வருமான வரித்துறை விவசாயம் மூலமாக அதிகம் வருவாய் காட்டிய வரி தாக்கல் செய்யுனர்களுக்கு நோட்டிஸ் அனுப்பியுள்ளது.
விவசாயம் மூலம் அதிக வருவாய்ப் பெற்றுள்ளதாகக் கணக்கு காண்பித்துள்ள 700 தனிநபர்களுக்கு வருமான துறை நோட்டிஸ் அனுப்பியுள்ளதாக நமக்குக் கிடைத்த தகவல் தெரிவிக்கின்றது.
வருமான வரித்துறை அனுப்பிய நோட்டிஸ் முக்கியமாகத் தங்கலது முதன்மை வருமானத்தை விட அதிகமாக விவசாயம் மூலமாக வருவதாகக் காண்பித்திருப்பதே என்றும் கூறப்படுகின்றது.
இலக்கு
விவசாயம் செய்து 20 லட்சம் ரூபாய்க்கும் அதிகமாக வருவாய் ஈட்டியுள்ளதாகக் கணக்கு காண்பித்துள்ள நபர்களுக்குத் தான் வருமான வரித் துறை நோட்டிஸ் அனுப்பியுள்ளதாம்.
மும்பை
மும்பையில் மட்டும் 100 நபர்களுக்கு விவசாயம் வழியாக வருமானம் அதிகமாகக் காண்பித்திருப்பதற்காக வருமான வரி நோட்டிஸ் அனுப்பப்பட்டுள்ளது.
காரணம்
இதில் என்ன ஆச்சர்யமான செய்தி என்றால் தங்களது முதன்மை வருவாயினை விட விவசாயம் மூலமாக இரண்டு மடங்கு அதிகமாக வருவாய் ஈட்டியுள்ளதாக அவர்கள் கணக்கு காண்பித்து இருப்பது ஆகும்.
முறைகேடாகப் பெற்ற வருவாய் எனச் சந்தேகம்
சிலருக்கு அதிகளவில் விவசாய நிலம் இல்லாத போதிலும் விவசாயத்தில் இருந்து அதிக வருவாய் ஈட்டியுள்ளதாகக் கணக்கு காண்பித்துள்ளனர் என்றும், கண்டிப்பாக இது அவர்கள் வேறு வழியில் பெற்று இருக்கக் கூடிய வருமானமாக இருக்கலாம் என்று வருமான வரித்துறை சந்தேகப்படுவதாக மூத்த அதிகாரி ஒருவர் தகவல் தெரிவித்தார்.
இந்தியாவில் வரி இல்லை
விவசாயம் மூலம் பெறுகின்ற வருவாய்க்கு இந்தியாவில் வருவாய் இல்லை என்பதினால் தான் மோசடியாக இவர்கள் கணக்கு காண்பித்து இருக்கக் கூடும் என்று கூறுகின்றனர்.
அரசுக்கு உள்நோக்கமும் இல்லை
அரசுக்கும், வருமான வரித் துறைக்கும் விவசாயிகள் மீது குற்றம் சாட்ட எந்த உள்நோக்கமும் இல்லை என்றும், வரி ஏய்ப்பு செய்வதற்காக விவசாயம் மூலம் பெற்ற வருவாயினை உயர்த்திக் காண்பிப்பது கண்டிக்கத்தக்கது என்று அந்த அதிகாரி தெரிவித்தார்.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ஈரான் விவகாரத்தில் புதிய குண்டை தூக்கி போட்ட டிரம்ப்!! என்னென்ன சொல்றாரு பாருங்க!!



Click it and Unblock the Notifications