வங்கிக் கடன், ஊழியர்களுக்கான சம்பள நிலுவையைத் தீர்க்க 'விஜய் மல்லையா' டீம் முடிவு..!

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மும்பை: கிங்பிஷர் ஏர்லையன்ஸ் நிறுவனத்திற்காக 17 வங்கி மற்றும் நிதி நிறுவனங்களில் பெற்ற 9,000 கோடி ரூபாய் கடன் தொகையைத் திருப்பிச் செலுத்த முடிவு செய்துள்ளார் விஜய் மல்லையா. இதற்காக விஜய் மல்லையா மற்றும் தனது ஆலோசகர்கள் உடன் இணைந்து புதிய கடன் செலுத்தும் திட்டத்தை வடிவமைத்து வருகின்றனர்.

இத்திட்டத்தின் முதல் பணியாகக் கிங்பிஷர் ஏர்லையன்ஸ் நிறுவன ஊழியர்களின் சம்பள நிலுவையைத் தீர்க்க வேண்டும் என விஜய் மல்லையா முடிவு செய்துள்ளதாகத் தகவல் கிடைத்துள்ளது.

('சிறு துளி பெரு வெள்ளம்' உங்க பணத்தை இப்படியும் சேமிக்கலாம்..!)('சிறு துளி பெரு வெள்ளம்' உங்க பணத்தை இப்படியும் சேமிக்கலாம்..!)

மறுசீரமைப்பு

மறுசீரமைப்பு

சில மாதங்களுக்கு முன் வங்கிகளிடம் பெற்ற கடனைத் திருப்பிச் செலுத்த விஜய் மல்லையா தலைமையிலான குழு ஒரு கடன் திரும்புதல் திட்டத்தை வடிவமைத்து. இதனை 17 வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் மத்தியிலான குழு நிராகரித்தது.

தற்போது இத்திட்டத்தை மறுசீரமைப்புச் செய்து புதிய கடன் திரும்புதல் திட்டத்தை வடிவமைக்க உள்ளது. இதில் விஜய் மல்லையா கிங்பிஷர் ஏர்லையன்ஸ் நிறுவனத்திற்காகப் பெற்ற கடனைப் பகுதியாகவோ அல்லது முழுத் தொகையாகவோ செலுத்த திட்டமிட்டு வருகிறார்.

 

ஊழியர்களின் சம்பள நிலுவை

ஊழியர்களின் சம்பள நிலுவை

இத்திட்டத்தின் முதன்மை பணியாகக் கிங்பிஷர் ஏர்லையன்ஸ் ஊழியர்களுக்கு அளிக்க வேண்டிய சம்பள நிலுவை தொகையான 300 கோடி ரூபாய் செலுத்த வேண்டும் எனத் திட்டமிட்டுள்ளார்.

இதன் மூலம் நாட்டின் மல்லையா மக்கள் மத்தியில் இழந்த நன்மதிப்பையும், வர்த்தக உலகம் மத்தியில் இழந்த நல்ல தலைவர் என்ற பெயரை மீட்க முடியும் என நம்புகிறார்.

 

2012ஆம் ஆண்டு

2012ஆம் ஆண்டு

இந்திய சந்தையில் கிங்பிஷர் நிறுவனம் சிறப்பாக இயங்கிய 2012ஆம் ஆண்டில் திடீரென முடங்கியதால் இந்நிறுவனத்தில் பணியாற்றிய 5,000க்கும் அதிகமான ஊழியர்கள் நடுரோட்டில் நின்றனர்.

இன்றளவிலும் சில ஊழியர்களுக்கு வேலைக் கிடைக்காமல் தவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 ஊரை விட்டு ஓடினார்

ஊரை விட்டு ஓடினார்

ஊழியர்கள் சம்பளத்திற்காகத் தவிக்கும் நிலையிலும், வங்கிகள் கடன் தொகையை வசூல் செய்யத் துரத்தும் நிலையில் யாரும் தெரியாமல் நாட்டை விட்டு ஓடி தற்போது லண்டனில் உள்ள தனது சொகுசு பங்களாவில் ஜாலியாக இருக்கிறார் விஜய் மல்லையா.

வங்கிகள்

வங்கிகள்

இந்நிலையில் கடந்த முறை விஜய் மல்லையா தன்னால் கடன் தொகையை முழுமையாகச் செலுத்த முடியும் என்றும், கடனுக்கான வட்டியை மட்டுமே செலுத்த முடியாது எனவும் தெரிவித்தார்.

இதன் பின் வங்கி நிர்வாகத்திடம் செய்யப் பேச்சுவார்த்தையில் வங்கி தரப்பு கடுமையான எதிர்ப்பு தெரிவித்த நிலையில், வட்டித் தொகையில் சில சதவீதத்தைத் தான் செலுத்தவும் ஒப்புக்கொண்டார். ஆனால் இதனை வங்கித்தரப்பு ஒப்புக்கொள்ளவில்லை.

தற்போது முதலுக்கே மோசம் என்ற வகையில் வங்கிகள் விஜய் மல்லையாவை தேடி வருகிறது.

 

ரூ.3,000 கோடி வட்டித் தொகை

ரூ.3,000 கோடி வட்டித் தொகை

கிங்பிஷர் ஏர்லையன்ஸ் நிறுவனத்திற்காகப் பெற்ற கடன் தொகைக்கு வட்டித் தொகை மட்டும் தற்போது 3,000 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.

சொத்துக் கைப்பற்றுதல்

சொத்துக் கைப்பற்றுதல்

விஜய் மல்லையாவின் விமான நிலையம் முடங்கிய நிலையில் கடன் தொகைக்காக இந்நிறுவனத்தின் சொத்துக்களைக் கைப்பற்றியதில் வங்கிகள் தரப்பு சுமார் 1,244 கோடி ரூபாய் பெற்று.

ஏடிஎம்

ஏடிஎம்

ஏடிஎம் பயன்படுத்துபவரா நீங்கள்..? கண்டிப்பாகப் படிக்க வேண்டும்..!ஏடிஎம் பயன்படுத்துபவரா நீங்கள்..? கண்டிப்பாகப் படிக்க வேண்டும்..!

பாவம் பிளிப்கார்ட்

பாவம் பிளிப்கார்ட்

திரும்பும் இடமெல்லாம் பிரச்சனை.. பிளிப்கார்ட் நிறுவனத்தின் பரிதாப நிலை..!திரும்பும் இடமெல்லாம் பிரச்சனை.. பிளிப்கார்ட் நிறுவனத்தின் பரிதாப நிலை..!

தமிழ் குட்ரிட்டன்ஸ் சேவைகள்

தமிழ் குட்ரிட்டன்ஸ் சேவைகள்

தங்கம் விலை | வெள்ளி விலை |வங்கி விடுமுறை நாட்கள் |டாலர்-ரூபாய் மதிப்புகள் | பங்குச்சந்தை நிலை | வங்கி IFSC குறியீடு

சமுக வலைத்தள இணைப்புகள்

சமுக வலைத்தள இணைப்புகள்

இனி உங்கள் தமிழ் குட்ரிட்டன்ஸ் தளத்தைப் பேஸ்புக், கூகுள் பிளஸ் மற்றும் டிவிட்டர் பக்கங்களின் மூலமும் இணைந்திடலாம்.

கிளிக் பண்ணுங்க.. ஷேர் பண்ணுங்க..

 

தங்கம் விலை | வெள்ளி விலை |வங்கி விடுமுறை நாட்கள் |டாலர்-ரூபாய் மதிப்புகள் | பங்குச்சந்தை நிலை | வங்கி IFSC குறியீடு

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Vijay Mallya and his advisers are working to revise a debt repayment offer that has been rejected by banks to make it more acceptable to them, people aware of the development said.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X