சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு 1,450 ரூபாய் உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்..!

பங்குச்சந்தை சரிவில் தங்கம் விலை சவரனுக்கு 1500 ரூபாய் வரை உயர்ந்து மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

அமெரிக்காவில் அதிபர் தேர்தல் முடிவுகள் இன்று வெளியாவதை அடுத்துப் பங்குச்சந்தையில் கணிசமான சரிவு ஏற்படும், இதனால் தங்கத்தின் விலை உயரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சென்னையில் தங்கம் விலை 1,450 ரூபாய் வரை உயர்வு கணிப்புகளை உடைத்தது.

இந்தத் திடீர் உயர்விற்கு முக்கியக் காரணம் செவ்வாய்க்கிழமை மாலை பிரதமர் நரேந்திர மோடி இனி 500 ரூபாய் மற்றும் 1000 ரூபாய் மதிப்பிலான ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்தார்.

இதனால் ஒட்டுமொத்த இந்திய வர்த்தகச் சந்தையே ஆடிப்போய் உள்ளது.

அமெரிக்கத் தேர்தல்

அமெரிக்கத் தேர்தல்

8 ஆம் தேதி அமெரிக்காவில் அனைத்து மாவட்டங்களிலும் இரவு 8 மணிக்கு வாக்குப்பதிவு முடிந்த நிலையில் தேர்தலின் முடிவு அன்றைய இரவே அறிவிக்கப்பட்டது.

இந்தியாவில் 9ஆம் தேதி மதியம் 11.30 மணியளவில் தேர்தலின் முடிவுகள் வெளியானது.

 

டிரம்ப் வெற்றி

டிரம்ப் வெற்றி

இந்நிலையில் உலகின் மிகப்பெரிய வல்லரசு நாடுகளில் ஒன்றான அமெரிக்காவின் 42 வது அதிராக டொனால்டு டிரம்ப் வெற்றிப் பெற்றுள்ளார்.

மும்பை பங்குகள்

மும்பை பங்குகள்

புதன்கிழமை வர்த்தகத்தில் மும்பை பங்குச்சந்தையின் காலை வர்த்தகம் துவக்கம் முதலே 500, 1000 ரூபாய் நோட்டுகளின் பயன்பாடு முடக்கம் மற்றும் அமெரிக்க அதிபர் தேர்தலின் முடிவுகளின் காரணமாகச் சென்செக்ஸ் 800 புள்ளிகள் சரிவுடன் துவங்கியது.

முதலீடு

முதலீடு

இந்திய சந்தை மட்டும் அல்லாமல் ஆசிய சந்தையிலும் அதிகளவிலான வர்த்தகச் சரிவை சந்தித்துள்ள காரணத்தால் அன்னிய முதலீட்டாளர்கள் அதிகளவில் தங்கம் மற்றும் வெள்ளி மீது முதலீடு செய்தனர்.

இதனால் தங்கத்தின் விலை சவரனுக்கு 1500 ரூபாய் வரை உயர்ந்தது.

 

தங்கம் விலை

தங்கம் விலை

சென்னையில் இன்று 24 கேரட் 1 கிராம் தங்கத்தின் விலை 88 ரூபாய் உயர்ந்து 3,166 ரூபாய்க்கும், 22 கேரட் 1 கிராம் தங்கம் 182 ரூபாய் அளவில் உயர்ந்து 3,060 ரூபாய்க்கு வர்த்தகம் செய்யப்படுகிறது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+