பெங்களூரு: இந்திய சந்தையில் நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கும் நேரம் இது. ஊழியர்கள் குறித்த செயல்திறன் ஆய்வுகள் மற்றும் கலந்தாய்வு என அனைத்துப் பணிகளுக்கும் நிறுவனங்கள் முடிந்த நிலையில், ஊழியர்கள் தங்களுக்கான ஊதிய உயர்வை தெரிந்துகொள்ள மிகவும் ஆர்வமாக உள்ளனர்.
இந்நிலையில் நடப்பு நிதியாண்டில் சராசரியாக ஊழியர்களுக்கு 10-12 சதவீதம் வரையிலான ஊதிய உயர்வும், டாப் பர்ஃபாமர்ஸ் என அழைக்கப்படும் சிறந்த செயல் திறன் கொண்ட ஊழியர்களுக்கு 25 சதவீதம் வரையிலான உயர்வு அளிக்கப்படும் எனச் சந்தை வல்லுநர்கள் கூறுகின்றனர்.
பெல் கர்வ்
இன்றைய நிலையில் பெரும்பாலான கார்பரேட் நிறுவனங்கள் தங்களது ஊழியர்களுக்குப் பெல் கர்வ் முறையிலான ஊதிய உயர்வையே அளிக்கின்றனர். இதில் டாப், ஆவரேஜ் மற்றும் பாட்டம் என மூன்று தர நிலைகள் உள்ளது.
இதில் நிறுவனத்திற்குச் சாகமாகப் பெரும்பாலான ஊழியர்கள் ஆவரேஜ் என்ற நிலையிலேயே வைக்கப்படுகிறார்கள்.
மாற்றம்..
இந்நிலையில் தற்போது சந்தையில் இருக்கும் முன்னணி எச்சிஎல், விப்ரோ, டெக் மஹிந்திரா போன்ற முன்னணி நிறுவனங்கள் அப்ரைசல் முறையைத் தனது பாரம்பரிய பெல் கர்வ் முறையில் இருந்து விலகி தற்போது புதிய முறையைப் பயன்படுத்தி வருகின்றனர்.
இதன் எதிரொலியாகக் கடந்த 6 மாத காலத்தில் அக்சன்சர், இன்போசிஸ், ஆக்சிஸ் வங்தி, மற்றும் கேபிஎம்ஜி ஆகிய நிறுவனங்கள் பெல் கர்வ் முறையைத் தவிர்த்து புதிய அப்ரைசல் முறையைக் கையாண்டு வருகிறது.
டீம்லீஸ் சர்வீசஸ்
நாட்டின் முன்னணி ஆட்சேர்ப்பு நிறுவனமான டீம்லீஸ் சர்வீசஸ் துணை தலைவர் கூறுகையில், நடப்பு நிதியாண்டில் இந்திய ஐடி நிறுவன ஊழியர்கள் 13.5 சதவீதம் வரையிலான ஊதிய உயர்வு பெறுவார்கள், மேலும் டாப் டாப் பர்ஃபாமர்களுக்கு 20-25 சதவீதம் வரையிலான உயர்வு அளிக்கப்படும் எனக் குனால் சென் தெரிவித்தார்.
குளோபல்ஹன்ட்
கடந்த வருடத்தை விட நடப்பு நிதியாண்டில் தனியார் நிறுவன ஊழியர்களுக்கு அதிகளவிலான ஊதிய உயர்வு பெறுவார்கள் எனக் குளோபல்ஹன்ட் நிறுவனத்தின் நிர்வாகத் தலைவர் சுனில் கோயல் தெரிவித்தார்.
திடீர் உயர்வு..
சில வருடங்களுக்கு முன் தனியார் ஐடி நிறுவனங்களில் சராசரி சம்பள உயர்வு வெறும் 6 -8 சதவீதமாக இருந்த நிலையில், தற்போது 10-12 சதவீதமாக உயர்ந்துள்ளது.
இதற்கு முக்கியக் காரணம், ஈகாமர்ஸ் துறையும் மற்றும் இந்தியாவில் வளர்ந்து வரும் ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் ஆதிக்கம் தான்.
ஐடி துறை..
ஸ்டார்ட் அப்
ஈகாமர்ஸ்
ஊதிய கமிஷன்
தமிழ் குட்ரிட்டன்ஸ் சேவைகள்
தங்கம் விலை | வெள்ளி விலை |வங்கி விடுமுறை நாட்கள் |டாலர்-ரூபாய் மதிப்புகள் | பங்குச்சந்தை நிலை | வங்கி IFSC குறியீடு
சமுக வலைத்தள இணைப்புகள்
இனி உங்கள் தமிழ் குட்ரிட்டன்ஸ் தளத்தைப் பேஸ்புக், கூகுள் பிளஸ் மற்றும் டிவிட்டர் பக்கங்களின் மூலமும் இணைந்திடலாம்.
கிளிக் பண்ணுங்க.. ஷேர் பண்ணுங்க..


Click it and Unblock the Notifications