இனி 50,000 ரூபாய்க்கும் அதிகமாகத் தங்கம் நகை வாங்கும் போது பான் எண்ணைச் சமர்ப்பிக்க வேண்டும் என்று இருந்த கட்டுப்பாட்டை வெள்ளிக்கிழமை மத்திய அரசு நீக்கியுள்ளது.
மேலும் நகை வணிகர்களும் 50,000 ரூபாய்க்கு அதிகமாக வாடிக்கையாளர்கள் தங்க நகை வாங்கும் போது அவர்களின் விவரங்களைச் சமரிப்பிக்க வேண்டிய அவசியம் இல்லை.
தற்போது உள்ள கட்டுப்பாடு
பணமோசடி தடுப்புச் சட்டமான (பிஎம்எல்ஏ) 2002 இன் கீழ் நியமிக்கப்பட்ட வணிக மற்றும் தொழில்களில் ஈடுபட்டுள்ள நபர்களாக விலைமதிப்பற்ற உலோகங்கள், விலையுயர்ந்த கற்கள் மற்றும் இதர உயர் மதிப்பிலான பொருட்கள் ஒரு நிதியாண்டில் 2 கோடி ரூபாய் வருமானம் ஈட்டியுள்ளன என்றால் குறிப்பிட்ட வரம்புகளுக்கு மேலாகப் பரிவர்த்தனைகளைப் பற்றிச் சம்பந்தப்பட்ட பிஎம்எல்ஏ அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.
அதிகக் கண்காணிப்புக்குட்பட்டது
மத்திய அரசின் இந்தப் புதிய கட்டுப்படிகள் தளர்ப்பு குறித்து முழுமையாக அறிவிப்புகள் விரைவில் வெளிவரும் என்றும் இதன் காரணமாக, இந்தத் துறை இன்னும் அதிகமான கண்காணிப்புக்கு உட்பட்டுள்ளது என்பதை அரசாங்கம் சுட்டிக் காட்டியுள்ளது.
வியாபாரம் சூடு பிடிக்கும்
ரூ.50,000-க்கும் அதிகமாகத் தங்க நகை வாங்கும் போது வாடிக்கையாளர்கள் ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டும் என்ற சட்டமும் நீக்கப்பட்டுள்ளது. எனவே ஜிஎஸ்டி அமலுக்கு வந்த பிறகு விற்பனை சரிந்து வந்த தங்க நகை வியாபாரம் சூடு பிடிக்கும் என்று வணிகர்கள் கூறுகின்றனர்.
தீபாவளி நேரத்தில் அரசு எடுத்த சரியான முடிவு
விழாக்கால நேரத்தில் மத்திய அரசு இந்த முடிவை எடுத்துள்ளதால் தங்கம் நகை வாங்குவதை இது ஊக்குவிக்கும்.


Click it and Unblock the Notifications