'டிசிஎஸ்' மீது 1 பில்லியன் டாலர் அபராதம்.. திருட்டு வழக்கில் அமெரிக்க நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..!

மும்பை: நாட்டின் மிகப்பெரிய மென்பொருள் ஏற்றுமதி நிறுவனமாகத் திகழும் டிசிஎஸ் மீது தொடுக்கப்பட்ட வர்த்தக ரகசியங்கள் திருட்டு வழக்கில் அமெரிக்க நீதிமன்றம் 1 பில்லியன் டாலர் அபராதம் விதித்துள்ளது.

இதனால் அமெரிக்க மற்றும் கனடா சந்தைகளில் இருக்கும் இந்திய ஐடி நிறுவனங்களின் வர்த்தகத்திற்கு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

திருட்டு வழக்கு

திருட்டு வழக்கு

அமெரிக்கச் சந்தையில் ஹெல்த்கேர் பிரிவில் மிகப்பெரிய அளவில் சாப்ட்வேர் சேவையை வழங்கி வரும் எபிக் சிஸ்டம்ஸ் நிறுவனத்தின் வர்த்தக ரகசியங்களைத் திருடி விட்டதாக டிசிஎஸ் நிறுவனத்தின் மீது அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டது.

விசாரணையும்.. அபராதமும்..

விசாரணையும்.. அபராதமும்..

இவ்வழக்கை விசாரித்த நீதிபதிகள், டிசிஎஸ் நிறுவனத்தின் மீது குற்றம் உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், இதனால் எபிக் சிஸ்டம்ஸ் நிறுவனத்திற்கு ஏற்பட்ட இழப்பீட்டுக்கு சுமார் 1 பில்லியன் டாலர் தொகையை டிசிஎஸ் நிறுவனத்தின் மீது அபராதம் விதித்துள்ளது.

அமெரிக்கச் சந்தை..

அமெரிக்கச் சந்தை..

இந்திய ஐடி நிறுவனங்கள் கடந்த சில ஆண்டுகளாக இந்திய சந்தையிலும் சரி, சர்வதேச சந்தையிலும் சரி, ஹெல்த்கேர் பிரிவில் புதிய வர்த்தகத்தைப் பெறவும், உலக நாடுகள் மத்தியில் இந்திய ஹெல்த்கேர் சேவைக்கு நல்ல மதிப்பை உருவாக்கவும் போராடி வருகிறது.

இந்நிலையில் டிசிஎஸ் நிறுவனத்தின் மீது விதிக்கப்பட்டுள்ள 1 பில்லியன் டாலர் அபராதம், இத்துறையைச் சார்ந்த இந்திய நிறுவனங்களுக்குச் சரி, பிற முக்கிய ஐடி நிறுவனங்களுக்கும் சரி மிகப்பெரிய பின்னடைவாக உருவாகியுள்ளது.

 

டிசிஎஸ் மறுப்பு

டிசிஎஸ் மறுப்பு

இந்நிலையில் அமெரிக்க நீதிமன்ற அறிவிப்பிற்கு எதிராக வழக்கு தொடர உள்ளோம் என்றும், எபிக் சிஸ்டம்ஸ் நிறுவனம் அளிக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் அனைத்தும் ஏற்புடையதல்ல என டிசிஎஸ் தெரிவித்துள்ளது.

எபிக் சிஸ்டம்ஸ்

எபிக் சிஸ்டம்ஸ்

இன்றைய நிலையில் பெரிய மற்றும் சிறிய மருத்துவமனைக்கு ஐடி சேவை அளிக்கும் வர்த்தகம் வேகமாகவும், மிகப்பெரிய அளவிலும், வளர்ந்துள்ளது. அமெரிக்கச் சந்தையில் இத்துறையில் மிகப்பெரிய நிறுவனமாகத் திகழ்வது எபிக் சிஸ்டம்ஸ்.

இத்துறையில் தனது வர்த்தகத்தை மேம்படுத்தவும், வர்த்தக விரிவாக்கத்திற்குப் புதிய நிறுவனங்களைக் கைப்பற்றவும் தயாராக உள்ள இந்திய நிறுவனங்கள் தயாராக உள்ளது. இதில் டிசிஎஸ் நிறுவனமும் ஒன்று.

 

வர்த்தகம் மற்றும் வருவாய்

வர்த்தகம் மற்றும் வருவாய்

3வது காலாண்டு முடிவில் டிசிஎஸ் நிறுவனத்தின் லைப்சையின்ஸ் பிரிவு மட்டும் மொத்த வருவாயில் சுமார் 7.3 சதவீத வருவாயைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

எபிக் சிஸ்டம்ஸ் வருடத்திற்கு 2 பில்லியன் டாலர் வருவாயைப் பெறுகிறது.

 

அபராதம்

அபராதம்

இந்நிலையில் அமெரிக்க நீதிமன்றம் அறிவித்துள்ள படி வர்த்தக ரகசியங்கள் திருட்டிற்காக டிசிஎஸ் நிறுவனம் மற்றும் டாடா அமெரிக்கா இன்டர்நேஷ்னல் ஆகிய இரு நிறுவனங்களும் இணைந்து 240 மில்லியன் டாலர் இழப்பீடாகவும், 700 மில்லியன் டாலர் அபராதத் தொகையாகவும் செலுத்த வேண்டும் என இவ்வழக்கிற்கான விசாரணையில் தீர்ப்பு கிடைத்துள்ளது.

இன்போசிஸ்

இன்போசிஸ்

ஏற்கனவே இன்போசிஸ் செய்த விசா முறைகேடு வழக்கு அமெரிக்க நீதிமன்றத்தில் நீங்காகக் கறையாக உள்ள நிலையில், தற்போது நாட்டின் மிகப்பெரிய ஐடி வர்த்தக நிறுவனமான டிசிஎஸ் திருட்டு வழக்கில் சிக்கியுள்ளது.

விசா பிரச்சனை

விசா பிரச்சனை

அதுமட்டும் அல்லாமல் இந்தியர்களைக் குறைவான சம்பளத்திற்கு அமெரிக்க நிறுவனங்களில் பணியில் அமர்த்தியதன் மூலம் பல நிறுவனங்கள் அமெரிக்கர்களைப் பணிநீக்கம் செய்தது. இதனால் அமெரிக்கச் சந்தையில் இந்திய ஐடி நிறுவனங்கள் மீது விசா முறைகேடு வழக்கை அமெரிக்கத் தலைவர்கள் தொடுத்தனர்.

இந்த வழக்கும் தற்போது நீதிமன்றத்தில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

 

விசா கட்டுப்பாடுகள்

விசா கட்டுப்பாடுகள்

இதனைத் தொடர்ந்து அமெரிக்காவில் பணியாற்ற விசா வழங்குவதில் பல தடைகளையும் விதிமுறைகளையும் அமெரிக்க அரசு விதித்தது. இதனால் பல ஆயிரக்கணக்கான இந்திய ஐடி நிறுவனங்கள் பாதிக்கப்பட்டது.

கட்டம் கட்டிவிட்டார்கள்

கட்டம் கட்டிவிட்டார்கள்

தற்போது அமெரிக்க அரசு எடுத்து வரும் அனைத்து நடவடிக்கைகளும் அவுட்சோர்சிங் நிறுவனங்களுக்கு எதிராக அமைந்து வருகிறது. இதனால் இந்திய ஐடி நிறுவனங்கள் மூலம் அமெரிக்கா செல்லும் பணியாளர்கள் எண்ணிக்கை கடந்த சில மாதங்களில் குறைந்துள்ளது.

அமெரிக்கச் சந்தையில் இதேநிலை தொடர்ந்தால் அடுத்தச் சில வருடங்களில் இந்திய ஐடி நிறுவனங்களின் நிலை மிகவும் மோசமான நிலையை அடையும்.

 

ஹெச்1-பி விசா முறைகேடு

ஹெச்1-பி விசா முறைகேடு

புதிய கட்டுப்பாடு..

புதிய கட்டுப்பாடு..

ஹெச்-2பி விசா

ஹெச்-2பி விசா

இந்தியாவில் மீண்டும் ரிசெஷன்..?

இந்தியாவில் மீண்டும் ரிசெஷன்..?

தமிழ் குட்ரிட்டன்ஸ் சேவைகள்

தமிழ் குட்ரிட்டன்ஸ் சேவைகள்

தங்கம் விலை | வெள்ளி விலை |வங்கி விடுமுறை நாட்கள் |டாலர்-ரூபாய் மதிப்புகள் | பங்குச்சந்தை நிலை | வங்கி IFSC குறியீடு

 

 

 

சமுக வலைத்தள இணைப்புகள்

சமுக வலைத்தள இணைப்புகள்

இனி உங்கள் தமிழ் குட்ரிட்டன்ஸ் தளத்தைப் பேஸ்புக், கூகுள் பிளஸ் மற்றும் டிவிட்டர் பக்கங்களின் மூலமும் இணைந்திடலாம்.

கிளிக் பண்ணுங்க.. ஷேர் பண்ணுங்க..

 

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+