பங்குச்சந்தையில் களமிறங்கிய முதல் இந்திய ஈகாமர்ஸ் நிறுவனம் 'இன்ஃபிபீம்'..

மும்பை: இந்திய ஈகாமர்ஸ் நிறுவனங்கள் ஏற்கனவே அதீத மதிப்பீடு மற்றும் விற்பனை வரி விதிப்பு ஆகிய முக்கியப் பிரச்சனைகளில் தவித்து வரும் இவ்வேளையில், பங்குச்சந்தையில் குதித்துள்ளது இன்ஃபிபீம் என்ற இந்திய ஈகாமர்ஸ் நிறுவனம்.

இதன் மூலம் மும்பை பங்குச்சந்தையில் குதித்த முதல் ஈகாமர்ஸ் நிறுவனம் என்ற பெயரை இன்ஃபிபீம் பெற்றுள்ளது.

ஐபிஓ

ஐபிஓ

இந்திய பங்குச்சந்தையில் இன்ஃபிபீம் இன்கார்ப்ரேஷன் லிமிடெட் நிறுவனம் பட்டியலிடுவதற்காகத் திங்கட்கிழமை இந்நிறுவனம் ஐபிஓ வெளியிட்டுள்ளது.

மும்பை பங்குச்சந்தையில் பட்டியலிடுவதன் மூலம் இந்திய சந்தையில் இருந்து 450 கோடி ரூபாய் வரையிலான முதலீட்டைத் திரட்ட முடியும் என இன்ஃபிபீம் கணக்கிட்டுள்ளது.

 

இன்ஃபிபீம்

இன்ஃபிபீம்

அகமதாபாத் நகரத்தை தலைமையிடமாகக் கொண்டு இந்தியா முழுவதும் வர்த்தகம் செய்துவரும் இன்ஃபிபீம் நிறுவனம், அதீத மதிப்பு மற்றும் நேரக் குறைபாடு காரணமாக நான்கில் 2 முதலீட்டு நிறுவனங்கள் இந்நிறுவனத்தின் ஐபிஓ பணியில் இருந்து விலகியுள்ளது.

வங்கி நிறுவனங்கள்

வங்கி நிறுவனங்கள்

இந்நிறுவனத்தின் ஐபிஓ பணியில் இருந்து கோட்டாக் மஹிந்திரா கேபிடல் மற்றும் ஐசிஐசிஐ செக்கூரிட்டீஸ் ஆகிய நிறுவனங்கள் வெளியேறிய நிலையில், எஸ்பிஐ கேபிடெல் மார்கெட் மற்றும் எலாரா கேபிடெல் இந்தியா பிரைவேட் லிமிடெட் ஆகிய இரு நிறுவனங்கள் மட்டும் இப்பணியில் ஈட்டுப்பட்டுள்ளது.

விலை

விலை

ஐபிஓ-விற்காகத் திறக்கப்பட்ட இன்ஃபிபீம் நிறுவனத்தின் பங்கு விலைகள் 360-432 ரூபாய் என்ற விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தற்போதைய நிலையின் படி நிர்ணயம் செய்யப்பட்ட விலை மிகவும் அதிகம் என முதலீட்டாளர்கள் மத்தியில் கருத்து நிலவி வருகிறது.

ஈகாமர்ஸ் துறை

ஈகாமர்ஸ் துறை

இந்தியாவில் இத்துறை வேகமாக வளர்ந்து வந்தாலும், கடந்த சில மாதங்களாக முதலீட்டு நிறுவனங்கள் மத்தியில் இத்துறையின் தொடர் நஷ்டம் மற்றும் வர்த்தகச் சரிவுகள் ஆகியவற்றின் காரணமாக முதலீட்டுக்கு உகந்ததாக இல்லை.

விஷால் மேத்தா

விஷால் மேத்தா

உலகின் முன்னணி ஈகாமர்ஸ் நிறுவனமாகக் கருதப்படும் அமேசான் நிறுவனத்தில் இருந்து வெளியேறிய விஷால் மேத்தா இந்தியாவில் 2007ஆம் ஆண்டு இன்ஃபிபீம் நிறுவனத்தைத் துவங்கினார்.

10 கோடி நஷ்டம்

10 கோடி நஷ்டம்

2015ஆம் நிதியாண்டு முடிவில் இன்ஃபிபீம் நிறுவனம் 288.2 கோடி ரூபாய் வர்த்தகத்துடன் 9.8 கோடி ரூபாய் நஷ்டத்தைச் சந்தித்துள்ளது.

விரிவாக்கம்

விரிவாக்கம்

2016ஆம் நிதியாண்டில் இந்நிறுவனத்தின் விரிவாக்கத் திட்டங்களின் ஒரு பகுதியாகப் புதிய கிளவுட் டேட்டா சென்டர் மற்றும் 75 லாஜிஸ்டிக்ஸ் மையங்களை அமைக்கத் திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

2,250 கோடி ரூபாய் மதிப்பு

2,250 கோடி ரூபாய் மதிப்பு

பங்குச்சந்தை வெளியீட்டுக்குப் பின் இன்ஃபிபீம் நிறுவனம் சுமார் 2,250 கோடி ரூபாய் வரை மதிப்பிடப்படும் என இந்நிறுவனத்தின் தலைவர் விஷால் மேத்தா தெரிவித்தார்.

பாலிவுட் ஹீரோக்கள்!

பாலிவுட் ஹீரோக்கள்!

பன்னாட்டு முதலாளிகள்

பன்னாட்டு முதலாளிகள்

தமிழ் குட்ரிட்டன்ஸ் சேவைகள்

தமிழ் குட்ரிட்டன்ஸ் சேவைகள்

தங்கம் விலை | வெள்ளி விலை |வங்கி விடுமுறை நாட்கள் |டாலர்-ரூபாய் மதிப்புகள் | பங்குச்சந்தை நிலை | வங்கி IFSC குறியீடு

 

சமுக வலைத்தள இணைப்புகள்

சமுக வலைத்தள இணைப்புகள்

இனி உங்கள் தமிழ் குட்ரிட்டன்ஸ் தளத்தைப் பேஸ்புக், கூகுள் பிளஸ் மற்றும் டிவிட்டர் பக்கங்களின் மூலமும் இணைந்திடலாம்.

கிளிக் பண்ணுங்க.. ஷேர் பண்ணுங்க..

 

தங்கம் விலை | வெள்ளி விலை |வங்கி விடுமுறை நாட்கள் |டாலர்-ரூபாய் மதிப்புகள் | பங்குச்சந்தை நிலை | வங்கி IFSC குறியீடு

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+