இது குறித்து உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஏப்ரல் 1 முதல் புதிய தாராளமயமாக்கப்பட்ட விசா ஆட்சி சட்டம்.
வெளிநாட்டில் இருந்து இந்தியாவிற்கு இ-விசா பெற்று வரும் சுற்றுலா பயணிகள் இனி இரண்டு மாதங்கள் வரை தங்கலாம் என்று இரட்டை அனுமதி வழங்கியுள்ளது. இதுவே மருத்து பரிசோதனைகளுக்காக வருபவர்கள் மூன்று மாதம் வரை தங்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஏப்ரல் 1 முதல் புதிய தாராளமயமாக்கப்பட்ட விசா ஆட்சி சட்டம் அமலுக்கு வந்துள்ளதாகவும் இதன் மூலம் இ-விசா பெற்று இந்தியா வரும் வெளிநாட்டுச் சுற்றுலா பயணிகள் இரண்டு மாதங்கள் வரை இங்குத் தங்கலாம் என்றும் தெரிவித்தார்.
இ-விசா பெற்று இந்தியா வரும் வெளிநாட்டுச் சுற்றுலா பயணிகளுக்கு 30 நாட்களில் இருந்து 60 நாட்களாகவும், இதுவே மருத்துவப் பரிசோதனைகளுக்காக இ-விசா பெற்று வருபவர்கள் 90 நாட்களும் இந்தியாவில் தங்கி இருக்கலாம் என்றும் அவர் கூறினார்.
கூடுதலாக அண்டை நாடுகள் செல்ல வசதிகள்
இந்த இரட்டை நன்மைகளால் சுற்றுலா பயணிகள் அண்டை நாடுகளான பூட்டான் உள்ளிட்ட சில நாடுகளுக்கும் சென்று வர அனுமதி உண்டு.
தாராளமயமாக்கப்பட்ட விசா சட்டம் மூலமாகச் சுற்றுலா, வணிக உள்ளிட்ட பயணங்களுக்காக அதிகப் பயணிகள் இந்தியா வருவார்கள் என்று எதிர்பார்ப்பதாக ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.
இ-விசா வகைகள்
ஏப்ரல் 1 முதல் இ-சுற்றுலா விசா, இ-வணிகம் விசா, இ-மருத்துவம் விசா என்று மூன்று வகையாக இ-விசா பிரிக்கப்பட்டுள்ளது.
30 நாட்களில் இருந்து 120 நாட்கள் வரை விச்சாக்கலுக்கான நீட்டிப்பு அளிக்கப்பட்டது மட்டும் இல்லாமல் வணிகம் மற்றும் மருத்துவப் பரிசோதனைக்கு இ-விசா விண்ணப்பிப்பவர்களுக்கு வசரம் என்றால் 48 நாட்களில் விசா அளிக்கப்படும்.
கூடுதல் குடியேற்றம் கவுண்டர்கள்
மருத்துவப் பரிசோனைகளுக்காக வரும் வெளிநாடு பயணிகளுக்காக டெல்லி, மும்பை, கொல்கத்தா, சென்னை, பெங்களூரு, ஹைதராபாத் உள்ளிட்ட 6 முக்கிய இந்திய விமான நிலையங்களில் கூடுதல் குடியேற்றம் கவுண்டர்கள் மற்றும் வசதி மேசைகள் அமைக்கப்படும்.
ஃபிளிம்(F) விசா, இண்டர்ன் விசா
இ-விசாவில் புதிதாக ஃபிளிம்(F) விசா என்ற ஒன்றும் ஒரு வருட நுழைவு அனுமதியுடன் வழங்கப்படுகின்றது. இந்தியாவில் இண்டர்ன்ஷிப் பணிகளுக்காக வருபவர்களுக்கு இண்டர்ன்(I) விசா ஒன்றும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இ-விசா சேவை 161 நாடுகளுக்கு வழங்கப்படும்
இந்தியாவிற்கு வருவதற்கான இ-விசாவை இனி 161 நாடுகளாக ஆதிகரிக்கப்படுவதாகவும், 24 விமான நிலையங்கள் மற்றும் கொச்சின், கோவா மற்றும் மங்களூரு உள்ளிட்ட மூன்று கடல் போர்ட்கள் மூலமாகவும் இந்தியா வர முடியும்.
ஐந்து வருட விசா
ஐந்து வருடங்களுக்குச் சுற்றுலா, வணிகம் போன்றவற்றுக்குச் சேர்த்து விசா பெறும் முறையும் கூடுதலாகப் பல நாடுகளுக்கு அளிக்கப்பட உள்ளது. இதற்காகப் பயோமெட்ரிக் சாதங்கள் மூலம் விண்ணப்பிக்கும் முறையும் அறிமுகப்படுத்தப்படுகின்றது.
மின்னஞ்சல் மூலம் விசா
இ-விசாவிற்கு விண்ணப்பிப்பவர்களுக்கு இனி அனுமதிகள் மின்னஞ்சல் மூலமாகவும் வழங்கப்படும் என்றும் அதை அச்சிட்டுக் கொண்டு இந்தியா வந்து செல்லாலாம் என்றும், இந்தியா வரும்போது குடியேற்றம் அதிகாரிகளிடம் முறையான அனுமதிகளையும் பெற வேண்டும்.
More From GoodReturns

ஜியோ ஹாட் ஸ்டாரின் தலைமை அதிகாரியை தேடி வந்து பதவி கொடுத்த ஓபன் ஏஐ நிறுவனம்!!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?



Click it and Unblock the Notifications