சென்னையில் தங்கம் விலை கிராமிற்கு 15 ரூபாய் சரிவு..!
இன்று ஒரு கிராம் தங்கத்தின் விலை 15 ரூபாய் குறைந்துள்ளது
சென்னை: அமெரிக்காவில் அதிபர் தேர்தல் மூலம் சர்வதேச பங்குச்சந்தையில் அதிகளவிலான சரிவை எதிர்பார்த்த நிலையில் கடைசிக் கட்டக் கருத்துக் கணிப்பு வெற்றி வாய்ப்பு ஹிலாரி கிளின்டன் பக்கம் அதிகமாக இருந்த காரணத்தால் ஆசிய மற்றும் இந்திய பங்குச்சந்தையில் இன்று முதலீடு அளவுகள் அதிகரித்தது.
இதன் காரணமாக நாணய சந்தையில் முதலீட்டு அளவுகள் குறைந்து தங்கம் விலை கணிசமாகக் குறைந்தது.
இன்றைய வர்த்தகத்தில் 24 கேரட் ஒரு கிராம் தங்கத்தின் விலை 15 ரூபாய் குறைந்து 3,083 ரூபாயில் இருந்து 3,078 ரூபாயாகக் குறைந்துள்ளது.
அதேபோல் 22 கேரட் ஒரு கிராம் தங்கத்தின் விலை 15 ரூபாய் குறைந்து 2,873 ரூபாய்க்கு வர்த்தகம் செய்யப்படுகிறது.



Click it and Unblock the Notifications