தூக்கிய அடிக்க வருகிறது 'ரிலையன்ஸ் ஜியோ'.. 10கேபி இண்டர்நெட் டேட்டா விலை வெறும் 0.5 பைசா..!

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: நாட்டின் மிகப்பெரிய பணக்காரர் முகேஷ் அம்பானி தலைமை வகிக்கும் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் அறிமுகம் செய்ய உள்ள டெலிகாம் சேவையில் 10 கேபி இண்டர்நெட் டேட்டாவிற்கு வெறும் 0.5 பைசா என்ற மிக மலிவான விலையை நிர்ணயம் செய்துள்ளது.

 

சந்தையில் உள்ள ஏர்டெல், வோடபோன் மற்றும் ஐடியா செல்லுலார் போன்ற நிறுவனங்கள் 10 கேபி இண்டர்நெட் டேட்டாவிற்குச் சுமார் 5 பைசா வரையிலான கட்டணத்தை வசூல் செய்கிறது.

இதனால் ஏர்டெல், வோடபோன், ஐடியா போன்ற நிறுவனங்கள் வயிற்றில் நெருப்பைக் கட்டிக்கொண்டு இருக்கிறது.

சிம் கார்டுகள்

சிம் கார்டுகள்

கடந்த வாரம் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தில் இருந்து சோதனை திட்டத்திற்காகத் தனது டீலர்களின் பயன்பாட்டிற்காக மட்டும் பிரத்தியேகமான சிம் கார்டுகள் இந்தியாவில் உள்ள அனைத்து ரிலையன்ஸ் டிஜிட்டல் எக்ஸ்பிரஸ் கடைகளிலும் ரிலையன்ஸ் ஜியோ அனுப்பப்பட்டுள்ளது.

சேவைகளும் கட்டணங்களும்..

சேவைகளும் கட்டணங்களும்..

சிம் கார்டுடன் உள்ள சேவைக்கான கட்டணங்கள் படி ஜியோ நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு லோக்கல் மற்றும் எஸ்டிடி கால்களுக்கு ஒரு நொடிக்கு 2 பைசா, எஸ்எம்எஸ் 1 ரூபாய், சர்வதேச எஸ்எம்எஸ் 5 ரூபாய் எனக் கட்டணங்கள் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இதேபோல் ஒரு நொடிக்கான விடியோ காலுக்கு 5 பைசா எனவும் ஜியோ கூடியுள்ளது. இந்த விற்பனை பொது விற்பனைக்கு அல்ல.

 

இண்டர்நெட் டேட்டா
 

இண்டர்நெட் டேட்டா

சந்தையில் ஏர்டெல், வோடபோன், டாடா டொக்கோமோ, ஐடியா நிறுவனங்கள் 10 கேபி இண்டர்நெட் டேட்டாவிற்கு 5 பைசா வசூல் செய்யும் நிலையில், ரிலையன்ஸ் ஜியோ 10 கேபி இண்டர்நெட் டேட்டாவிற்கு வெறும் 0.5 பைசா என்ற மிக மலிவான விலையை நிர்ணயம் செய்துள்ளது.

இதனால் டெலிகாம் சந்தையில் மிகப்பெரிய புரட்சி வெடிக்க உள்ளது.

 

துவக்கத் திட்டம்

துவக்கத் திட்டம்

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் சந்கையில் வாடிக்கையாளர்களைக் கவர்வதற்காக 4,500 நிமிடங்கள் வாயிஸ் கால், 3,000 எஸ்எம்எஸ் மற்றும் 75ஜிபி இண்டநெட் டேட்டா என அனைத்தையும் வெறும் 200 ரூபாய்க்கு அளிப்பதாக ஜியோ நிறுவன அதிகாரிகள் சிலர் தெரிவித்துள்ளனர்.

ஏர்டெல்

ஏர்டெல்

இந்நிறுவனத்தின் 28 நாள் காலக்கெடு கொண்ட 3ஜி/4ஜி டேட்டா திட்டங்கள் வெறும் 259 ரூபாய் என்ற விலையில் விற்பனை செய்கிறது. அதேபோல் வோடபோன் 257 ரூபாய் என்ற விலையில் விற்பனை செய்கிறது.

ரிலையன்ஸ் டிஜிட்டல் எக்ஸ்பிரஸ்

ரிலையன்ஸ் டிஜிட்டல் எக்ஸ்பிரஸ்

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் ரிலையன்ஸ் டிஜிட்டல் எக்ஸ்பிரஸ் கிளைகளுக்கு 4ஜி சிம் உடன் LYF பிராண்ட் ஸ்மார்ட்போன்களையும் அனுப்பி வைத்துள்ளது.

ஐபிஎல்

இந்நிலையில் தனது ஜியோ சேவை மற்றும் LYF ஸ்மார்ட்போன் விற்பனையை மேம்படுத்தும் விதமாக ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் LYF ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளது ரிலையன்ஸ் ஜியோ.

மேலும் மும்பை இன்டியன்ஸ் சீருடையில் கைபக்கத்தில் SAP நிறுவனத்திற்கு பதிலாக LYF ஸ்மார்ட்போன் லோகோ பதியப்படுகிறது.

 

LYF ஸ்மார்ட்போன் விளம்பரம்

LYF ஸ்மார்ட்போன் விளம்பரம்

இந்நிறுவனத்தின் ஸ்மார்ட்போன் தயாரிப்புகளுக்கான விளம்பரத்திற்கு ரிலையன்ஸ் ஜியோ இந்தியா மற்றும் சர்வதேச நாடுகளில் இருந்து மாடல் அழகிகளை ஒப்பந்தம் செய்துள்ளார்.

படம்: rtn.asia

 

1,50,000 கோடி ரூபாய்

1,50,000 கோடி ரூபாய்

முகேஷ் அம்பானி இந்தியாவின் வேகமாக வளர்ந்து வரும் டெலிகாம் துறையில் மிகப்பெரிய வர்த்தகத்தை அடையும் நோக்கிய வரலாற்றில் மிகப்பெரிய அளவில் முதலீடு செய்து ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தை துவங்கியுள்ளார்.

இந்நிறுவனத்தில் முகேஷ் அம்பானி செய்த முதலீடு மட்டும் 1,50,000 கோடி ரூபாய்.

சுனில் மிட்டல்

சுனில் மிட்டல்

உலக மக்களுக்கு டிஜிட்டல் சேவையும், எளிமையான மற்றும் குறைவான கட்டணத்தில் தகவல் தொழில்நுட்ப சேவையும் அளித்திட உலக நாடுகள் மத்தியில் ஒரு பிரத்தியேக பாலம் வேண்டும் எனத் தெரிவித்தார்.

<strong><em>'அனைவருக்கும் இண்டர்நெட்'.. ஜி20 மாநாட்டில் கலக்கிய 'சுனில் மிட்டல்'..!</em></strong>'அனைவருக்கும் இண்டர்நெட்'.. ஜி20 மாநாட்டில் கலக்கிய 'சுனில் மிட்டல்'..!

ஏர்டெல் வாடிக்கையா..." data-gal-src="http:///img/600x100/2016/04/06-1459926399-1-telecom.jpg">
பிற முக்கிய செய்திகள்

பிற முக்கிய செய்திகள்

<strong>ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு 50% கேஷ்பேக் ஆஃபர்..!</strong>ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு 50% கேஷ்பேக் ஆஃபர்..!

<strong>மோடி ஜி.. இந்தியாவில் ரூ.13,000 கோடி முதலீடு செய்யப் போறோம்: வோடபோன் சீஇஓ</strong>மோடி ஜி.. இந்தியாவில் ரூ.13,000 கோடி முதலீடு செய்யப் போறோம்: வோடபோன் சீஇஓ

பான் கார்டு

எளிமையான முறையில் பான் கார்டு பெறுவது எப்படி..?

வளைகுடா நாடுகள்

வளைகுடா நாடுகள்

<strong>இந்தியர்களைத் தொடர்ந்து வெளியேற்றும் வளைகுடா நாடுகள்.. என்ன காரணம்..?</strong>இந்தியர்களைத் தொடர்ந்து வெளியேற்றும் வளைகுடா நாடுகள்.. என்ன காரணம்..?

சன்எடிசன்

சன்எடிசன்

திவாலாகப் போகும் 'சன்எடிசன்' நிறுவனத்தின் மீது கண்.. அதானி குழுமத்தின் புதிய முடிவுகள்..!திவாலாகப் போகும் 'சன்எடிசன்' நிறுவனத்தின் மீது கண்.. அதானி குழுமத்தின் புதிய முடிவுகள்..!

தமிழ் குட்ரிட்டன்ஸ் சேவைகள்

தமிழ் குட்ரிட்டன்ஸ் சேவைகள்

தங்கம் விலை | வெள்ளி விலை |வங்கி விடுமுறை நாட்கள் |டாலர்-ரூபாய் மதிப்புகள் | பங்குச்சந்தை நிலை | வங்கி IFSC குறியீடு

 

சமுக வலைத்தள இணைப்புகள்

சமுக வலைத்தள இணைப்புகள்

இனி உங்கள் தமிழ் குட்ரிட்டன்ஸ் தளத்தைப் பேஸ்புக், கூகுள் பிளஸ் மற்றும் டிவிட்டர் பக்கங்களின் மூலமும் இணைந்திடலாம்.

கிளிக் பண்ணுங்க.. ஷேர் பண்ணுங்க..

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Reliance Jio could stump market with low data tariffs at 0.5 paisa per 10 kb

Reliance Jio Infocomm could well stun the market, offering 0.5 paisa per 10 kb of data usage, which is substantially lower than the 4 paise per 10 Kb data being charged by India's top telcos Bharti Airtel, Vodafone India, Idea Cellular.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X