மும்பை: ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவரான அனில் அம்பானி தனது கட்டுப்பாட்டில் இருக்கும் ரிலையன்ஸ் டிபென்ஸ் நிறுவனத்தின் வாயிலாக முதல் கப்பலை டெலிவரி செய்துள்ளார்.
இப்புதிய கப்பலின் மதிப்பு சுமார் 700 கோடி ரூபாய் என அனில் அம்பானி தெரிவித்துள்ளார்.
பிப்பாவ் நிறுவன கைப்பற்றுதல்
அனில் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் டிபென்ஸ் நிறுவனம் 2015ஆம் ஆண்டில் மிகப்பெரிய தொகைக்குக் கப்பல் கட்டுமான நிறுவனமான பிப்பாவ் நிறுவனத்தைக் கைப்பற்றத் துவங்கியது. இதன் முழுமையான கைப்பற்றும் நடவடிக்கை ஜனவரி 18, 2016ஆம் அன்று முடிந்தது.
எண்ணெய் கப்பலை
இந்நிறுவனத்தைக் கைப்பற்றிய சில நாட்களில் ரிலையன்ஸ் டிபென்ஸ் நிறுவனம் 700 கோடி ரூபாய் மதிப்புள்ள எண்ணெய் கப்பலை நாட்டின் பொதுத்துறை நிறுனமான ஓஎன்ஜிசி நிறுவனத்திற்கு டெலிவரி செய்துள்ளது.
7 கப்பல்கள்
ரிலையன்ஸ் டிபென்ஸ் நிறுவனம் துவங்கப்பட்டு இதுவரை 7 கப்பல்களை இந்திய நிறுவனங்களுக்கு டெலிவரி செய்துள்ளது.
மேக் இன் இந்தியா
இக்கப்பல் முழுமையாக இந்தியாவிலேயே வடிவமைக்கப்பட்டு முழுமையாகக் கட்டமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
1,800 டன் சரக்கு
மேலும் ஓஎன்ஜிசி நிறுவனத்திற்கு டெலிவரி செய்யப்பட்ட கப்பலில் 1,800 டன் சரக்கு ஏற்றும் சக்திக் கொண்டது. அதுமட்டும் அல்லாமல் இக்கப்பலில் எண்ணெய் மட்டும் அல்லாமல், குடித் தண்ணீர், சிமெண்ட் பொருட்களையும் சரக்கு போக்குவரத்திற்காகப் பயன்படுத்தலாம்.
முக்கிய வாடிக்கையாளர்
இந்நிலையில் தற்போது ரிலையன்ஸ் டிபென்ஸ் நிறுவன வாடிக்கையாளர்கள் பட்டியலில் இந்திய நிறுவனங்கள் மட்டும் அல்லாலமல் டிரான்ஸ்ஓஷன், ஷெல்ப் டிரில்லிங், என்பிசிசி மற்றும் நோபல் எனர்ஜி ஆகிய நிறுவனங்களையும் முக்கிய வாடிக்கையாளர்களாகக் கொண்டு இயங்குகிறது.
முதல் நிறுவனம்
போர் கப்பல்களை வடிவமைக்கவும், தயாரிக்கவும் உரிமம் மற்றும் ஆர்டர்களைப் பெற்ற முதல் நிறுவனம் ரிலையன்ஸ் டிபென்ஸ் என்பது குறிப்பிடத்தக்கது.
ரஷ்யா
அடுத்தச் சில மாதங்களில் ரிலையன்ஸ் டிபென்ஸ் நிறுவனம் ரஷ்ய நிறுவனத்துடன் இணைந்து போர் கப்பல்களை வடிவமைக்கும் மற்றும் பழுது பார்க்கும் பணிகளைத் துவங்க உள்ளது.
கோடீஸ்வர வாரிசுகள்
இப்படியும் சில
தமிழ் குட்ரிட்டன்ஸ் சேவைகள்
தங்கம் விலை | வெள்ளி விலை |வங்கி விடுமுறை நாட்கள் |டாலர்-ரூபாய் மதிப்புகள் | பங்குச்சந்தை நிலை | வங்கி IFSC குறியீடு
சமுக வலைத்தள இணைப்புகள்
இனி உங்கள் தமிழ் குட்ரிட்டன்ஸ் தளத்தைப் பேஸ்புக், கூகுள் பிளஸ் மற்றும் டிவிட்டர் பக்கங்களின் மூலமும் இணைந்திடலாம்.
கிளிக் பண்ணுங்க.. ஷேர் பண்ணுங்க..
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications