ஐடி நிறுவனங்களுக்குப் போட்டியாக 3 மாதத்தில் 6,100 ஊழியர்களை வெளியில் அனுப்பியுள்ளது எச்டிஎப்சி..!
மும்பை: 2016-ம் நிதி ஆண்டில் இரண்டாம் காலாண்டில் இருந்து எச்டிஎப்சி வங்கி படிப்படியாக ஊழியர்களின் எண்ணிக்கையைக் குறைத்துக்கொண்டே வருகின்றது.
எச்சிஎப்சி வங்கியின் 4 வது காலாண்டு அறிக்கையை வைத்துப் பார்க்கும் போது 3வது காலாண்டின் போது 90,421 ஊழியர்கள் இருந்ததும் 4 வது காலாண்டின் போது இது 84,325 ஊழியர்களாகக் குறைந்துள்ளது தெரிய வந்துள்ளது.
டிஜிட்டல் மையம்
எச்டிஎப்சி வங்கி அதிகப்படியான பணிகளை டிஜிட்டல் மையமாகுவதும் ஆடோமேஷன், ரோபோட்கள் போன்றவற்றைப் பயன்படுத்த தொடங்கியதை அடுத்து இந்த ஊழியர்கள் எண்ணிக்கை குறைபட்டுள்ளதாகக் கூறப்படுகின்றது.
இரண்டாம் மிகப் பெரிய தனியார் வங்கி நிறுவனம்
இந்தியாவின் இரண்டாம் மிகப் பெரிய தனியார் துறை வங்கி நிறுவனமாக வளர்ந்து இருக்கும் எச்டிஎப்சி வங்கி டிஜிட்டல் முறைக்கு மாறி வருவதால் கேஷ் கவுண்டர்கள், ஹெல்ப் டெஸ்க் உள்ளிட்ட பணிகளில் இருக்கும் ஊழியர்களைக் குறைத்து வருகின்றது என்று துணை நிர்வாக இயக்குனர் பரேஷ் சுக்தங்கர் மும்பையில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
4வது காலாண்டில் ஊழியர்கள் எண்ணிக்கை
2017 ஜனவரி - மார்ச் மாதம் வரையில் மட்டும் 90,421 ஆக இருந்த ஊழியர்களின் எண்ணிக்கை 84,325 ஆகக் குறைந்துள்ளது. இதனால் வங்கியின் லாபமும் 44.9 சதவீதத்தில் இருந்து 42.4 சதவீதமாக அதிகரித்துள்ளது.
மூன்றாவது காலாண்டில் ஊழியர்கள் எண்ணிக்கை
எச்டிஎப்சி வங்கியின் மூன்றாவது காலாண்டில் அதாவது 2016 அக்டோபர் முதல் டிசம்பர் மாதம் வரை செல்லா ரூபாய் அறிவிப்பால் வங்கிகளில் அதிக வேலை பழு இருந்த காலத்திலும் 4,581 வங்கி ஊழியர்களை நீக்கியுள்ளதாகவும் அப்போது காஸ்ட் டு இன்கம் விகிதம் 43.8 சதவீதமாக இருந்ததாகவும் கூறப்படுகின்றது.
இன்ஸ்டண்ட் லோன்
அது மட்டும் இல்லாமல் இன்ஸ்டண்ட் லோன் வழங்குதல் போன்ற சேவைகளால் கடன் வழங்கும் பிரிவில் ஆட்குறைப்பு ஏற்பட்டு பலரை பணியை விட்டு எச்டிஎப்சி நீக்கியுள்ளது.
ஊழியர்களை ராஜிநாமா
எச்டிஎப்சி வங்கி ஊழியர்களை நீக்கியது வெளியில் தெரியாத வண்ணம் இயற்கையாக நடப்பது போல் ஊழியர்களை ராஜிநாமா செய்து வெளியேற்றி இருக்கின்றது என்றும், இந்த ஆட்குறைப்பு மேலும் அதிகரிக்கும் என்று வங்கி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தேய்வு விகிதம்
வங்கியின் தேய்வு விகிதம் 21-22 சதவீதமாகக் கட்டுக்குள் இருந்தை வங்கி நிர்வாகம் உன்னிப்பாகக் கவனித்து வருகின்றது என்றும், 2016-ம் ஆண்டுத் தான் எச்டிஎப்சி வங்கியின் ஊழியர்கள் எண்ணிக்கை அதிகபட்சமாக 95,002 ஆக உயர்ந்து இருந்தது.
2016-2017 ஒப்பீடு
இதுவே 2017-ம் ஆண்டு 6,100 ஊழியர்களை நீக்கப்படு இருக்கும் நிலையில் 2016-ம் ஆண்டு 10,729 ஊழியர்கள் சேர்க்கப்பட்டு இருந்தனர்.
ஐடி நிறுவனங்கள்
ஐடி நிறுவனங்கள் ஒரு பக்கம் ஊழியர்களைக் கொத்துக் கொத்தாக வெளியேற்றி வரும் நிலையில் வங்கித் துறையிலும் ஊழியர்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டு வருவதைப் பார்க்க முடிகின்றது.
எஸ்பிஐ
தனியார் துறை வங்கிகள் மட்டும் இல்லாமல் எஸ்பிஐ வங்கியிலும் துணை வங்கியுடனான இணைப்பிற்குப் பிறகு மூத்த ஊழியர்களை விருப்ப ஓய்வு பெற்றுச் செல்லுமாறு வற்புறுத்தி அனுப்பியது என்று செய்திகள் வெளியானது குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!

ஈரான் - அமெரிக்கா போர்.. நடுவில் சிக்கிக்கொண்டு தவிக்கும் ஜப்பான்.. பெரும் சீரழிவின் ஆரம்ப புள்ளி இதுதானா..?



Click it and Unblock the Notifications