பெங்களூரு: சர்வதேச சந்தையில் மென்பொருள் வடிமைப்பு மற்றும் சேவையில் முன்னணி நிறுவனமாக திகழும் காக்னிசென்ட் டெக்னாலஜி சொல்யூஷன்ஸ், 2015ஆம் ஆண்டில் மிக சிறப்பாக செயல்பட்டதை தொடர்ந்து இந்நிறுவனத்தின் உயர் அதிகாரிகளுக்கு மிகப்பெரிய அளவிலான போனஸ் மற்றும் சம்பளத்தை அறிவித்துள்ளது.
இதனால் இந்நிறுனத்தின் ஊழியர்கள் மகிழ்ச்சியில் திளைத்துள்ளனர்.
காக்னிசென்ட் நிறுவனம்
அமெரிக்க பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட காக்னிசென்ட், தனது சக போட்டி நிறுவனமான இன்போசிஸ், டிசிஎஸ், விப்ரோ மற்றும் எச்சிஎல் நிறுவனங்களை விடவும் மிகவும் சிறப்பான முறையில் செயல்பட்டு மிகப்பெரிய அளவிலான லாபத்தை சந்தித்துள்ளதாக சிடிஎஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
போனஸ் மற்றும் சம்பளம்
இந்நிலையில் இந்த வெற்றியை கொண்டாடும் வகையிலும், ஊழியர்கள் நிறுவனத்தில் நிலைத்திருக்கவும், தங்களது சிறப்பான பணிக்கு பாராட்டும் வகையில் அதிகப்படியான போனஸ் மற்றும் சம்பளத்தை வழங்கியுள்ளது.
பிரான்சிஸ்கோ டிசோசா
இந்நிலையில் காக்னிசென்ட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான பிரான்சிஸ்கோ டிசோசா மற்றும் அவரது நிர்வாக குழு 2015ஆம் ஆண்டின் வர்த்தக இலக்கை எட்டியுள்ளது. இதனால் இந்த மொத்த குழுவும், தங்களது வருடாந்திர இலக்கில் 142 சதவீதம் அளவிலான போனஸ் பெற்றுள்ளது.
தாறுமாறான வருவாய்..
இந்தியாவில் இருக்கும் மென்பொருள் நிறுவனங்கள் ஒரு இலக்கு வருவாய் பெறவே போராடும் நிலையில், காக்னிசென்ட் நிறுவனம் 2015ஆம் ஆண்டில் சுமார் 21 சதவீத வருவாய் வளர்ச்சியை அடைந்துள்ளது.
இந்தியாவும்.. ஊழியர்களும்..
சிடிஎஸ் நிறுவனம் அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு இயங்கினால், இந்நிறுவனத்தின் அதிகளவிலான ஊழியர்கள் கூட்டம் இந்தியாவில் இருந்து தான் செயல்படுகிறது. இதற்கு முக்கிய காரணம் குறைந்த செலவில் நிறைவான சேவையை பெற இந்தியா மிக சரியான இடம்.
டிசோசா சம்பள உயர்வு..!
2014ஆம் ஆண்டில் பிரான்சிஸ்கோ டிசோசா 11 மில்லியன் டாலர் என்ற மிகப்பெரிய சம்பளத்தை வாங்கிய நிலையில், கடந்த வருடம் 11.95 மில்லியன் டாலர் என சம்பளம் உயர்ந்து, டிசிஎஸ் சந்திரசேகரன், இன்போசிஸ் விஷால் சிக்கா, விப்ரோ அபித் அலி நீமுச்வாலா ஆகியோருக்கு இணையாக சம்பள உயர்வு அடைந்தார்.
தற்போது 2015ஆம் ஆண்டின் இலக்கை எட்டியதன் மூலம் புதிய சம்பளம் மற்றும் போன்ஸில் உயர்வும் இருக்கும்.
புதிய மாற்றம்
இந்நிலையில் உயர்மட்ட அதிகாரிகளின் செயல்திறன், ஊக்க தொகை வழங்குவதில் முக்கிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இனி வருடாந்திர அடிப்படையிலான சோதனை செய்யாமல், 2 வருடத்திற்கு ஒரு முறை என்ற சோதனையை செய்ய காக்னிசென்ட் நிறுவனம் முடிவு செய்துள்ளது.
இப்புதிய சோதனை முறை உயர்மட்ட நிர்வாக அதிகாரிகளுக்கு மட்டுமே.
ReD அசோசியேட்ஸ்
கடந்த வாரம் நியூயார்க் மற்றும் உலகின் சில முக்கிய நாடுகளில் இயங்கி வரும் கன்சல்டிங் நிறுவனமான ReD அசோசியேட்ஸ் நிறுவனத்தின் 49 சதவீத பங்குகளைக் காக்னிசென்ட் நிறுவனம் கைபற்றியுள்ளதாக அறிவித்துள்ளது.
மலேசியா
அதைத் தொடர்ந்து 28ஆம் தேதி இந்நிறுவனத்தின் மிகப்பெரிய டெலிவரி சென்டரை மலேசியாவில் துவங்கியுள்ளது. இதன் மூலம் மலோசியாவில் இயங்கும் பன்னாட்டு நிறுவனங்களின் மென்பொருள் தேவையைச் சிடிஎஸ் பூர்த்திச் செய்யத் திட்டமிட்டுள்ளது.
புதிய நிர்வாக இயக்குநர்
இந்நிலையில் ஏப்ரல் மாத துவக்கத்தில் விஎம்வேர் நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிதியியல் அதிகாரியான Jonathan Chadwick காக்னிசென்ட் நிறுவனத்தின் நிர்வாகக் குழுவின் புதிய உறுப்பினராக இணைந்துள்ளார்.
கடந்த வார வர்த்தக உலகம்..!
தமிழ் குட்ரிட்டன்ஸ் சேவைகள்
தங்கம் விலை | வெள்ளி விலை |வங்கி விடுமுறை நாட்கள் |டாலர்-ரூபாய் மதிப்புகள் | பங்குச்சந்தை நிலை | வங்கி IFSC குறியீடு
சமுக வலைத்தள இணைப்புகள்
இனி உங்கள் தமிழ் குட்ரிட்டன்ஸ் தளத்தைப் பேஸ்புக், கூகுள் பிளஸ் மற்றும் டிவிட்டர் பக்கங்களின் மூலமும் இணைந்திடலாம்.
கிளிக் பண்ணுங்க.. ஷேர் பண்ணுங்க..
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?



Click it and Unblock the Notifications