங்களை வகுக்க முடிவு செய்துள்ளது ரயில்வே துறை. சர்வதேச நாடுகளில் உள்ள ரயில் நிர்வாகங்கள் 20 சதவீதம் வரையிலான கட்டமில்லா வருமானத்தைப் பெறுகிறது குறிப்பிடத்தக்கது.
ரயில்வே துறை
வருமானம்
நிதிப் பற்றாக்குறையை
மொத்த வருவாயில் 5% மட்டும்
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

165 ஆண்டுகளில் இல்லாத தரமான சம்பவத்தை செய்த டிரம்ப்..!! வாயடைத்துப்போன எதிர்க்கட்சியினர்..!!



Click it and Unblock the Notifications