மீண்டும் 2வது இடத்தைப் பிடித்தது எதிரம்.. ரிப்பிள் பின்னுக்குத் தள்ளப்பட்டது..!
2017ஆம் ஆண்டு உலகில் அனைவருக்கும் முக்கியமான முதலீடாகத் திகழ்ந்த கிரிப்டோகரன்சி முதலீடுகள் 2018ஆம் ஆண்டில் டாப் 5 இடத்தில் இருக்கும் விர்ச்சுவல் கரன்சிகள் சரிவைச் சந்தித்துள்ளது.

கடந்த ஒரு வாரமாக ரிப்பில் தொடர் சரிவை சந்தித்த நிலையில் முதலீட்டாளர்கள் அதிகளவில் எதிரம் மீது முதலீடு செய்யத் துவங்கினர், இதன் காரணமாக எதிரம் விலை 93,000 ரூபாய் வரையில் உயர்ந்துள்ளது.
இதன் மூலம் மொத்த சந்தை மதிப்பில் பிட்காயின் 250.38 பில்லியன் டாலர் உடன் முதல் இடத்திலும், எதிரம் 118.14 பில்லியன் டாலர் உடன் 2வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. இதன் பின் ரிப்பிள் 88.60 பில்லியன் டாலர் வரையில் சரிந்து 2வது இடத்தில் இருந்து 3வது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications