டெல்லி: 2015-16ஆம் நிதியாண்டில் இந்திய பொருளாதாரம் கணித்ததைப் போலவே 7.6 சதவீதத்தை எட்டியுள்ளது.
2016ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் நாட்டின் உள்நாட்டு உற்பத்தி அளவு 7.9 சதவீதம் வரையில் உயர்ந்து 2015-16ஆம் நிதியாண்டின் மொத்த பொருளாதார வளர்ச்சி அளவை 7.6 சதவீதத்திற்கு உயர்த்தியுள்ளது.
நரேந்திர மோடி
பிரதமர் மோடி அரியணைக்கு வந்து 2 வருடங்கள் முழுமையாக முடிந்த நிலையில் 7.6 சதவீத பொருளாதார வளர்ச்சி அடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
7.6 சதவீத வளர்ச்சி
மத்திய புள்ளியில் அலுவலகம் பிப்ரவரி மாதம் 2015-16ஆம் நிதியாண்டில் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி அளவு 7.6 சதவீதம் வரையில் உயரும் எனக் கணித்திருந்தது.
இதற்கு இந்தியாவில் பல அமைப்புகள் மறுத்தாலும், சர்வதேச முதலீட்டு நிறுவனங்களும் மற்றும் நிதி அமைப்புகளும் இந்திய சந்தையின் மீது நம்பிக்கை அளித்து ஜிடிபி அளவை 7.5 சதவீதத்தைக் கண்டிப்பாகத் தாண்டும் எனக் கூறியது.
5 வருட உச்சம்
கடந்த 5 வருடத்தில் காணாத அளவிற்கு 2015-16ஆம் நிதியாண்டில் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி அளவுகள் 7.6 சதவீதத்தை எட்டியுள்ளதாக மத்திய புள்ளியில் அலுவலகம் தெரிவித்துள்ளது.
சீனாவுடன் போட்டி
இதே வேகம் மற்றும் விவேகத்துடன் இந்தியா செயல்பட்டால் அடுத்த 5 வருடத்தில் உலகின் 2 வது பொருளாதார நாடாக இருக்கும் சீனாவிற்கு இணையாக உயர முடியும்.
மேலும் சீனா ஜனவரி - மார்ச் வரையிலான காலக்கட்டத்தல் வெறும் 6.7 சதவீத வளர்ச்சியை மட்டுமே அடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
4வது காலாண்டு வளர்ச்சி
2015-16ஆம் நிதியாண்டின் 4வது காலாண்டு முடிவில் ஜிடிபி-யின் 7.9 சதவீத உயர்விற்கு முக்கியக் காரணம், சுத்திகரிப்பு பொருட்களின் உற்பத்தி அதிகரிப்பு, அதீத மின்சார உற்பத்தி மற்றும் 8 முக்கிய உற்பத்தித் துறையின் 8.5 சதவீத அவுட்புட் ஆகியவையே.
விவசாய உற்பத்தி
மேலும் விவசாயத் துறையின் உற்பத்தி அளவு கடந்த வருடத்தின் 1.7 சதவீதத்தை விடவும் மார்ச் மாத காலாண்டில் 2.3 சதவீதம் வரையில் அதிகரித்துள்ளது.
2015-16ஆம் நிதியாண்டில் சுமார் 252.23 மில்லியன் டன் உணவு தானியங்கள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.
2016இல் 8 சதவீதம் இலக்கு.
இதன் மூலம் 2016ஆம் நிதியாண்டில் நாட்டின் வளர்ச்சி 8 சதவீதத்தை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நியூஸ்லெட்டர்
தமிழ் குட்ரிட்டன்ஸ் சேவைகள்
தங்கம் விலை | வெள்ளி விலை |வங்கி விடுமுறை நாட்கள் |டாலர்-ரூபாய் மதிப்புகள் | பங்குச்சந்தை நிலை | வங்கி IFSC குறியீடு
சமுக வலைத்தள இணைப்புகள்
இனி உங்கள் தமிழ் குட்ரிட்டன்ஸ் தளத்தைப் பேஸ்புக், கூகுள் பிளஸ் மற்றும் டிவிட்டர் பக்கங்களின் மூலமும் இணைந்திடலாம்.
கிளிக் பண்ணுங்க.. ஷேர் பண்ணுங்க..


Click it and Unblock the Notifications