டெல்லி: மொபைல் மற்றும் ஸ்மார்ட்போன் தயாரிப்பிலும் சரி, விற்பனையிலும் சரி எப்போதும் முதல் இடத்தில் இருக்கும் சாம்சங் நிறுவனம், இந்திய சந்தையில் சீன நிறுவனங்கள் மத்தியிலான போட்டியில் கடந்த ஒரு வருடமாக இழந்த இடத்தை ஒரே ஒரு போனின் அறிமுகத்தின் மூலம் பிடித்துள்ளது.
இதைப் பார்த்து வழக்கம் போல் ஆடம்பர மொபைல் விற்பனை நிறுவனமான ஆப்பிள் கடுப்பாகி போனது.
சாம்சங்
கடந்த நான்கு காலாண்டுகளில் இந்திய சந்தையில் மொபைல் விற்பனையில் கொடிகட்டி பறந்த சாம்சங், மைக்ரோமேக்ஸ், லாவா போன்ற உள்நாட்டு நிறுவனங்களாலும், சீனா நிறுவனங்களாலும் தொடர் வர்த்தக மற்றும் வருவாய் சரிவை சந்தித்தது.
இந்நிலை இந்தியாவில் மட்டும் அல்லாமல் உலக நாடுகளிலும் இதேபோன்ற நெருக்கடியைத் தான் சாம்சங் சந்தித்தது.
புதிய மொபைல் அறிமுகம்..
நடப்பு நிதியாண்டில் ஆடம்பர சந்தையில் ஆப்பிள் நிறுவனத்துடன் போட்டி போடுவதை விடுத்து வர்த்தகத்தை அதிகரித்துக்கொள்ளச் சாம்சங், கேலக்ஸி ஜே வரிசை போன்களை அறிமுகம் செய்தது இதனால் 2014ஆம் ஆண்டு இறுதியில் 27.4 சதவீதமாக இருந்த சந்தை மதிப்பு 2016ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் 30 சதவீதத்தைத் தாண்டியுள்ளது.
இந்திய சந்தை
பொதுவாக இந்திய சந்தையில் மக்கள் ஒரு போனை வாங்கினால் நீண்ட காலம் அதனைப் பயன்படுத்தும் வழக்கம் உள்ளவர்கள். அதுமட்டும் அல்லாமல் மலிவான விலை உடையப் பொருட்களை அதிகளவில் விரும்பும் மக்களை எண்ணிக்கையைக் கொண்டுள்ளது இந்தியா.
சாம்சங் கேலக்ஸி ஜே
அந்த வகையில் தற்போது சாம்சங் அறிமுகப்படுத்தியுள்ள கேலக்ஸி ஜே வரிசை போன்கள், மலிவானதாகவும், தற்போதைய காலத்திற்கு ஏற்ற வகையில் நீண்ட பேட்டரி காலம், குறைந்த அளவிலான இணையப் பயன்பாடு (data save methodology), வேகமாகச் செயல்படக்கூடும் அம்சங்கள் கொண்ட மென்பொருள் என அனைத்து அசத்தலாக உள்ளது.
அதுவும் மலிவான விலையில்..
முக்கிய அம்சம்..
மேலும் சாம்சங் கேலக்ஸி ஜே வரிசை போனில் இரு சக்கர வாகன ஓட்டிகளுக்குப் பயன்படும் வகையில் புதிய 'எஸ் பைக்' என்னும் செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதுவே இப்புதிய அறிமுகத்தில் உள்ள முக்கியச் சிறப்பம்சம்.
20 சதவீத சந்தை
2016ஆம் ஆண்டின் முதல் 3 மாதத்தில் மொத்த மொபைல் சந்தை மதிப்பில் 20 சதவீத சந்தை மதிப்புச் சாம்சங் கேலக்ஸி ஜே வரிசை போன்கள் தான் உள்ளது என மொபைல் சந்தை ஆய்வு அமைப்பு தெரிவித்துள்ளது.
முதல் இடம்..
உள்நாட்டு மற்றும் சீன நிறுவனங்களால் 2வது இடத்திற்குத் தள்ளப்பட வேண்டிய சாம்சங் தனது புதிய அறிமுகத்தால் முதல் இடத்தைப் பிடித்துள்ளது.
ஆப்பிள்
மேலும் 2016ஆம் ஆண்டில் 2 சதவீதமாக இருக்கும் ஆப்பிள் நிறுவன சந்தையை 10 சதவீதமாக உயர்த்த புதிய மாடல் போன்கள் அறிமுகம், விளம்பரத்திற்காகப் பல மில்லியன் டாலர் செலவு எனப் பல வகையில் ஆப்பிள் நிறுவனம் திட்டம் தீட்டி வருகிறது.
சாம்சங் - ஆப்பிள்
சாம்சங் நிறுவன அறிமுகத்தால் தற்போது ஆப்பிள் தனது சந்தை விரிவாக்கம் அதிகளவில் பாதித்துள்ளது.
ஆடம்பர சந்தை
இந்தியாவில் ஆப்பிள் நிறுவனம் தனது ஆடம்பர மொபைல் தயாரிப்பான ஐபோன் 6எஸ் மற்றும் 6எஸ் பிளஸ் பொருட்களை அறிமுகப்படுத்தும் நிலையில் அதற்க தக்க போட்டி அளிக்கச் சாம்சங் எஸ்7 என்ற புதிய ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது.
போட்டி
சாம்சங் - ஆப்பிள் ஆகிய இரு நிறுவனங்களின் போட்டிக்கு மத்தியில் இந்திய சந்தையில் ஒன்பிளஸ், சியோமி, மோட்டோரோலா, லெனோவோ, மைக்ரோமேக்ஸ், லாவா போன்ற பல நிறுவனங்கள் உள்ளது.
அடுத்த 3 முதல் 5 வருடத்தில் அமெரிக்காவை விடவும் மிகப்பெரிய மொபைல் சந்தையாக உருவெடுக்க உள்ளது இந்தியா. இதனைக் கைப்பற்றவே இத்தகைய போட்டி.
எஸ்பிஐ வங்கி
17,000 பணியிடங்கள் காலி..
பாகிஸ்தான்-அமெரிக்கா
பாகிஸ்தான் ஆயுத பலத்தை உயர்த்தும் 'அமெரிக்கா'.. இந்தியாவிற்கு வந்த புதிய பிரச்சனை..!
ரிலையன்ஸ் ஜியோ
தூக்கிய அடிக்க வருகிறது 'ரிலையன்ஸ் ஜியோ'..
தமிழ் குட்ரிட்டன்ஸ் சேவைகள்
தங்கம் விலை | வெள்ளி விலை |வங்கி விடுமுறை நாட்கள் |டாலர்-ரூபாய் மதிப்புகள் | பங்குச்சந்தை நிலை | வங்கி IFSC குறியீடு
சமுக வலைத்தள இணைப்புகள்
இனி உங்கள் தமிழ் குட்ரிட்டன்ஸ் தளத்தைப் பேஸ்புக், கூகுள் பிளஸ் மற்றும் டிவிட்டர் பக்கங்களின் மூலமும் இணைந்திடலாம்.
கிளிக் பண்ணுங்க.. ஷேர் பண்ணுங்க..
பங்குச்சந்தையின் நிலை
More From GoodReturns

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

தங்கம், வெள்ளி விலை: ஈரான் போர் நீட்டிப்பால் வரும் வாரத்தில் விலை உயருமா?

ரத்தகளறியான இந்திய பங்குச்சந்தை.. ரூ.12 லட்சம் கோடி இழப்பு.. கதறி அழும் முதலீட்டாளர்கள்..!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!



Click it and Unblock the Notifications