பிட்காயின் முதலீட்டாளர்களுக்கு நிதியமைச்சகத்தின் எச்சரிக்கை.. உஷாரா இருங்க..!

அமெரிக்கா, ஐரோப்பா நாடுகளைத் தாண்டி தற்போது பிட்காயின், கிரிப்டோகரன்சி மீதான தாக்கம் இந்தியாவில் அதிகரித்துள்ளது. மேலும் இந்திய வரி அமைப்பில் கிரிப்டோகரன்சி மீதான வருமானத்திற்கான தனிப்பட்ட வரி ஏதும் அறிவிக்காத நிலையிலும் பல ஆயிரக்கணக்கானோர் பிட்காயின், லைட்காயின் போன்ற முன்னணி கிரிப்ரோகரன்சி மீது முதலீடு செய்து வருகின்றனர்.

மத்திய அரசு இதுகுறித்துக் கட்டுப்பாடுகள், வரி விபரங்கள் என எதுவும் தெரிவிக்காத நிலையில் முதலீட்டாளர்கள் சற்று சந்தேகத்துடனும், பயத்துடனும் முதலீடு செய்து வரும் இத்தகைய சூழ்நிலையில், நிதியமைக்கம் முக்கியமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

போலித்திட்டம்

போலித்திட்டம்

பிட்காயின் மதிப்பில் 2017ஆம் ஏற்பட்ட திடீர் உயர்வு இந்திய முதலீட்டாளர்களை மட்டும் அல்ல சர்வதேச முதலீட்டாளர்களையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

உண்மையாகக் கூற வேண்டும் என்றால், பிட்காயின் உட்பட அனைத்தும் கிரிப்ரோகரன்சியும் போலி திட்டங்களாக இருக்கும் எனக் கருத்து நிலவுகிறது.

 

நிதியமைச்சகம்

நிதியமைச்சகம்

இந்நிலையில் வெள்ளிக்கிழமை நிதியமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், விர்ச்சுவல் கரன்சி எனக் கருதப்படும் பிட்காயின் உட்பட அனைத்து கிரிப்டோகரன்சிக்கு உள்ளார்ந்த மதிப்பு ஏதுமில்லை, மேலும் இது எவ்விதமான சொத்து மதிப்பீட்டு அடிப்படையில் அதன் மதிப்பும் நிர்ணயம் செய்யப்படவில்லை.

இதன் மதிப்பு தேவையின் அடிப்படையில் உயர்ந்து வருகிறது. மேலும், இதன் மதிப்பு எப்போது வேண்டுமானாலும் மாறுபடலாம் என நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.

 

அரசு செயல்பாடுகள்

அரசு செயல்பாடுகள்

இந்நிலையில் தற்போது அரசு இதன் மீதான முதலீட்டுக்கு எந்த வகையில் பாதுகாப்பு அளிப்பது என்பதை ஆலோசனை செய்து வருகிறது.

3 பிரிவு

3 பிரிவு

கிரிப்டோகரன்சி பாதுகாப்பு வடிவத்தை அமைக்க நிதியமைச்சகம் தலைமையில் ரிசர்வ் வங்கி மற்றும் செபி இணைத்து இணையத் தாக்குதல் ஏற்படாத வகையில் மற்றும் நடைமுறை பிரச்சனைகளையும் சமாளிக்கும் அமைப்பு உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது.

விளக்கம்

விளக்கம்

நிதியமைச்சகம் தனது அறிக்கையில் எந்தக் கிரிப்டோகரன்சியும் அரசின் கட்டுப்பாட்டிலோ அல்லது அரசு அங்கிகரிக்கவோ செய்யவில்லை, இதனால் இதனை நாணயமாகப் பயன்படுத்த முடியாது என விளக்கம் அளித்துள்ளது.

எச்சரிக்கை

எச்சரிக்கை

கிரிப்டோகரன்சி வைத்துள்ளவர்களுக்கு ரிசர்வ் வங்கி டிசம்பர் 2013, பிப்ரவரி 2017, மற்றும் டிசம்பர் 2017 என 3 முறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

ரிஸ்க் உங்களுடையது

ரிஸ்க் உங்களுடையது

இதன் மூலம் நிதியமைச்சகம் கூறுவது என்வென்றால், பிட்காயில், லைட்காயின், எதிரம், ரிப்பிள் என எந்தக் கிரிப்டோகரன்சியில் முதலீடு செய்தும் அதற்கான முழுமையான ரிஸ்க் முதலீட்டாளர்களுடையது, இதற்கு அரசு எவ்விதமான பொறுப்பும் ஏற்காது எனவும் தெரிவித்துள்ளது.

டாட் காம் பபுள்

டாட் காம் பபுள்

90களின் பிற்பகுதியில் ஐடி துறை உச்சத்தில் இருக்கும்போது ஏற்பட்ட பாதிப்பும் யாராலும் மறந்திருக்க முடியாது. அதேபோலத்தான் தற்போது கிரிப்டோகரன்சி தொடர்ந்து உச்சத்தை அடைந்து வருகிறது.

இதிலும் டாட் காம் பபுள் போல் பபுள் வெடிக்கும் எனப் பல முன்னணி வர்த்தக அறிஞர்கள் கூறுகின்றனர். மறுப்புறம் சரிந்தாலும் மீண்டும் புதிய உச்சத்தைத் தொடும் எனவும் கூறுகின்றனர்.

 

 பிரச்சனை

பிரச்சனை

இந்நிலையில் மோசடி, திருட்டுகளைத் தடுக்கக் கிரிப்டோகரன்சி முதலீட்டாளர்கள் மகிவும் உஷார் இருக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர்.

மேலும் விர்ச்சுவல் கரன்சிகள் அனைத்தும் டிஜிட்டல் முறையில் சேமிக்கப்படுவதால் இது இணையத் திருட்டில் சிக்கிக்கொள்ளவும் முடியும் எனவும் நிதியமைச்சகம் எச்சரித்துள்ளது.

 

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+