தங்கத்திற்கு 3%, பிஸ்கட்-க்கு 18% வரி.. இதுதான் ஜிஎஸ்டி..!

மோடி தலைமையிலான மத்திய அரசு நாட்டின் மறைமுக வரி விதிப்பு முறையை முழுமையாக நீக்கிவிட்டு நாடு முழுவதும் ஒன்றை வரியாக மாற்றியமைத்து வருகிறது. இந்தப் புதிய வரி விதிப்புக்கான அனைத்துப் பணிகளும் முடிவடைந்த நிலையில், வருகிற ஜூலை 1ஆம் தேதி முழுமையாக அமலாக்கம் செய்ய முடிவு செய்துள்ளது மத்திய நிதியமைச்சகம்

மேலும் இதன் அமலாக்கம் குறித்து முக்கிய முடிவுகளை எடுக்க ஜிஎஸ்டி கவுன்சில் 16வது கூட்டமாக வருகிற ஜூன் 11ஆம் தேதி கூடுகிறது.

இந்நிலையில் கடந்த சில நாட்களில் நாட்டின் முக்கிய வர்த்தகப் பொருட்களுக்கான வரியை நிர்ணயம் செய்துள்ளது. அதன் விபரங்கள் உங்களுக்காக.

தங்கம்

தங்கம்

நாட்டின் வர்த்தகப் பற்றாக்குறைக்கு முக்கியக் காரணமாக விளங்கும் தங்கம் மற்றும் தங்க நகைகளுக்கு ஜிஎஸ்டி வரி விதிப்பின் கீழ் 3 சதவீதம் வரி விதிக்கப்பட்டுள்ளது.

வெள்ளி மற்றும் வைரம்

வெள்ளி மற்றும் வைரம்

தங்கத்தைப் போலவே வெள்ளி (Processed) மற்றும் வைரத்திற்கும் 3 சதவீதம் மட்டுமே வரியாக விதிக்கப்படும் என வருவாய் துறை செயலாளர் ஹஷ்முக்த் ஆதியா தெரிவித்தார்.

பிஸ்கட்

பிஸ்கட்

நாட்டில் குழந்தைகள் முதல் பெரியவர்கள், சமானியர்கள் முதல் பணக்காரர்கள் வரை அனைவரும் சாப்பிடும் உணவுப் பொருளான பிஸ்கட்-க்கு சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பின் கீழ் 18 சதவீதம் வரி விதிக்கப்பட உள்ளது.

இதற்கு முன் 100 கிலோ வரையிலான பிஸ்கட் விற்பனைக்கு முழுமையான வரி விதிப்பு அளிக்கப்பட்டத்து குறிப்பிடத்தக்கது.

 

வைரம்

வைரம்

பிராசஸ்டு வைரத்திற்கு 3 சதவீதம் வரி விதிக்கப்பட்ட நிலையில், வடிவம் பெறாத, முழுமையாகத் தீட்டப்படாத எனப் பல பிரிவுகளின் கீழ் வரும் ரப் வைரத்திற்கு (Rough) 0.25 சதவீதம் வரி விதிக்க உள்ளதாக நிதியமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார்.

ரெடிமேட் ஆடைகள்

ரெடிமேட் ஆடைகள்

யான் எனப்படும் நூல்-க்கு (திரிக்கப்பட்ட திரிக்கப்படாத நூல்கள்) 5 சதவீதமும், கைத்தறி ஆடைகளுக்கு 18 சதவீதமும், துணிகளுக்கு 5 சதவீதம், டெடிமேட் ஆடைகளுக்கு 12 சதவீதமும், 1000 ரூபாய்க்குக் குறைவாக மதிப்புக் கொண்ட அப்பரேல்-க்கு (தைக்கப்படாத துணிகளுக்கு) 5 சதவீதம் வரி விதிக்கப்படும் என நிதியமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்தார்.

பீடி

பீடி

ஜிஎஸ்டி வரி விதிப்பின் கீழ் ஏழைகளில் சிகரெட் என்று அழைக்கப்படும் பீடி இலைக்கு 18 சதவீதமும், முழுமையாக வடிவம் பெற்ற பீடிக்கு 28 சதவீதமும் வரி விதிக்கப்படும்.

மேலும் இதற்குக் கூடுதல் செஸ் வரி கிடையாது எனவும் அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார்.

 

காலணிகள்

காலணிகள்

500 ரூபாய்க்கு குறைவாக இருக்கும் காலணிகளுக்குத் தற்போது 9.5 சதவீத வரி விதிக்கப்படும் நிலையில், ஜிஎஸ்டி அமலாக்கத்திற்குப் பின் 5 சதவீத வரி மட்டுமே விதிக்கப்பட உள்ளது.

500 ரூபாய்க்கு அதிகமாக இருக்கும் காலணிகளுக்கு 18 சதவீதம் வரி விதிக்கப்படும்.

 

டிரேட்மார்க் பேகேஜ்

டிரேட்மார்க் பேகேஜ்

பாக்கெட் செய்யப்பட்ட டிரேட்மார்க் பொருட்களுக்குச் சரக்கு மற்றும் சேவை வரியின் கீழ் 5 சதவீத வரி விதிக்கப்பட உள்ளது.

15வது கூட்டம்

15வது கூட்டம்

சரக்கு மற்றும் சேவை வரி குறித்து ஜிஎஸ்டி கவுன்சில் கடந்த வெள்ளிக்கிழமை தனது 15வது கூட்டத்தில் மேலே குறிப்பிட்டுள்ள பொருட்களுக்கான வரி நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இன்சூரன்ஸ் பிரீமியம், வங்கி கட்டணங்கள்

இன்சூரன்ஸ் பிரீமியம், வங்கி கட்டணங்கள்

முழு பட்டியல்

முழு பட்டியல்

ஜிஎஸ்டி

ஜிஎஸ்டி

ஜிஎஸ்டி என அழைக்கப்படும் சரக்கு மற்றும் சேவை வரி குறித்து பிற அனைத்து செய்திகளையும் ஓரே இடத்தில் படிக்க. இதை கிளிக் செய்யவும்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+