ஜூன் 7 ரிசர்வ் வங்கியின் மறுஆய்வு கூட்டம்.. ரெப்போ விகிதம் குறையுமா..?

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மும்பை: ரிசர்வ் வங்கியின் நாணய மறுஆய்வு கூட்டம் வருகிற ஜூன் 7ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் வணிக வங்கிகளுக்கு அளிக்கப்படும் கடனுக்கான வட்டி விகிதத்தில் எவ்விதமான மாற்றமும் இருக்காது எனக் கணிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே ரெப்போ விகிதம் 5 வருட குறைவாக இருக்கும் நிலையில், மீண்டும் ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தைக் குறைக்காது எனத் தெரிகிறது.

ரெப்போ விகிதம்

ரெப்போ விகிதம்

நாட்டின் வணிக வங்கிகளுக்கு அளிக்கப்படும் கடனுக்கான வட்டி விகிதம் தற்போது 6.50 சதவீதமாக இருக்கும் நிலையில் வங்கிகள் மற்றும் நிறுவனங்கள் கூடுதலான வட்டி குறைப்பை எதிர்பார்க்கிறது.

வரியைக் குறைக்க வேண்டும்

வரியைக் குறைக்க வேண்டும்

நிதி அமைச்சகம் 2016ஆம் ஆண்டில் நாட்டில் வளர்ச்சிக்கான வாய்ப்புகள் சிறப்பாக உள்ள சூழ்நிலையில் கூடுதலாக 0.25 சதவீதம் வட்டியைக் குறைத்தால் மிகப்பெரிய உந்துசக்தியாக இருக்கும் என்றும், இதனை 3 வது காலாண்டு வரை மாற்ற வேண்டாம் எனவும் ரிசர்வ் வங்கியிடம் பரிந்துரை செய்துள்ளதாக இத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மாற்றம் இருக்காது..

மாற்றம் இருக்காது..

ரிசர்வ் வங்கியைப் பொருத்த வரை ஜூலை முதல் செப்டம்பர் காலாண்டு வரை சிஆர்ஆர் விகிதத்தை 4 சதவீதமாகவும், ரெப்போ விகிதத்தை எவ்விதமான மாற்றமும் இல்லாமல் 6.50 சதவீதமாக வைக்கத் திட்டமிட்டுள்ளது.

ஜிடிபி வளர்ச்சி

ஜிடிபி வளர்ச்சி

2015-16ஆம் நிதியாண்டின் 4வது காலாண்டில் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி அளவு 7.9 சதவீதம் வரையில் உயர்ந்துள் 2016ஆம் நிதியாண்டில் ஜிடிபி அளவுகள் 7.6 சதவீதமாக உயர்ந்துள்ளது. இதனை மையமாக வைத்துக்கொண்டே நிதியமைச்சகம் வட்டி விகிதத்தைக் குறைக்க வலியுறுத்துகிறது.

வராக் கடன்

வராக் கடன்

ஆனால் ரிசர்வ் வங்கியின் கவர்னரான ரகுராம் ராஜன், இந்திய வங்கிகளில் வரலாறு காணாத அளவிற்கு உயர்ந்திருக்கும் வாரக் கடன் அளவை மிகப்பெரிய ஆபத்து எனக் கருதி ரெப்போ விகித்தை குறைக்கமாட்டார் என எதிர்பார்க்கப்படுகிறது.

பருவமழை

பருவமழை

மேலும் நாட்டின் பருவமழை சிறப்பாக இருந்து விவசாயப் பொருட்களின் உற்பத்தி அதிகரித்து, உணவுப் பொருட்களின் விலை குறைந்தால் 2016-17ஆம் நிதியாண்டின் 2வது காலாண்டில் ரிசர்வ் வங்கி 0.25 சதவீத ரெப்போ விகிதத்தைக் குறைக்கும்.

ரிச்ர்வ் வங்கி

ரிச்ர்வ் வங்கி

<strong>ரிசர்வ் வங்கி: கார்ப்ரேட் நிறுவனங்களுக்கான கடனை குறைக்கப் புதிய கட்டுப்பாடு.. சோகத்தில் வங்கிகள்..!</strong>ரிசர்வ் வங்கி: கார்ப்ரேட் நிறுவனங்களுக்கான கடனை குறைக்கப் புதிய கட்டுப்பாடு.. சோகத்தில் வங்கிகள்..!

<strong>சாட்டைக்கு பயந்து சொத்துக்களை விற்கும் அம்பானி பிரதர்ஸ்..!</strong>சாட்டைக்கு பயந்து சொத்துக்களை விற்கும் அம்பானி பிரதர்ஸ்..!

நியூஸ்லெட்டர்

நியூஸ்லெட்டர்

சுடச்சுட வர்த்தகச் செய்திகள் தினமும் உங்களுக்காக..!

சமுக வலைத்தள இணைப்புகள்

சமுக வலைத்தள இணைப்புகள்

இனி உங்கள் தமிழ் குட்ரிட்டன்ஸ் தளத்தைப் பேஸ்புக், கூகுள் பிளஸ் மற்றும் டிவிட்டர் பக்கங்களின் மூலமும் இணைந்திடலாம்.

கிளிக் பண்ணுங்க.. ஷேர் பண்ணுங்க..

தமிழ் குட்ரிட்டன்ஸ் சேவைகள்

தமிழ் குட்ரிட்டன்ஸ் சேவைகள்

தங்கம் விலை | வெள்ளி விலை |வங்கி விடுமுறை நாட்கள் |டாலர்-ரூபாய் மதிப்புகள் | பங்குச்சந்தை நிலை | வங்கி IFSC குறியீடு

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

RBI likely to hold rates on June 7; 25 bps cut next quarter

The Reserve Bank of India (RBI) is likely to keep its benchmark repo interest rate unchanged at a five-year low of 6.50 per cent at its policy review on June 7.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X