மும்பை: நாட்டின் மிகப்பெரிய வர்த்தகக் குழும நிறுவனமாகத் திகழும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் புதிய வர்த்தகப் பிரிவான ரிலையன்ஸ் ஜியோ இன்போகாம் என்னும் தொலைத்தொடர்பு நிறுவனம் இந்தியா முழுவதும் தனது டெலிகாம் சேவையை மிகப்பெரிய அளவில் அறிமுகம் செய்யத் தயாராகி வருகிறது.
இந்நிலையில் இத்திட்டத்தின் முதல் பணியாக ரிலையன்ஸ் ஜியோ தனது தொலைத்தொடர்பு சேவைக்காக, வாடிக்கையாளர்களுக்குச் சிம் (SIM) விற்பனைக்கான பணிகளைத் துவங்கியுள்ளது.
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தனது அதிகவேக 4ஜி மற்றும் இதர தொலைத்தொடர்பு சேவைகளை மக்களுக்கு அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்ய, தன் நிறுவனத்தின் புதிய 4ஜி சிம் கார்டுகளை இந்தியா முழுவதிலும் உள்ள மக்களுக்குச் சென்றடையும் விதத்தில் விற்பனை மற்றும் விநியோக பணிகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிறுவனத்தில் இருந்து கிடைத்த தகவல்கள் படி திங்கள் அல்லது செவ்வாய்க்கிழமைக்குள் விநியோகிஸ்தர்கள் கைகளில் ரிலையன்ஸ் ஜியோவின் 4ஜி சிம் கிடைக்கும் எனத் தெரிகிறது. ரிலையன்ஸ் ஜியோ இன்போகாம் விற்பனை செய்யும் LYF மொபைல் மற்றும் இதர 4ஜி மொபைல்களை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு ரிலையன்ஸ் ஜியோவின் 4ஜி சிம் இலவசமாக அளிக்கப்படுகிறது. இதர வாடிக்கையாளர்கள் ரிலையன்ஸ் நிர்ணயம் செய்யப்பட்ட விலையில் சிம் கார்டுகளைப் பெறலாம். ஏற்கனவே இந்நிறுவனம் சோதனை திட்டமாக இந்நிறுவன ஊழியர்களுக்கு இலவச சேவை அளித்து வரும் நிலையில், இச்சோதனை திட்டத்தை விரிவாக்கம் செய்யும் பொருட்டுத் தற்போது புதிய வாடிக்கையாளர் சிலருக்கு மட்டும் தனது சேவையை அளிக்கத் திட்டமிட்டுள்ளது ரிலையன்ஸ் ஜியோ. இதன் படி இந்நிறுவனத்தைச் சிம்-களைப் பெறும் வாடிக்கையாளர்கள் தங்களது Customers Application Form சமர்ப்பித்த 4 மணிநேரத்தில் சிம் கார்டுகல் ஆக்டிவேட் செய்யப்படும். இந்த முறையைத் தான் பெரும்பாலான டெலிகாம் நிறுவனங்கள் கடைப்பிடிக்கும் முறை என்பது குறிப்பிடத்தக்கது. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்தின் தலைவரான முகேஷ் அம்பானி 2015ஆம் ஆண்டின் டிசம்பர் மாதத்திலேயே ரிலையன்ஸ் ஜியோ நிறுவன சேவை இந்தியா முழுவதும் என அறிவித்த நிலையில், டிசம்பர் 2015ஆம் மாதம் இந்நிறுவன ஊழியர்களுக்கு மட்டுமே அறிவிக்கப்பட்டது. ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் டெலிகாம் சேவை அறிமுகம் செய்யக் கடந்த ஒரு வருடமாக இந்நிறுவனம் போராடி வருகிறது. ஆனால் பல்வேறு காரணங்களுக்காகத் தடைப்பட்டு வருகிறது. இந்நிறுவனத்தின் அறிமுகம் குறித்து இதுவரை எவ்விதமான விபரமும் தெரியவில்லை. (அம்பானிக்கும் மட்டும் தான் தெரியும்) இந்தியாவில் இந்நிறுவனத்தின் சேவை அறிமுகம் செய்யப்பட்டால் ரிலையன்ஸ் ஜியோ சுமார் 28 கோடி வாடிக்கையாளர்களைப் பெறும் எனச் சந்தை கணிப்புகள் தெரிவிக்கிறது. ரிலையன்ஸ் ஜியோ வருகையால் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்படுவது தற்போது நாட்டின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனமாகத் திகழும் ஏர்டெல் தான். இந்நிறுவனத்தின் அறிமுகத்தை விரும்பாத நிறுவன பட்டியலில் ஏர்டெல், ஐடியா மற்றும் வோடபோன் ஆகியவை முக்கிய இடத்தைப் பிடிக்கிறது. தங்கம் விலை | வெள்ளி விலை |வங்கி விடுமுறை நாட்கள் |டாலர்-ரூபாய் மதிப்புகள் | பங்குச்சந்தை நிலை | வங்கி IFSC குறியீடு இனி உங்கள் தமிழ் குட்ரிட்டன்ஸ் தளத்தைப் பேஸ்புக், கூகுள் பிளஸ் மற்றும் டிவிட்டர் பக்கங்களின் மூலமும் இணைந்திடலாம். கிளிக் பண்ணுங்க.. ஷேர் பண்ணுங்க..
சிம் விற்பனை
இலவசம்
சோதனை திட்டம்
டிசம்பர் 2015
அம்பானிக்கு தான் வெளிச்சம்
28 கோடி வாடிக்கையாளர்
ஏர்டெல்
ஜியோ-வின் புதிய 'ஓபன் ஆபீஸ்'
தமிழ் குட்ரிட்டன்ஸ் சேவைகள்
சமுக வலைத்தள இணைப்புகள்
More From GoodReturns

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !



Click it and Unblock the Notifications