பரோலில் வெளிவந்தார் 'சுப்ரதா ராய்'.. ரூ.36,000 கோடி நிலுவை செலுத்த 6 மாத ஜாமீன் கோரிக்கை..!

டெல்லி: நாட்டின் மிகப்பெரிய ரியல் எஸ்டேட் நிறுவனமான சகாரா குழுமத்தின் தலைவர் சுப்ரதா ராய், முதலீட்டாளர்களுக்கு அளிக்க வேண்டிய 36,000 கோடி ரூபாயை ஏமாற்றியுள்ளதாக, சந்தைக் கட்டுப்பாட்டு ஆணையம் செபி, ராய் மீது வழக்குத் தொடுத்து கடந்த 2 வருடமாக டெல்லி திகார் ஜெயிலில் தண்டனையை அனுபவித்து வருகிறார்.

பல முறை சுப்ரதா ராய் ஜாமீன் கேட்டும் தொடர்ந்து மறுத்து வந்த உச்ச நீதிமன்றம். தற்போது ராய்-இன் மொத்த சொத்து மதிப்புகளின் அளவைக் கணக்கு காட்டி, தனது தாயாரின் ஈமச்சடங்குகளில் கலந்துகொள்வதற்காக மே 11 ஆம் தேதி உச்ச நீதிமன்றம் பரோல் வழங்கியது.

சுப்ரதா ராய்

சுப்ரதா ராய்

செபி அமைப்புத் தொடுக்கப்பட்ட வழக்கில் சுப்ரதா ராய் தரப்பில் வழக்கறிஞர் கபில் சிபில் ஆஜராகினார்.

நேற்று நடந்த வாதத்தில் கபில் சிபில், சுப்ரதா ராய்-க்கு தொந்தமான அனைத்துச் சொத்துக்களின் மதிப்பைக் கணக்கிட்டு மதிப்பீடு செய்து மொத்த அறிக்கையாக நீதிமன்றத்தில் சமர்ப்பித்தார்.

 

சீல் வைத்த காகித கவரில்

சீல் வைத்த காகித கவரில்

சொத்து மதிப்பீட்டு அறிக்கையை ஒரு காகித கவரில் சீல் வைத்து டி.எஸ் தாகூர், ஏ.ஆர் தேவ் மற்றும் ஏ.கே சிக்ரி ஆகியோர் அடங்கிய பென்ச்-இல் சமர்ப்பித்தார்.

இதில் சுப்ரதா ராய்க்கு இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இருக்கும் அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் மற்றும் தங்கம் மற்றும் டாலர், யூரோ, பவுன்ட் போன்ற நாணயங்களின் இருப்பு ஆகிய அனைத்துத் தகவல்களும் குறிப்பிடப்பட்டுள்ளது எனக் கபில் சிபில் தெரிவித்தார்.

 

36,000 கோடி நிலுவை

36,000 கோடி நிலுவை

அவ்வளவு சொத்துக்களை உடைய சுப்ரதா ராய் 36,000 கோடி நிலுவை செலுத்தாமல் நாட்டை விட்டு ஓடிவிடமாட்டார். இதுவரை செபி அமைப்பிற்கு நீதிமன்றத்தின் வாயிலாகச் சுமார் 12,000 கோடி ரூபாய்ச் செலுத்தியுள்ளார் எனக் கபில் சிபில் நீதிமன்றத்தின் தெரிவித்தார்.

பென்ச்

பென்ச்

சொத்து மதிப்புகளைப் பார்த்து அதிர்ந்த 3 நீதிபதிகள் அடங்கிய பென்ச், "நீங்கள் 6 மாதம் ஜாமீன் கொடுத்தால் ராய் அளிக்க வேண்டிய மொத்த தொகையும் ஒரு பைசா மிச்சம் இல்லாமல் செலுத்தி விடுவார், அதற்கான சொத்துக்கள் மற்றும் பணம் அவரிடம் உள்ளது. அல்லது செபி அவரின் சொத்துகளை நேரடியாக எவ்வித தடையுமின்றி முடக்கலாம்" எனச் சிபில் கூறினார்.

நீதிபதிகள்

நீதிபதிகள்

சகாரா குழுமம் நிறுவனத்தின் தலைவர் சுப்ரதா ராய்-க்கு சொந்தமான சொத்துகளின் மதிப்பை ஒப்பிடும் போதும் இந்த 32,000 கோடி ரூபாய் நிலுவை தொகை மிகவும் சிறிது. ஆயினும் இதனைச் செலுத்தாமல் 2 வருடமாகத் திகார் ஜெயிலில் கஷ்டப்படுவது ஏன்..?

இதேபோல் இந்தியாவில் பல பெரும் புள்ளிகள் உள்ளனர், இதற்கு என்ன காரணம்..? என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

 

காசோலைகள்

காசோலைகள்

சொத்து மதிப்பீட்டு அறிக்கை மட்டும் அல்லாமல் ராய் கையெழுத்திட்ட 2 காசோலைகள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. இதில் 500 கோடி ரூபாய் ஆக்ஸ்ட் எடுத்துக்கொள்ளும் படியும். மற்றொரு கடனை திருப்பிச் செலுத்தாவிட்டால், அதற்கு ஆதாரமாக 4,500 கோடி ரூபாயில் ஒரு காசோலையும் சமர்ப்பிக்கப்பட்டது.

 200 கோடியும்.. ஜாமீன்...

200 கோடியும்.. ஜாமீன்...

இந்நிலையில் ராய் தரப்பில் அளிக்கப்பட்ட 6 மாத ஜாமீன் மனு அடுத்த ஒரு வாரத்தில் விவாதத்திற்கு வரும் என்றும். நீட்டிக்கப்பட்ட ஜூலை 11 வரையிலான ஜாமீன் ராய் அனுபவிக்க ஜூலை 11ஆம் தேதிக்குள் செபியிடம் 200 கோடி ரூபாய் சமர்ப்பிக்க வேண்டும் என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

பரோல்

பரோல்

நேற்று சுப்ரதா ராய் தனது தாயின் மறைவிற்கான சடங்குகளில் கலந்துகொள்ளப் போலீஸ் காவலுடன் பரோலில் சென்றுள்ளார்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+