பங்குச்சந்தையில் முதலீட்டு அளவு அதிகரித்ததால் தங்கம் மற்றும் வெள்ளி மீதான முதலீட்டு அளவு இன்று அதிகளவில் குறைந்தது.
சென்னை: நவம்பர் 8ஆம் தேதி நடக்க உள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில் முக்கிய வேட்பாளராக இருக்கும் ஹிலாரி கிளின்டன் மீது சுமத்தப்பட்டுக் குற்றச்சாட்டுக்கு எப்பிஐ அறிவித்த சாதகமான அறிவிப்புகள் மூலம் அமெரிக்கச் சந்தையில் முதலீடு அதிகரிக்கத் துவங்கியது.
இதனால் சீனா, ஜப்பான் நாடுகளில் கணிசமான வர்த்தக உயர்வைக் காணப்பட்டது. இதன் காரணமாக இந்திய பங்குச் சந்தையில் இன்று அதிகளவிலான முதலீடு குவிந்து சென்செக்ஸ் குறியீடு 184 புள்ளிகள் வரை உயர்ந்தது.

பங்குச்சந்தையில் முதலீட்டு அளவு அதிகரித்ததால் தங்கம் மற்றும் வெள்ளி மீதான முதலீட்டு அளவு இன்று அதிகளவில் குறைந்தது.
திங்கட்கிழமை வர்த்தகத்தில் 24 கேரட் 1 கிராம் தங்கத்தின் விலை 36 ரூபாய் குறைந்து 3,083 ரூபாய்க்கு வர்த்தகம் செய்யப்படுகிறது.
அதேபோல் 22 கேரட் 1 கிராம் தங்கத்தின் விலை 33 ரூபாய் குறைந்து 2,883 ரூபாய்க்குச் சென்னையில் வர்த்தகம் செய்யப்படுகிறது.


Click it and Unblock the Notifications