பிட்காயின், ரிப்பிள், எதிரம் ஆகிய பல்வேறு கிரிப்டோகரன்சிகளில் அதிகம் முதலீடு செய்யும் தென்கொரியாவில் அந்நாட்டு அரசு இதன் வர்த்தகத்திற்குத் தடை விதித்துள்ளது. இதன் காரணமாகச் சரிவதேச சந்தையில் பிட்காயின் உட்படப் பல மிகப்பெரிய சரிவை சந்தித்து முதலீட்டாளர்களைக் கவலையில் ஆழ்த்தியுள்ளது.
மசோதா
இந்நிலையில் தென்கொரியா அமைச்சகம் எக்ஸ்சேஞ்ச் வாயிலாகக் கிரிப்டோகரன்சி மீது வர்த்தகம் செய்யத் தடை விதிக்க மசோதா உருவாக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு நிதித்துறை அமைச்சர் பார்க் சங்-கீ தெரிவித்துள்ளார்.
கட்டுப்பாடுகள்
கொரிய அரசு டிச.28ஆம் தேதி இதற்காக அறிவிப்புகளை வெளியிட்டது மட்டும் அல்லாமல் இதுநாள் வரையில் அதன் வர்த்தகத்தைக் கட்டுப்படுத்தவும், ஒழுங்குமுறைப்படுத்தும் பணியிலும் ஈடுபட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் அரசின் இப்புதிய மசோதாவும் நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.
எதிர்ப்பு
அரசின் இந்த முடிவை எதிர்த்து, தென்கொரியா சமுக வலைத்தளத்தில் நடந்த எதிர்ப்புப் போராட்டத்தில் சுமார் 54,000 பேர் கையெழுத்திட்டுள்ளனர்.
சரிவு..
கடந்த ஒரு வாரத்தில் பிட்காயின் 17,712.40 டாலரில் இருந்து 13,259 டாலராகக் குறைந்தது. எதிரம் 1,384.64 டாலரில் இருந்து 1,157.29 டாலர் வரையில் சரிந்துள்ளது.


Click it and Unblock the Notifications