மும்பை: ஹோலி மற்றும் புனித வெள்ளி காரணமாக வருகிற வியாழக்கிழமை முதல் தொடர்ந்து 4 நாட்கள் வங்கிகள் இயங்காது. இதனால் நிதிப்பரிமாற்றம் மற்றும் வங்கி குறித்த அனைத்துப் பணிகளையும் இன்றே முடித்துக்கொள்ள வங்கிகளில் மக்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது.
இந்த விடுமுறை வங்கி ஊழியர்களின் வேலைநிறுத்த போராட்டத்தின் அறிவிப்பால் திங்கட்கிழமையும் நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
4 நாட்கள் விடுமுறை
பொதுவாக இந்தியாவில் ஹோலி பண்டிகை வட மாநிலங்களில் மட்டுமே சிறப்பாகக் கொண்டாடப்படுவதால் தென் மாநிலங்களில் வியாழக்கிழமை வங்கிகள் செயல்படும்.
மேலும் மத்திய அரசின் அறிவிப்பின் படி மாதத்தில் 2வது மற்றும் 4வது சனிக்கிழமைகளில் விடுமுறை அளிக்கப்படுவதால் வியாழக்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை வரையில் வங்கிகள் இயங்காது.
ஏடிஎம்
தொடர்ந்து 4 நாட்கள் வங்கிகள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் மக்கள் நிதிப்பரிமாற்றம் செய்ய ஏதுவாக அனைத்து வங்கி ஏடிஎம் இயந்திரங்களிலும் பணத்தை நிரப்பும் பணியில் வங்கி நிர்வாகம் இறங்கியுள்ளது.
ஐடிபஐ வங்கி
2016-17ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் அறிக்கையில் நிதியமைச்சர் அருண் ஜேட்லி ஐடிபஐ வங்கி (IDBI Bank) இருப்பைக் குறைத்து தனியார் வங்கி நிர்வாகமாக அறிவிக்க மத்திய அரசு திட்டமிட்டு வருவதாக அறிவித்தார்.
வேலைநிறுத்த போராட்டம்
இதனை எதிர்த்து வங்கி ஊழியர்கள் அமைப்பு வருகிற மார்ச் 28ஆம் தேதி வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுப்பட உள்ளதாக அறிவித்துள்ளது. இதனால் தொடர் 4 நாள் விடுமுறையை அடுத்து திங்கட்கிழமையும் வங்கிகள் இயங்காது எனத் தெரிகிறது.
வங்கி ஊழியர்கள் அமைப்பு
இதுவரை வங்கி ஊழியர்கள் அமைப்பான AIBEA மற்றும் AIBOA ஆகியவை ஸ்திரமான முடிவுகளை அறிவிக்கவில்லை. புதன்கிழமை மாலைக்குள் வேலைநிறுத்த போராட்டத்திற்கான இறுதி முடிவை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பங்கு இருப்பு..
ஐடிபிஐ வங்கியின் 80 சதவீத பங்குகள் தற்போது மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது, இந்த அளவீட்டை 50 சதவீதமாகக் குறைக்கவே மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது.
கைகளை கட்டிப்போடுங்க...
தமிழ் குட்ரிட்டன்ஸ் சேவைகள்
தங்கம் விலை | வெள்ளி விலை |வங்கி விடுமுறை நாட்கள் |டாலர்-ரூபாய் மதிப்புகள் | பங்குச்சந்தை நிலை | வங்கி IFSC குறியீடு
சமுக வலைத்தள இணைப்புகள்
இனி உங்கள் தமிழ் குட்ரிட்டன்ஸ் தளத்தைப் பேஸ்புக், கூகுள் பிளஸ் மற்றும் டிவிட்டர் பக்கங்களின் மூலமும் இணைந்திடலாம்.
கிளிக் பண்ணுங்க.. ஷேர் பண்ணுங்க..
More From GoodReturns

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

காருண்யா KR-749 முடிவுகள் வெளியானது : ரூ.1 கோடி வென்றது யார்?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

போனது போகட்டும்!! நாளை தமிழ் புத்தாண்டு நாளில் இதை எல்லாம் தொடங்குங்க வாழ்க்கை செமயா மாறும்!!

தமிழ்நாட்டில் விவசாயம் செய்யும் மாதவன்!! தரிசு நிலத்தை தென்னந்தோப்பாக மாற்றி சாதனை!!

டிசிஎஸ் நாசிக் அலுவலகத்தில் நடந்தது என்ன? மஃப்டியில் வேலை செய்த மகளிர் போலீஸின் ஷாக் ரிப்போர்ட் !!

சட்டமன்ற தேர்தல் 2026: உங்களின் Booth Slip-ஐ ஆன்லைனில் டவுன்லோட் செய்வது எப்படி?



Click it and Unblock the Notifications