ஒரு நாளுக்கு 75 கோடி ரூபாய் லாபம்.. மகிழ்ச்சியின் உச்சத்தில் முகேஷ் அம்பானி..!

மும்பை: நாட்டின் மிகப்பெரிய நிறுவன குழுமங்களில் ஒன்றான ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் மொத்த லாப அளவுகள் 16 சதவீதம் அதிகரித்து 7,398 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.

2015-16ஆம் நிதியாண்டின் 4வது காலாண்டில் இந்நிறுவனத்தின் சுத்திகரிப்புப் பரிவு மிகப்பெரிய வர்த்தகத்தைப் பெற்றுள்ளது, இதன் வளர்ச்சிக்குச் சாதகமாக, பெட்ரோகெமிக்கல் வர்த்தகத்தில் அதிகளவிலான லாபத்தை ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தெரிவித்துள்ளது.

16% லாப உயர்வு..!

16% லாப உயர்வு..!

2016ஆம் நிதியாண்டில் ஜனவரி-மார்ச் மாத காலகட்டத்தில் முகேஷ் அம்பானி தலைமை வகிக்கும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் மொத்த லாப அளவு 16 சதவீதம் அதிகரித்து 7,398 கோடி ரூபாய் லாபம் பெற்றுள்ளது.

27,600 கோடி ரூபாய் லாபம்

27,600 கோடி ரூபாய் லாபம்

2016-ஆம் நிதியாண்டில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பல பிரச்சனைகளைச் சந்தித்தாலும், ரிலையன்ஸ் ஜியோ சேவைக் குறித்த தேதியில் சந்தையில் அறிவிக்க முடியாமல் போனாலும், இந்நிறுவனத்தை மொத்த லாபம் 17.2 சதவீத உயர்வில் 27,630 கோடி ரூபாயைப் பெற்றுள்ளது.

வருவாய் அளவில் சரிவு..

வருவாய் அளவில் சரிவு..

இந்நிறுவனத்தின் லாபம் 17.2 சதவீதம் உயர்ந்தாலும், வருவாய் அளவுகள் 8.9 சதவீத சரிவை சந்தித்துள்ளது. இதனால் 2015-16ஆம் நிதியாண்டில் இந்நிறுவனத்தின் மொத்த வருவாய் அளவு 64,569 கோடி ரூபாயாகச் சரிந்துள்ளது.

பெட்ரோல் உற்பத்தி

பெட்ரோல் உற்பத்தி

கடந்த காலாண்டில் இந்நிறுவனத்தின் மொத்த சுத்திகரிப்பு அளவு 17.8 மில்லியன் டன்னாக உயர்ந்துள்ளது. இந்நிலையில் ஒரு பேரலுக்கு 10.8 டாலராக விற்பனை செய்ததில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் அதிகளவிலான லாபத்தை எட்டியுள்ளது.

கடந்த வருடம் இதன் மதிப்பு 10.1 டாலராக இருந்தது குறிப்பிடத்தக்கது.

 

பெட்ரோல் மற்றும் டீசல் விநியோகம்

பெட்ரோல் மற்றும் டீசல் விநியோகம்

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் உற்பத்தி அதிகரித்துள்ள நிலையில், இந்நிறுவனத்தின் ரீடைல் கிளைகளை 2016ஆம் ஆண்டுக்குள் 1,400ஆக உயர்த்த ரிலையன்ஸ் திட்டமிட்டுள்ளது.

தற்போது நாடு முழுவதும் சுமார் 950 கிளைகள் முழுமையாக இயங்கி வருகிறது.

 

ரிலையன்ஸ் ரீடைல்

ரிலையன்ஸ் ரீடைல்

இந்நிலையில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் என்னும் மிகப்பெரிய சாம்ராஜியத்தில் ஈஷா அம்பானி தலைமை வகிக்கும் ரிலையன்ஸ் ரீடைல் கடந்த வருடத்தை விடவும் 20.7 சதவீத வளர்ச்சி அடைந்து வருகிறது. 2015-16ஆம் நிதியாண்டின் 4வது காலாண்டில் ரிலையன்ஸ் ரீடைல் பிரிவு 5,781 கோடி ரூபாய் வருவாய் பெற்றுள்ளது.

50,000 கோடி ரூபாய்

50,000 கோடி ரூபாய்

2016ஆம் நிதியாண்டில் வர்த்தக விரிவாக்கத்திற்காகச் சுமார் 50,000 கோடி ரூபாய் முதலீடு செய்ய உள்ளதாக ரிலையன்ஸ் தலைமை நிதியியல் அதிகாரி ஸ்ரீகாந் தெரிவித்தார்.

ரிலையன்ஸ் ஜியோ

ரிலையன்ஸ் ஜியோ

நடப்பு நிதியாண்டில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் டிஜிட்டல் கிளை நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ இன்போகாம் லிமிடெட் நிறுவனத்தில் 1.50 லட்சம் கோடி முதலீடு செய்யத் திட்டமிட்டுள்ளார் முகேஷ் அம்பானி.

இப்பிரிவில் ஏற்கனவே 1.20 லட்சம் கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் சேவைகள்

தமிழ் குட்ரிட்டன்ஸ் சேவைகள்

தங்கம் விலை | வெள்ளி விலை |வங்கி விடுமுறை நாட்கள் |டாலர்-ரூபாய் மதிப்புகள் | பங்குச்சந்தை நிலை | வங்கி IFSC குறியீடு

 

சமுக வலைத்தள இணைப்புகள்

சமுக வலைத்தள இணைப்புகள்

இனி உங்கள் தமிழ் குட்ரிட்டன்ஸ் தளத்தைப் பேஸ்புக், கூகுள் பிளஸ் மற்றும் டிவிட்டர் பக்கங்களின் மூலமும் இணைந்திடலாம்.

கிளிக் பண்ணுங்க.. ஷேர் பண்ணுங்க..

 

ராஜதந்திரம்

ராஜதந்திரம்

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+