ஜிஎஸ்டி முடிந்த உடன் 'வங்கிகள்' தான் அடுத்த 'டார்கெட்'.. அருண் ஜேட்லி முடிவு..!
இந்தியாவில் மறைமுக வரியை முழுமையாக மாற்றும் ஜிஎஸ்டி அமலாக்கத்திற்கு நான்கு முக்கிய மசோதாக்கள் நாடாளுமன்றத்தில் ஒப்புதல் பெற்றதன் மூலம் ஜூலை 1ஆம் தேதி ஜிஎஸ்டி-யின் அமலாக்கம் உறுதியானது.
இந்நிலையில் நிதியமைச்சர் அருண் ஜேட்லி தனது அடுத்த இலக்கை முடிவு செய்துவிட்டார்.
வங்கிகளின் வராக்கடன்
ஜிஎஸ்டி அமலாக்கத்திற்குப் பின் நிதியமைச்சர் அருண் ஜேட்லி தான் இந்திய வங்கித்துறையில் வளர்ந்து வரும் வராக்கடன் மீது கவனத்தைச் செலுத்த உள்ளதாகத் தெரிவித்துள்ளார். மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் இதுகுறித்து நடவடிக்கைகளையும், முடிவுகளையும் அறிவிக்கும் என நிதியமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார்.
20-30 கணக்குகள்
இந்திய வங்கித்துறையில் மலையைப் போல் வளர்ந்து நிற்கும் வராக்கடனில் மிகப்பெரிய பங்கு 20-30 கணக்குகளை மட்டுமே சார்ந்து உள்ளது.
இதனை முறையாகக் களைய ரிசர்வ் வங்கியுடன் சில பிரச்சனைகளைத் தீர்க்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதற்கான நடவடிக்கைகள் அடுத்தச் சில நாட்களில் வெளியாகும் எனவும், இதன்பின் வங்கிகள் முழுமையான நடவடிக்கைகளை எடுக்கும் என ஜேட்லி தெரிவித்துள்ளார்.
பணக்காரர்கள்
வங்கியில் குவிந்திருக்கும் வராக்கடன், பொரும்பாலனவை பணக்காரர்களுடையது, இந்நிலையில் வராக்கடனை வங்கிகளுக்குத் திரும்ப அளிப்பதை விட இந்தப் பணத்தை நேரடியாக மத்திய அரசு விவசாயத்திற்கும், வறுமையை ஒழிக்கவும், MGNREGA திட்டத்திற்கும் பயன்படுத்தலாம்.
இந்தியாவில்
இன்றளவும் இந்தியாவின் பல பகுதிகளில் வங்கிகள் நிதி சேவை அளிக்க முடியாத நிலையில் உள்ளது. இந்த நிலைக்கு முக்கியக் காரணம் வாரக்கடனாகக் குவிந்துகிடக்கும் பணம் தான். மத்திய அரசின் தலையீட்டின் மூலம் சந்தையில் இருக்கும் வராக்கடனை முழுமையாகக் குறைந்து வங்கிகளுக்கு உறுதுணையாக இருக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
வராக்கடன் அளவு
டிசம்பர் 2016ஆம் ஆண்டு முடிவில் மொத்த வராக் கடன் அளவு 6.06 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. கடந்த நிதியாண்டின் மார்ச் மாதத்தில் இதன் அளவு 5.02 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
மறுமுதலீடு
மேலும் மத்திய அரசு நடப்பு நிதியாண்டில் 10,000 கோடி ரூபாய் வரையிலான தொகையைப் பொதுத்துறை வங்கிகளில் மறுமுதலீட்டுச் செய்யத் திட்டமிட்டுள்ளது.


Click it and Unblock the Notifications