சென்னை: பொதுவாக ரிசர்வ் வங்கி தனது ரெப்போ விகிதத்தைக் குறைத்தால் வணிக வங்கிகளும் தனது வட்டி விகிதத்தில் மாற்றத்தைக் கொண்டு வரும்.
இதனால் சமாணியர்களுக்கு அதிகளவில் பயன்படும் வீட்டுக்கடன், வாகன கடன், தனிநபர் கடன், விவசாயக் கடன் மற்றும் கல்விக் கடன் என அனைத்து வகையான கடன்களின் வட்டி அளவுகள் குறையும்.
இதுமட்டும் அல்லாமல் வாங்கிய கடனுக்கான ஈஎம்ஐ அளவுகளும் குறையும். வங்கிகள் வட்டி அளவுகளைக் குறைத்தபின் உங்களது ஈஎம்ஐ கட்டணம் குறையவில்லை என்றால் உடனடியாக வங்கியை அணுகவும்.
வங்கிகள் மறுப்பு
ஆனால் கடந்த சில ஆண்டுகளாக ரிசர்வ் வங்கி எவ்வளவு வட்டியைக் குறைத்தாலும், வணிக வங்கிகள் வட்டி விகிதத்தைக் குறைக்கவில்லை. இதற்கு முக்கியக் காரணம் வங்கிகள் தங்களது லாப அளவுகளை மேம்படுத்திக் கொள்ளவே இப்படிச் செய்தது.
வைப்பு நிதியில் பிரச்சனை
அதுமட்டும் அல்லாமல் ரிசர்வ் வங்கியின் அறிவிப்புகளை ஏற்று வணிக வங்கிகள் தொடர்ந்து வட்டியைக் குறைத்தால் வங்கி டெப்பாசிட் விகிதம் குறையும்.
இதனால் மக்கள் வங்கிகளில் டெப்பாசிட் செய்யாமல் போஸ்ட் ஆபீஸ் நிலைய சேமிப்புத் திட்டத்தில் அதிகளவில் டெப்பாசிட் செய்வார்கள் இதனால் வங்கிகள் கடுமையாகப் பாதிக்கப்படும்.
மத்திய அரசின் அறிவிப்பு
இப்பிரச்சனைகளைக் களையும் வகையில் மத்திய அரசு தற்போது தபால் நிலையங்களில் அளிக்கப்படும் சிறு மற்றும் குறுகிய கால வைப்பு நிதி திட்டத்தின் வட்டி விகிதத்தைக் குறைத்துள்ளது.
எதிர்பார்ப்பு
இதனால் தற்போது வங்கிகள் தனது வட்டி விகிதத்தைக் கணிசமாகக் குறைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வளர்ச்சி
வங்கிகள் தங்களது வட்டி விகிதத்தைக் குறைக்கும் போது நாட்டில் பணப்புழக்கம் அதிகரிக்கும். இதனால் நாட்டின் நிதிநிலையும் பொருளாதாரமும் வளர்ச்சி அடையும்.
தமிழ் குட்ரிட்டன்ஸ் சேவைகள்
தங்கம் விலை | வெள்ளி விலை |வங்கி விடுமுறை நாட்கள் |டாலர்-ரூபாய் மதிப்புகள் | பங்குச்சந்தை நிலை | வங்கி IFSC குறியீடு
சமுக வலைத்தள இணைப்புகள்
இனி உங்கள் தமிழ் குட்ரிட்டன்ஸ் தளத்தைப் பேஸ்புக், கூகுள் பிளஸ் மற்றும் டிவிட்டர் பக்கங்களின் மூலமும் இணைந்திடலாம்.
கிளிக் பண்ணுங்க.. ஷேர் பண்ணுங்க..


Click it and Unblock the Notifications