மும்பை பங்குச்சந்தை கடந்த 4 நாட்களாகத் தொடர்ந்து உயர்வைச் சந்தித்து வருகிறது, இதற்கு முக்கியக் காரணம் ஆசிய மற்றும் ஐரோப்பிய சந்தையின் லாபகரமான வர்த்தகச் சூழ்நிலை.
இந்நிலையில் வாரத்தின் கடைசி வர்த்தக நாளான இன்றும் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 300 புள்ளிகள் வரை உயர்ந்து காணப்பட்டது.

பார்த் பெட்ரோலியம் போன்ற முக்கியமான வர்த்தக நிறுவனங்கள் தங்களது லாபகரமான வர்த்தக முடிவுகளை வெளியிட்டு வருவதால் சென்செக்ஸ் குறியீடு 3 மாத உயர்வை அடைந்துள்ளது.
வெள்ளிக்கிழமை வர்த்தக முடிவில் சென்செக்ஸ் குறியீடு 286.92 புள்ளிகள் உயர்ந்து 26,653.60 புள்ளிகளை அடைந்தது. அதேபோல் நிஃப்டி குறியீடும் 87.00 புள்ளிகள் உயர்ந்து 8,156.65 புள்ளிகளை எட்டி இன்றைய வர்த்தகம் முடிந்தது.
இன்று காலை நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ தனது காலாண்டு முடிவுகளை வெளியிட்டது. படிக்க.


Click it and Unblock the Notifications