இந்தியாவில் நீண்ட காலமாக அமலுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்பட்டு வந்த ஜிஎஸ்டி 2017 ஜூலை 1 முதல் அமலுக்கு வந்தது.
ஜிஎஸ்டி அமலுக்கு வந்த பிறகு தங்கம் மற்றும் நகை கடைகளில் தங்கம் வாங்கும் போது பரிவர்த்தனை முறையில் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.
தங்கம் மீது ஜிஎஸ்டி
நீண்ட விவாதங்களுக்குப் பிறகு இந்தியாவில் தங்கம் மீது ஜிஎஸ்டி வரி 3 சதவீதமாக அறிவிக்கப்பட்டு அமலில் உள்ளது.
மக்களின் எண்ணங்கள்
மேலே கூறிய அந்த ஜிஎஸ்டி விகிதத்தினால் பலருக்கு விலை உயர்ந்துவிட்டது, பட்ஜெட் அதிகரித்துவிட்டது என்று கூறி வரும் அதே வேலையில் சிலர் விலை குறைந்துள்ளதாகவும் மகிழ்ச்சியில் உள்ளனர்.
ஜிஎஸ்டிக்கு முன்
ஜிஎஸ்டிக்கு முன்பு தங்கம் வாங்கும் போது 10 சதவீதம் சுங்க வரி, 1 சதவீதம் கலால் வரி மற்றும் 1.2 சதவீதம் வாட் வரி விதிக்கப்பட்டு இருந்தது.
இவற்றை மொத்தமாகச் சேர்த்தால் 12.43 சதவீதம் வரியை மக்கள் தங்கம் வாங்கும் போது செலுத்தி வந்தனர். இதுவே தங்க கட்டிகளாக வாங்கும் போது 11.32 சதவீத வரி வசூலிக்கபட்டு வந்தது.
ஜிஎஸ்டிக்குப் பின்
ஜிஎஸ்டி அமலுக்கு வந்த பிறகு ஜிஎஸ்டி 3 சதவீதம், 18 சதவீதம் செய்கூலி ஆகும். இவ்வளவு வரி இருந்தாலும் நாம் 15.67 சதவீதம் வரி செலுத்தி தங்க நகை வாங்கி வருகின்றோம். இதில் 10 சதவீத சுங்க வரியும் அடங்கும்.
யாருக்குக் கூடுதல் செலவு?
இவற்றைப் பார்க்கும் போது ஆபரணத் தங்க நகை வாங்கும் போது 3.24 சதவீதம் வரை கூடுதல் செலவு ஆகின்றது. இதுவே தங்க கட்டிகளாக வாங்கினால் 198 சதவீதம் வரி குறையும்.
மதிப்பு குறையாத சொத்து
ஜிஎஸ்டி அமலுக்கு வந்ததால் என்ன தான் மக்களுக்குப் பாதிப்பு என்றாலும் தங்க என்பது விலை உயர்ந்த சொத்தாகவே உள்ளது என்பதில் மாற்றுக் கருத்து ஏதும் இல்லை.


Click it and Unblock the Notifications