ஆசிய சந்தையின் தாக்கத்தால் சென்செக்ஸ் 170 புள்ளிகள் வரை உயர்வு..!
கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடுகள் தங்களது உற்பத்தி அளவுகளைக் குறைத்துக்கொள்ள முடிவு செய்துள்ளதை அடுத்தச் சந்தையின் இதன் விலை அதிகரிக்கத் துவங்கியுள்ளது.
வியாழக்கிழமை காலை வர்த்தகத்தில் கச்சா எண்ணெய்யின் விலை 15 மாத உயர்வை எட்டியுள்ளது. இதனால் அமெரிக்கச் சந்தை அதிகளவிலான வர்த்தகத்தைப் பெற்று ஆசிய சந்தையின் வளர்ச்சிக்குச் சாதகமான வாய்ப்புகளை அமைத்தது.

ஆசிய சந்தையில் நிலையான வர்த்தகத்தின் மூலம் மும்பை பங்குச்சந்தை காலை வர்த்தகம் துவக்கம் முதலே 170 புள்ளிகள் உயர்வுடன் துவங்கியது.
12.00 மணியளவில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 107.12 புள்ளிகள் உயர்ந்து 28,091.49 புள்ளிகளை எட்டியுள்ளது. நிஃப்டி குறியீடு 29.40 புள்ளிகள் உயர்ந்து 8,688.50 புள்ளிகள் எட்டியுள்ளது.


Click it and Unblock the Notifications