ஜிஎஸ்டிக்கு பின் ஷாப்பிங், ஹோட்டல்களில் இப்படியும் மோசடி நடக்கிறது. உஷாரா இருங்க..!

ஜிஎஸ்டி கவுன்சில் கடந்த வாரம் நடத்திய முக்கியக் கூட்டத்தின் முடிவில் பல பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரி குறைத்தது. இதில் மக்கள் தொடர்ந்து வாங்கும் டூத்பேஸ்டு, சாக்லேட், ஷாப்பூ மற்றும் சேவிங் கிரீம் ஆகிய பல பொருட்களும் அடங்கியுள்ளது.

இந்நிலையில் புதிய வரி விதிப்புகள் புதன்கிழமை முதல் நடைமுறைக்கு வரும் காரணத்தால் மக்கள் ஷாப்பிங் செல்லும்போது கூடுதலாகக் கவனிக்க வேண்டும். ஏன் தெரியுமா..?

மோசடிகள்

மோசடிகள்

மத்திய அரசு 20,000 கோடி ரூபாய் வருவாய் இழப்பிற்குப் பின் 28 சதவீத வரிப் பட்டியலில் இருக்கும் பொருட்களை 18 சதவீதம் வரியில் கொண்டு வந்துள்ளது. இந்நிலையில் பல கடைக்காரர்கள் பெரிய அளவில் மோசடி செய்து வருகிறார்கள்.

வரி பயன்

வரி பயன்

மத்திய அரசு வரியை உயர்த்திய பின்பு ஹோட்டல்கள், மளிகைப்பொருட்கள் என அனைத்துப் பொருட்கள் மீதான விலையை உடனடியாக உயர்த்திய நிலையில், தற்போது அரசு அறிவித்துள்ள வரிப் பயன்களை மக்களுக்கு அளிக்காமல் விற்பனையாளர்கள் பல ஏமாற்று வேலைகளைச் செய்து கூடுதலான பணத்தைப் பெறுகிறார்கள்.

விலை உயர்வு

விலை உயர்வு

வரி உயர்வின் மூலம் கூடுதல் வருமானத்தைப் பெற்று வந்த உணவகங்கள், வரி குறைப்பிற்குப் பின் வருமானத்தை இழக்க விரும்பவில்லை. அதனால் பொருட்களின் விலையை உயர்த்தி வருமானத்தை ஈடுசெய்து வருகிறது.

இத்தகைய இடங்களில் நீங்கள் உஷாரா இருக்க வேண்டும்.

 

ஜிஎஸ்டி வரி மாற்றம்

ஜிஎஸ்டி வரி மாற்றம்

ஜிஎஸ்டி அமலாக்கத்திற்குப் பின் 28 சதவீத வரிப் பட்டியலில் இருக்கும் பொருட்களின் விற்பனை அதிகளவில் சரிந்து மத்திய அரசுக்கு சுமார் 20,000 கோடி ரூபாய் நஷ்டம் அடைந்துள்ளது. இதன் காரணமாக 23வது ஜிஎஸ்டி கூட்டத்தில் இப்பட்டியலில் இருக்கும் சுமார் 175க்கும் அதிகமான பொருட்கள் மீதான வரியை 18 சதவீத வரிப் பட்டியலில் சேர்த்துள்ளது.

அரசு உத்தரவு

அரசு உத்தரவு

இந்நிலையில் இந்த வரிக் குறைப்பை அரசு உடனடியாக அமலுக்குக் கொண்டு வர வேண்டும் என உத்தரவிட்டுள்ள நிலையில், உற்பத்தியாளர்கள் பலர் பொருட்களை விற்பனை செய்யும் நிறுவனங்களுக்குப் பொருட்கள் மீது புதிய விலைக்கான ஸ்டிக்கரை ஒட்டி உடனடியாக விலை குறைப்பை மக்களுக்குக் கொடுக்க அறிவுறுத்தியுள்ளது.

 வாட்ச் மற்றும் பிரின்டர்

வாட்ச் மற்றும் பிரின்டர்

பல முன்னணி நிறுவனங்கள் புதிய விலை குறைப்புக் குறித்துச் செய்தித்தாள்களில் விளம்பரம் செய்து வாடிக்கையாளர்களை ஈர்த்து வருகிறது.

பாதிப்பு

பாதிப்பு

தற்போது பிரச்சனை என்னவென்றால் பொருட்களை அதிகளவில் இருப்பு வைத்துள்ள ஏஜென்டுகள் மற்றும் பெரிய கடைகள் அனைத்தும் ஸ்டிக்கர் ஒட்டுவதில் மிகப்பெரிய பாதிப்பை சந்தித்து வருகிறது.

சில கடைகள் ஏமாற்றவும் செய்கிறது.

 

புதன்கிழமை

புதன்கிழமை

இதனால் பல விற்பனையாளர், அரசு மற்றும் உற்பத்தி நிறுவனங்களின் உத்தரவை ஏற்று விலையைக் குறைத்துள்ளது.

ஜிஎஸ்டி வரியில் செய்யப்பட்டுள்ள புதிய மாற்றங்கள் அனைத்தும் புதன்கிழமை நடைமுறைக்கு வருகிறது. ஆகவே இன்று மளிகைக் கடை அல்லது ஷாப்பிங், ஹோட்டல் செல்லும்போது புதிய வரிப் பலனை நீங்கள் பெறுகிறீர்களா என்பதை உறுதி செய்துகொள்ளுங்கள்.

 

ஹோட்டல்

ஹோட்டல்

ஹோட்டல்களில் தற்போது 12 மற்றும் 18 சதவீத வரி வசூலிக்கப்பட்டு வரும் நிலையில் வெள்ளிக்கிழமை அறிவிப்பின் மூலம் ஏசி மற்றும் ஏசி இல்லாத உணவகங்களில் இனி 5 சதவீதம் வரி மட்டுமே வசூலிக்கப்படும்.

உணவைக் கொண்டு செல்லும் உணவகங்கள், 7,500க்கும் அதிகமான கட்டணம் வசூல் செய்யும் ஹோட்டல் உணவகங்களிலும் 5 சதவீத வரி மட்டுமே விதிக்கப்பட உள்ளது.

 

மதுபானம் உடன் ஹோட்டல்

மதுபானம் உடன் ஹோட்டல்

மதுபான வழங்கும் ஹோட்டல்களில் ஏசி இருந்தால் 18 சதவீதமும், ஏசி இல்லை என்றால் 12 சதவீதம் வரி விதிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது 7,500க்கும் அதிகமான கட்டணம் வசூல் செய்யும் ஹோட்டல்களில் இருக்கும் உணவகங்கள் மற்றும் அவுட்டோர் கேட்டரிங் செய்யும் நிறுவனங்களில் 18 சதவீதம் வரி தொடரும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

 50 பொருட்கள் மட்டுமே

50 பொருட்கள் மட்டுமே

இனி ஜிஎஸ்டி வரி அமைப்பின் 28 சதவீத வரியின் கீழ் 4 பிரிவைச் சேர்ந்த பொருட்கள் மட்டுமே இருக்கும்.

1. ஆடம்பர பொருட்கள்
2 கேடு விளைவிக்கக் கூடிய பொருட்கள்
3. ஆட்டோமொபைல் மற்றும் அதன் உதிரிப் பாகங்கள்
4. வொயிட் கூட்ஸ் ( பிரிட்ஜ், வாஷிங் மெஷின் போன்றவை)

 

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+