மும்பை: இந்திய சந்தையின் அன்னிய செலாவணி இருப்பு அளவுகள் எப்போது இல்லாத அளவிற்கு மார்ச் மாதத்தில் 2.539 பில்லியன் டாலர் அளவு உயர்ந்துள்ளது.
இதனால் மார்ச் 18ஆம் தேதி முடிவடைந்த வாரத்தில் நாட்டின் அன்னிய செலாவணி இருப்பு அளவு 355.947 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
ரிசர்வ் வங்கி
சர்வதேச சந்தையில் இந்திய ரூபாயின் மதிப்பின் அளவுகளை மேம்படுத்த ரிசர்வ் வங்கி அன்னிய நாட்டு நாணயங்களின் இருப்பு அளவுகளை அதிகரிக்கும் பணிகளை மேற்கொண்டது.
வரலாறு காணாத உயர்வு
இதன் காரணமாக முதலீட்டின் வாயிலாகவும், ரிசர்வ் வங்கியின் நாணய கொள்முதல் நடவடிக்கையின் மூலமாகவும் நாட்டின் அன்னிய செலாவணி இருப்பு வரலாறு காணாத வகையில் புதிய உச்சத்தை அடைந்துள்ளது.
355.46 பில்லியன் டாலர்
2015ஆம் நிதியாண்டில் ஜூலை 19ஆம் தேதி முடிவில் நாட்டின் அன்னிய செலாவணி இருப்பு வரலாறு காணாத வகையில் 355.46 பில்லியன் டாலராக உயர்ந்து புதிய உச்சத்தை அடைந்தது. இதற்கு முந்தை வாரம் இதன் அளவு 353.407 பில்லியன் டாலரில் இருந்து 2.543 பில்லியன் டாலர் உயர்ந்தது குறிப்பிடத்தக்கது.
355.947 பில்லியன் டாலர்
இந்நிலையில் மார்ச் 18ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் நாட்டின் அன்னிய செலாவணி இருப்பு அளவு ஆர்பிஐ FCA நடவடிக்கையின் மூலம் 2.539 பில்லியன் டாலர் உயர்ந்து 355.947 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது.
பிற நாணயங்கள்
ரிசர்வ் வங்கி இருப்பில் அமெரிக்க டாலர் மட்டும் அல்லாமல் சர்வதேச சந்தையில் வர்த்தகத்திற்காக அதிகளவில் பயன்படுத்தப்படும் யூரோ, பவுண்ட், யென் போன்ற பல நாணயங்கள் உள்ளது. ஆனால் இதன் மதிப்பை அமெரிக்க டாலர் வடிவில் தான் கணக்கிடப்படுகிறது.
தங்கம்
மேலும் மார்ச் 18ஆம் தேதி முடிவடைந்த வாரத்தில் தங்கத்தின் இருப்பு அளவு 0.6 மில்லியன் டாலர் உயர்ந்து 19.325 பில்லியன் டாலராக உள்ளது.
கண்ணு கட்டுதுடா சாமி முடியல..
இவங்க தான் ஒசத்தி..!
தமிழ் குட்ரிட்டன்ஸ் சேவைகள்
தங்கம் விலை | வெள்ளி விலை |வங்கி விடுமுறை நாட்கள் |டாலர்-ரூபாய் மதிப்புகள் | பங்குச்சந்தை நிலை | வங்கி IFSC குறியீடு
சமுக வலைத்தள இணைப்புகள்
இனி உங்கள் தமிழ் குட்ரிட்டன்ஸ் தளத்தைப் பேஸ்புக், கூகுள் பிளஸ் மற்றும் டிவிட்டர் பக்கங்களின் மூலமும் இணைந்திடலாம்.
கிளிக் பண்ணுங்க.. ஷேர் பண்ணுங்க..
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!



Click it and Unblock the Notifications